தினமும் திவ்ய நாமம் சொல்லுங்கள்...!!



திருமால் போற்றி


தினமும் திவ்ய  நாமம் சொல்லுங்கள்...!!


சுகபோகங்களை  தினமும்  அள்ளுங்கள் ...!!




 பத்து  அவதாரங்கள் மேதினியில் மெத்தப்பெற்றவனே போற்றி

பரந்தாமனே  பாற்கடல் வாசனே  பக்தரின் நேசனே போற்றி

பாரினைக்  காத்திடும் பரமபாதனே பண்ணொலியானே போற்றி

பாரின் மாந்தருக்கு செல்வம்பல சேர்த்துத்தருவோனே போற்றி

பின்னிடும் பிழைகளைப்  பின்தள்ளி  அருள்வோனே போற்றி

பிள்ளையான மக்களெல்லாம்  பேர்பெற  நிற்போனே போற்றி

பீடுடைய   மாதத்தின்  பின்னின்று ஒளிர்வோனே போற்றி

புண்ணிய நதிகளின்  புகலிடம் ஆனவனே போற்றி

புத்தொளிர்  வாழ்வினை  நாளும் நல்குவோனே போற்றி

பூமித்தாயின் தலைமகன் என்று  ஆள்பவனே போற்றி

பெருமாளே என்றழைப்போருக்குப்   பெருமைதருவோனே   போற்றி

பேராயிரம் கொண்டவனே பேரண்ட  நாயகனே போற்றி

பைங்கடல் தன்னில் பாம்பணை  துயில்பவனே போற்றி

பொன்மகள் தன்னோடு பொழுதும் அருள்பவன் போற்றி

போகங்கள் புதுக்கிடும்  புன்னகை  அரசனே   போற்றி

பெளர்ணமியாய்  ஒளிர்ந்து புவனம் காப்பவனே போற்றி.!!



உங்கள் அன்பின் அன்பன்...!

 
வாரூர்ச்செல்வன் 


வாழ்க   வளமுடன் ..!  வாழ்க  வையகம் ..!


தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 


ponanbu


Comments

Popular posts from this blog

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

10.09.2025 STD X ANSWER KEY FOR MCQ

மாதிரித்தேர்வு - 1 - டிசம்பர் 2025. ( இயல் 4,5,6 )