Posts

Showing posts from September, 2021

கதை பிறந்த கதை :

Image
இறைவன் மனிதனுக்கு அருளியது ..!   கதை பிறந்த கதை :                                             கதைத்தல்  என்பதற்குப்   பேசுதல் என்பது பொருளாகும். காது பெற்றதன் பயன் கேட்டு மகிழ்வதிலேயே  உள்ளது. திருவள்ளுவரும் கேட்டல் இன்பம் காணாத மக்களை மாக்கள் ( விலங்கு ) என்று சாடுகிறார். சிந்தனை ஊற்றெடுக்கச் செய்வது கதைகள்தான். அரசன் முதல் ஆண்டிவரை    உள்ளோரை அறிவாளியாக்குவதும் சீர்மிகு கதைகள் தான். மனிதர்களின் மனதை ஒருமுகப்படுத்தி  சிந்திக்க வைப்பன கதைகள் மட்டுமே. கதை கேட்டல் என்பதும் ஒரு யோகப்பயிற்சியே ஆகும்.                                                        கண்டவற்றோடு நமது கற்பனையும் சேரந்து பிறப்பதே கதையாகும். கதை சொல்லிகள்...

பத்தாம் வகுப்பு மாதிரித் தேர்வு செப்டெம்பர் 2021 விடைகள்

Image
 பத்தாம் வகுப்பு  - தமிழ் -  006.  மாதிரித் தேர்வு  செப்டெம்பர் 2021 விடைகள்  விடைக்குறிப்புகள்  பகுதி - அ                                   SET -1 1. பத்தி விடை                                                                                           5.  1. இ. திருமூலர்  2. ஆ. நீண்ட நாள் வாழ  விரும்புவர்  3. இ. பசித்துப் புசி  4. அ. உணவு  5. ஈ. கொழுப்புச்                                            2. பத்தி விடை             ...

ஐவகை இலக்கணம்

Image
    தமிழ்  ஐவகை இலக்கணம்  1. எழுத்து  இலக்கணம் எழுத்துகளின்  நான்கு வகைகள்  - அவற்றின்  தொகைகள்.   2. சொல்லி லக்கணம் இலக்கணவகைச்  சொற்கள் -   இலக்கிய வகைச்   சொற்கள். 3. பொருள்  இலக்கணம் அகப்பொருள்    இலக்கணம் - புறப்பொருள் இலக்கணம். 4. யாப்பு  இலக்கணம்   எழுத்து , அசை, சீர், தளை ,  அடி , தொடை  வகைகள் பற்றி விளக்குதல். 5. அணி  இலக்கணம். பொருளை எளிதாகவும் , அழகாகவும்  விளக்க உதவும் உவமை மற்றும் உருவக அணிகள் பற்றி விளக்குதல். 1.  எழுத்து  இலக்கணம்   (   ORTHOGRAPHY  -  ON LETTERS ) எழுத்து  எழுதப்படுவது  எழுத்து எனப்படும் . மொழியப்படுவது  மொழி ( சொல் ) எனப்படும். மொழிக்கு முதற்காரணமாகவும் , செவியால் கேட்கப்படும் ஒலி  அணுக்கூட்டத்தின் காரியமாகவும் தோன்றுகிற ஒலி  எழுத்து எனப்படும்.   எழுத்து வடிவங்கள்  எழுத்தின் வடிவங்கள் இரண்டாகும்.  அவை  1. ஒலி வடிவம்  - ஒலிக்கப்படுவது.   ...

தினமும் திவ்ய நாமம் சொல்லுங்கள்...!! திருமால் போற்றி

Image
  திருமால் போற்றி தினமும் திவ்ய  நாமம் சொல்லுங்கள்...!! சுகபோகங்களை  நாளும்  அள்ளுங்கள்  ...!! அன்புச்செல்வன் பத்து  அவதாரங்கள் மேதினியில் மெத்தப்பெற்றவனே  பரந்தாமனே  பாற்கடல் வாசனே  பக்தரின் நேசனே  பாரினைக்  காத்திடும் பரமபாதனே பண்ணொலியானே  பாரினி ல்  மாந்தருக்குச்  செல்வம்பல சேர்த்துத்தருவோனே பின்னிடும் பிழைகளைப்  பின்தள்ளி  அருள்வோனே  பிள்ளையான மக்களெல்லாம்  பேர்பெற  நிற்போனே  பீடுடைய   மாதத்தின்  பின்னின்று ஒளிர்வோனே  புண்ணிய நதிகளின்  புகலிடம் ஆனவனே  புத்தொளிர்  வாழ்வினை  நாளும் நல்குவோனே  பூமித்தாயின் தலைமகன் என்று  ஆள்பவனே  பெருமாளே என்போர்க்குப்   பெருமைகள்  சேர்ப்பவனே  பேராயிரம் கொண்டவனே பேரண்ட  நாயகனே  பைங்கடல் தன்னில் பாம்பணை  அமர்ந்தவனே  பொன்மகள் தன்னோடும் பொழுதும் அருள்பவன்  போகங்கள் புதுக்கிடும்  புன்னகை  அரசனே    பெளர்ணமியாய்  வாழ்வு  ஒளிர பொன்பொ...

