பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )
பத்தாம் வகுப்பு இயல் - 5.புதிய நம்பிக்கை - கமலாலயன்
( மொழிபெயர்ப்புக் கதை )
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
கறுப்பின மக்கள்
சிறுமியின் கடுங்சொல்
மிஸ் வில்சன்
மேரிஜேன்
முடிவுரை
முன்னுரை :
வரலாறுகளைப் பலரும் கற்கின்றனர். ஆனால் , சிலரோ வரலாற்றையே உருவாக்குகின்றனர் . கறுப்பினப் பெண்ணாகிய மேரிஜேன் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்தவர். அமெரிக்க நாட்டில் வாழ்ந்த விவசாயக் கூலியின் மகளாகப்பிறந்து , கல்வி எனும் ஏணியால் சிகரந்தொட்டவர். கமலாலயன் மொழிபெயர்த்துத் தந்துள்ள அவரது கதையினை இங்கு காண்போம்.
கறுப்பின மக்கள் :
அமெரிக்க நாட்டில் வாழ்ந்த விவசாயக் கூலிகள் , விடியலுக்கு முன்பாகவே பருத்திக் காடுகளுக்குச் சென்று சூரியன் மறையும் வரை உழைப்பவர்கள். அவர்கள் படிப்பறிவு சிறிதும் இல்லாதவர்கள். அங்கு பிறந்து வளர்ந்தவர் தான் மேரிஜேன். மிகவும் சுறுசுறுப்பான பெண். இரவு வேளைகளில் வானில் தோன்றும் விண்மீன்களோடு ஒப்பிட்டு இரசிப்பவள். அவளது அம்மா அடிக்கடி வெள்ளைக்காரர்களின் வீடுகளுக்குத் துணி துவைக்கவும் வேலைகள் பார்க்கவும் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும்போது மேரிஜேனையும் அழைத்துச் செல்வதுண்டு .
சிறுமியின் கடுங்சொல்:
வெள்ளைக்காரர்களின் வீடுகளுக்குள் முன்வாசல் வழியே செல்லக் கறுப்பின மக்களுக்கு அனுமதி கிடையாது. மேரியின் அம்மாவும் பின்வாசல் வழியாகவே அழித்துச் சென்றாள். வெள்ளைக்காரர்களின் துவைத்த துணிகளை ஒப்படைக்கவே அங்கு வந்திருந்தார்கள். வாசலில் அமர்ந்திருந்த மேரியை , வெள்ளைக்காரச் சிறுமிகள் விளையாட வீட்டின் உள்ளே அழைத்தனர். சிறிது தயக்கத்துடன் சென்றாள் மேரி. அங்கிருந்த அழகான பொம்மைக்களைக் கண்டு மகிழ்ந்தாள். மேசை மேலிருந்த அழகிய அட்டை போட்ட புத்தகத்தைப் புரட்டிப்பார்த்தாள் மேரி. " நீ அதை எடுக்கக் கூடாது. ஏனெனில் , உனக்குப் படிக்கத்தெரியாது " என்று கூறிய வெள்ளைக்காரச் சிறுமி , புத்தகத்தை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டாள். மேரி, அதனை எண்ணி மிகவும் வருந்தினாள்.
மேரிஜேன்:
மேரிக்கும் தானும் படிக்க வேண்டும் எனும் எண்ணம் நாளும் வளர்ந்தது. ஆசிரியை , மிஸ் வில்ஸனின் வருகை அவளை மகிழச்செய்தது. அப்பாவிடம் ஆடம் பிடித்து சிலேட்டையும் , பல்பத்தையும் வாங்கிக்கொண்டாள். மேயெஸ்வில்லிச் சென்று படிக்கத்தொடங்கினாள்.கறுப்பின மக்களின் சிறந்த கணக்காளராகவும் , படிப்பாளியாகவும் மாறினாள் மேரி . கல்வியாண்டின் முடிவில் " மேரிக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் " என்று எழுதப்பட்ட படத்தைப்பெற்றாள். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள் மேரி.
மிஸ் வில்சன் :
கல்வி கற்கும் ஆர்வம் அதிகரித்தது. குடும்பத்தின் வறுமைநிலை கல்விக்குத் தடையாக இருந்தது.ஆசிரியை மிஸ் வில்ஸன் மேற்படிப்பிற்குத் தேவையான உதவியை , ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியிடமிருந்து பெற்றுத்தந்தார். மேரி பெருமகிழ்வுடன் நகரத்திற்குச் சென்று படிக்கத் தயரானாள். கறுப்பின மக்கள் திரண்டு வந்து, மேரியை இரயிலேற்றி அனுப்பி வைத்தனர். கல்வி கற்று உயர்ந்தார் மெரிஜேன். கறுப்பின மக்களின் சமூக வளர்ச்சிக்காக பல அறக்கட்டளைகளை உருவாக்கினார். உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.
முடிவுரை:
கறுப்பின மக்கள் என்றாலே அடிமைகள் . உழைக்கப்பிறந்தவர்கள் என்னும் எண்ணத்தை உடைத்தெறிந்தார். கல்வியால் அனைவரும் உயரலாம் என்று உணர்த்தினார். மேரிஜேனின் வாழ்க்கை பலருக்கும் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை . கல்வி எல்லோரையும் உயர்த்தும் என்பதை இக்கதை வழியாகக் கண்டோம்.
Comments
Post a Comment