திண்ணைகள் ...2021
திண்ணைகள்
தடம் பதிக்க முயன்றாலும்
தடுமாற்றங்களால் தினந்தினம்
தள்ளித்தான் போகிறது வெற்றியின் நாட்கள் ...........!
மேடுகளில் மூச்சிறைக்கும்
மாடுகளைப்போல
மூக்கணாங்கயிறு இல்லாமலேயே
மூச்சுமுட்டுகிறது இளைப்பாற இடம் தேடுகிறது மனம் .......!
சுமைகளால் அல்ல சுற்றுப்புறம் தரும்
சுள்ளெறும்புக்கடிகளால் ....!
எத்தனை பக்குவமாய் கூடுகளை அமைத்தாலும்
குடியிருப்பு என்னவோ திறந்தவெளிதான் ..!
வானமே எல்லை என்றாலும்
வாழ்ந்து பார்ப்பதுஎன்னவோ திண்ணைகளில் தானே ..!
தேடினாலும் கிடைக்காத யோகாசனக்கூடம்
அமுத நாட்கள் அங்கு தானே ஆரம்பமாகிறது..!
திண்ணைகள் வெறும் திண்ணைகள் அல்ல ..,
தாத்தாவின் தனித்துவத் தர்மச்சத்திரம்,
பாட்டியின் பல்லாங்குழி மண்டபம் ,
அத்தையின் ஆய்வு அரங்கம் ,
தெருக்கூத்தின் வசந்தமண்டபம்,
குடும்ப மாந்தர்களின் மாநாட்டுக்கூடம் ,
விருந்தாளிகளின் அந்தப்புற மாளிகை ,
ஊர்மக்களின் பட்டிமன்றக்கூடம் ,
எத்தனை இன்னல்கள் வந்தபோதும்
அத்தனைக்கும் தீர்வு தரும்
அழகிய திறந்தவெளித் திண்ணைகள் ..!
சுமைகள் மறந்தே நமை உறங்க வைக்கும்
தெருவை ஒட்டிச் சீராய் அமைந்த
தென்றலில் ஆடாத அழகிய தொட்டில்கள் ..!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
ponanbu
Comments
Post a Comment