தினமும் திவ்ய நாமம் சொல்லுங்கள்...!!

Image
திருமால் போற்றி தினமும் திவ்ய  நாமம் சொல்லுங்கள்...!! சுகபோகங்களை  தினமும்  அள்ளுங்கள் ...!!   பத்து  அவதாரங்கள் மேதினியில் மெத்தப்பெற்றவனே  போற்றி பரந்தாமனே  பாற்கடல் வாசனே  பக்தரின் நேசனே  போற்றி பாரினைக்  காத்திடும் பரமபாதனே பண்ணொலியானே  போற்றி பாரின் மாந்தருக்கு செல்வம்பல சேர்த்துத்தருவோனே  போற்றி பின்னிடும் பிழைகளைப்  பின்தள்ளி  அருள்வோனே  போற்றி பிள்ளையான மக்களெல்லாம்  பேர்பெற  நிற்போனே  போற்றி பீடுடைய   மாதத்தின்  பின்னின்று ஒளிர்வோனே  போற்றி புண்ணிய நதிகளின்  புகலிடம் ஆனவனே  போற்றி புத்தொளிர்  வாழ்வினை  நாளும் நல்குவோனே  போற்றி பூமித்தாயின் தலைமகன் என்று  ஆள்பவனே  போற்றி பெருமாளே என்றழைப்போருக்குப்   பெருமைதருவோனே    போற்றி பேராயிரம் கொண்டவனே பேரண்ட  நாயகனே  போற்றி பைங்கடல் தன்னில் பாம்பணை  துயில்பவனே  போற்றி பொன்மகள் தன்னோடு பொழுதும் அருள்பவன்  போற்றி போகங்கள் புதுக்கிடும்  புன்னகை...

திண்ணைகள் ...2021

Image
 திண்ணைகள்  தடம் பதிக்க முயன்றாலும்  தடுமாற்றங்களால்  தினந்தினம்  தள்ளித்தான்   போகிறது வெற்றியின் நாட்கள்  ...........! மேடுகளில் மூச்சிறைக்கும்  மாடுகளைப்போல  மூக்கணாங்கயிறு  இல்லாமலேயே  மூச்சுமுட்டுகிறது  இளைப்பாற இடம்  தேடுகிறது  மனம் .......! சுமைகளால் அல்ல   சுற்றுப்புறம் தரும்   சுள்ளெறும்புக்கடிகளால் ....! எத்தனை பக்குவமாய்   கூடுகளை அமைத்தாலும்  குடியிருப்பு என்னவோ  திறந்தவெளிதான் ..! வானமே எல்லை என்றாலும்  வாழ்ந்து பார்ப்பதுஎன்னவோ திண்ணைகளில் தானே ..! தேடினாலும் கிடைக்காத  யோகாசனக்கூடம்  அமுத நாட்கள் அங்கு தானே ஆரம்பமாகிறது..! திண்ணைகள் வெறும் திண்ணைகள் அல்ல .., தாத்தாவின் தனித்துவத் தர்மச்சத்திரம்,  பாட்டியின் பல்லாங்குழி மண்டபம் , அத்தையின் ஆய்வு  அரங்கம் , தெருக்கூத்தின்  வசந்தமண்டபம், குடும்ப மாந்தர்களின் மாநாட்டுக்கூடம் , விருந்தாளிகளின்   அந்தப்புற  மாளிகை , ஊர்மக்களின் பட்டிமன்றக்கூடம் , எத்தனை இன்னல்கள் வந்...
  கோலப்பெருமாள்        செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,   எண்-: 815 ,    கோலப்பெ ருமாள் பள்ளித்தெரு   ,    சென்னை  - 600106.   வகுப்பு :     எட்டாம்                      தமிழ்த்தேர்வு                             மதிப்பெண் : 40. பயிற்சித்தாள்  நாள் :   -----------------------                                                      கிழமை :  ------------------------- அ.  நிரப்புக                                                                ...

நூல் வெளியீட்டு விழா - 3

Image
  நூல் வெளியீட்டு  விழா  - 3. வாழ்வு சிறக்க வழி காட்டும் பதிகங்கள்  நாள் : 11.09.2021                                                                                                  சனிக்கிழமை  நேரம் : காலை 12 மணி   வெளியிடுபவர்               : கவி. கர்ணன்                                                                துணைத் தலைவர்                                        ...