கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , சென்னை - 600106.
வகுப்பு : எட்டாம் தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40.
பயிற்சித்தாள்
நாள் : ----------------------- கிழமை : -------------------------
அ. நிரப்புக மதிப்பெண்கள் - 4.
1. வினைமுற்று ---------- வகைப்படும் .
2. ஏவல் ----------- ஒருமை , பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.
3.பொருள்முடிவு பெறாத எச்சவினை , பெயரைக்கொண்டு முடிந்தால் அது, ------------.
4. ஒரு வினைமுற்று , எச்சப்பொருளைத் தந்து மற்றொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால் அது,----------- ஆகும்.
5. காலத்தையும் , செயலையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ----------------------.
6. ---------------- வினைமுற்று முன்னிலையில் மட்டுமே வரும்.
ஆ. சான்றுதருக: மதிப்பெண்கள் - 3.
1. வினைமுற்று:
2. குறிப்புப் பெயரெச்சம் :
3.வினையெச்சம்:
4. பெயரெச்சம்:
5. தெரிநிலைப்பெயரெச்சம்:
6. வியங்கோள் வினைமுற்று :
இ . நகவளைவில் குறித்தவாறு செய்க. மதிப்பெண்கள் - 3.
1.பாடுகின்ற பாடல் ( எதிர் காலப்பெயரெச்சம் ஆக்குக )
2.மெல்ல நடந்தான் ( எவ்வகை எச்சம் என எழுது )
3. வாழ்க..! வாழ்க..! ( எவ்வகை வியங்கோள்வினைமுற்று என்று எழுதுக.)
4. அவன் பொன்னன் , எவன் ஆதிரையான் ( வினைமுற்றின் வகை யாது )
5. கடைக்குப் போனான் , பாடம் படித்தான் ( ஏவல்வினைமுற்று ஆக்குக )
6. விழுந்து எழுந்தான் ( முற்றெச்சம் ஆகுக )
ஈ. செய்யுள் பாடல் வினா விடை: மதிப்பெண்கள் - 5
காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக்கும்பிட்டு
காலன் ஓடிப்போவானே....!
கூழையே நீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா
ஏழையே நீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா....!
1.எப்போது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் ?
2. காலன் என்ன செய்வான் ?
3. ஏழையாக இருந்தாலும் எதனைச் செய்ய வேண்டும்.?
4. பாடல் இடம்பெற்ற நூல் எது ?
5. வருமுன் காப்போம் பாடலின் ஆசிரியர் யார்..?
உ . செய்யுள் வினா விடை: மதிப்பெண் - 5
1. உள்ளத்தின் நோய்தீர்க்கும் மூன்று மருந்துகள் எவை ?
2. அதிகமாக உணவு உண்டால் என்னவாகும் ?
3. ஓடைநீரானது யார் வெட்கப்படும்படியாக ஓடுகின்றது?
4. , மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால்
அல்லாமல் ------------ வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும் .
5. விலங்கொடு மக்கள் அனையர் ------------------
கற்றாரோடு ஏனை யவர்.
ஊ. உரைநடை பத்தி வினா விடை: மதிப்பெண் - 5.
அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழர். தமிழர்கள் உடல் பற்றிய அறிவையும் , மருத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் பெற்றிருந்தனர். உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமெக்கென மரபு சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வந்தவர்கள் தமிழர்கள் . நாம் நோய் வராமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதே சிறந்ததாகும் .
1. நாம் உண்ணும் உணவே எதுவாக உள்ளது ?
எது ?
3. உடல் நலம் காக்க எத்தனை வகையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும் ?
4. உலகில் நோய் நீக்க எவை உள்ளன ?
5. மருந்து பற்றி நன்கு அறிந்தோர் யார் ?
1. நோய்கள் பெருக்கக்காரணம் ------------------ ஆகும்.
3. மருந்தாகப் பயன்பட்டவை எவை.?
4. ஆங்கில மருத்துவத்தினால் மனிதனுக்கு ஏற்படும் விளைவு
என்ன ?
6. உங்களின் நகரங்களில் அமைதியான -------------- எதுவுமில்லை .
7. எங்கள் மக்கள் இந்தப்பூமியை எப்பொழுதும் ------------------- இல்லை .
8. நாங்கள் வாழும் நிலமானது --------------- மதிக்கக்கூடிய
ஒன்றாகும் .
ஏ. துணைப்பாட வினா விடைகள் : மதிப்பெண் --7.
1.காடர்கள் என்போர் யார் ?
3. ஒவ்வொரு நாளும் அச்சத்திலேயே வாழ்ந்து வருபவர் யார் ?
4. -------------- பதுங்கி இருந்த இடத்தில் முகர்ந்து பார்த்த போது ,
புனுகுப்பூனையின் நாற்றமே அடித்தது.
6. கதை மூலமாக நாம் உணரும் நீதி என்ன ?
7. வெட்டுக்கிளியும் சருகுமானும் என்பது ------------------------------- தங்களின் பேரன் பேத்திகளுக்குச் சொல்லிவந்த கதையாகும்.
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
அன்புடன்
ponanbu
Comments
Post a Comment