தினமும் திவ்ய நாமம் சொல்லுங்கள்...!! திருமால் போற்றி
திருமால் போற்றி
தினமும் திவ்ய நாமம் சொல்லுங்கள்...!!
சுகபோகங்களை நாளும் அள்ளுங்கள் ...!!
அன்புச்செல்வன்
பரந்தாமனே பாற்கடல் வாசனே பக்தரின் நேசனே
பாரினைக் காத்திடும் பரமபாதனே பண்ணொலியானே
பாரினில் மாந்தருக்குச் செல்வம்பல சேர்த்துத்தருவோனே
பின்னிடும் பிழைகளைப் பின்தள்ளி அருள்வோனே
பிள்ளையான மக்களெல்லாம் பேர்பெற நிற்போனே
பீடுடைய மாதத்தின் பின்னின்று ஒளிர்வோனே
புண்ணிய நதிகளின் புகலிடம் ஆனவனே
புத்தொளிர் வாழ்வினை நாளும் நல்குவோனே
பூமித்தாயின் தலைமகன் என்று ஆள்பவனே
பெருமாளே என்போர்க்குப் பெருமைகள் சேர்ப்பவனே
பேராயிரம் கொண்டவனே பேரண்ட நாயகனே
பைங்கடல் தன்னில் பாம்பணை அமர்ந்தவனே
பொன்மகள் தன்னோடும் பொழுதும் அருள்பவன்
போகங்கள் புதுக்கிடும் புன்னகை அரசனே
பெளர்ணமியாய் வாழ்வு ஒளிர பொன்பொருள் தருபவனே
அன்பின் அன்பன்...!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
ponanbu


Comments
Post a Comment