NEWS LETTER-2026-APL


செய்தியறிக்கை 

 

 54 ஆம் ஆண்டு விழா மற்றும் ஜென்மாஷ்டமி விழா. 

 

 இடம் : 

  துவாரகாதாஸ் கோவர்தன்தாஸ் கல்லூரி வளாகம் -துவாரகா அரங்கம்- அரும்பாக்கம்.  

 

 நாள்: 

 2026 - செப்டம்பர் 2 & 3 ஆம் நாள்.

 

 விழா: 

சென்னை - அரும்பாக்கம் கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளியின்   54 ஆம் ஆண்டு விழா மற்றும் ஜென்மாஷ்டமி விழா. 

 

 

 சென்னையின் தலைசிறந்த பள்ளியான கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண்  மேல்நிலைப் பள்ளியின் 54 ஆம் ஆண்டு விழா மற்றும் ஜென்மாஷ்டமி விழா செப்டம்பர் 2ஆம் நாளன்று  துவாரகாதாஸ் கோவர்தன்தாஸ்  கல்லூரியின், துவாரகா அரங்கில் மாலை 3 மணி அளவில்  இனிதே தொடங்கின.

 

 சிறப்புச்  சொற்பொழிவாளர்  சொல்லமுதச்செல்வி ஸ்ரீமதி ஹரிப்பிரியா தேவநாதன் அவர்கள் கண்ணனின் அவதாரங்களின் நோக்கம் பெருமைகள் குறித்து விளக்கினார்கள். சொர்க்கம் செல்வோர்க்கு  மீண்டும் பிறப்பு உண்டு. இராமபிரானின் தந்தையான தசரதன்கூட  சொர்க்கத்திற்குத் தான்  சென்றான். ஆனால், ததி  பாண்டனும்  அவனது பானையும் மோட்சம் பெற்றனர்.  ஒழுக்கம், தர்மம் காப்போர் எப்போதும் மோட்சத்தையே  அடைவர்  என்றும் விளக்கினார். கண்ணபிரானின்  அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தனி கதைகளைப்  பின்னணியாகக் கொண்டவை  என்றும் விளக்கினார்கள். பக்திநெறியில்  செல்வதால் மட்டுமே அது வாய்க்கும் என்றும் எடுத்துரைத்தார்கள். ஒருவர் செய்கின்ற  பக்தி செய்வதால் வருகின்ற பலவித  நன்மைகளையும்  சுவைஞர்கள் அனைவரும் உணர்ந்து மகிழ்ந்தனர்.

 

 இரண்டாம் நாள் நிகழ்வு மாலை 4 மணி  அளவில்  துவாரகா அரங்கில் வரவேற்பு நடனத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்குத் தலையேற்றார் பார்ம் குரு நிர்வாகி மற்றும் முன்னணித் தலைமைப்  பயிற்சியாளர் பேரா . திருமிகு . M. சேஷசாய் அவர்கள். சிறப்பு விருந்தினராக விழாவிற்கு வருகை தந்தார்  கலா  ஆதனாவின் இயக்குநர்  திருமதி. டாக்டர். ரக்க்ஷா டி. ராகவன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். பள்ளியின் விழாத் தலைமை விருந்தினர்   மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பள்ளியின் நிர்வாகிகள்  இவ்விழாவில் சிறந்த  ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளையும், கல்வியில் சிறந்த மாணவர்கள், முழுவருகையைப்  பதிவு செய்த மாணவர்கள், நன்னடத்தையில் சிறந்த மாணவர்கள் என்று அனைவருக்கும்  பரிசுகளையும் , விருதுகளையும் வழங்கிப்  பாராட்டி மகிழ்ந்தார்கள்.

 

 தலைமை விருந்தினர் பேசுகையில் உறவுகளில்  எல்லாம் சிறந்த உறவு நட்பே. அதனை  விளக்குவதே கண்ணனின் திருவிளையாடல்கள் என்பதை மிக அழகாக மாணவர்கள் விரும்பும் வகையில் நகைச்சுவையோடு  வழங்கினார்கள்.   விழாவில் மாணவர்களின் பாட்டு, நடனம் , நாடகங்கள்  இடம்பெற்றன. இது பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. கண்ணனின் பெருமையைக்  கூறும் ஸ்ரீ  அனந்த பத்மநாப ஸ்வாமி  மகாத்மியம் எனும் நாடகத்தினை மாணவர்கள் அழகாக உயிரோட்டத்துடன் நடித்துக்காட்டினர்.  பக்தி மார்க்கத்தின் நன்மைகளையும் , இறைவனின் திருவிளையாடல்களையும் விளக்குவதாக அந்நாடகம் அமைந்திருந்தது.

 

கோலப்பெருமாள்  பள்ளியின் 54 ஆம் ஆண்டு விழா மற்றும் ஜென்மாஷ்டமி விழாக்கொண்டாட்டங்களில் இரண்டு நாட்களிலும் நிகழ்வுகளைப்  பள்ளியின்  தாளாளர் மற்றும் செயலர் திருமிகு. ஹித்தேஷ் கண்ணோடியா  அவர்களும்,   பள்ளியின் தலைமை நிர்வாகி  திருமிகு . கோபால்ஜி அகர்வால் அவர்களும் பள்ளி  இயக்குநர் . திருமதி மீனா மேத்தா அவர்களும் முதல்வர். திருமதி சிலம்புச்செல்வி அவர்களும் நிகழ்ச்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து,  நிகழ்ச்சிகள்  மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு  துணைநின்றனர்.  இருநாள் நிகழ்வுகளும் மாணவர்களின் கலை மற்றும் பல்வேறு  திறன்களையும்   வெளிக்கொணரும் வகையில்  மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. 

  பள்ளியின் 54 ஆம் ஆண்டு விழா மற்றும் ஜென்மாஷ்டமி  விழா  நிகழ்ச்சிகள்  செப்டம்பர் 3ஆம் நாளன்று மாலை எட்டு மணி அளவில் நாட்டுப்பண்ணுடன்  இனிதே நிறைவு பெற்றன.

 

 

 

APL2026SEP

  

Comments

Popular posts from this blog

மாதிரித்தேர்வு - 1 - டிசம்பர் 2025. ( இயல் 4,5,6 )

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

பருவத்தேர்வு II MARCH- 2024-25.