மாதிரித்தேர்வு - 1 - டிசம்பர் 2025. ( இயல் 4,5,6 )
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
மாதிரித்தேர்வு - 1 - டிசம்பர் 2025. ( இயல் 4,5,6 )
வகுப்பு : பத்தாம் தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40. கால அளவு ; 1.5 மணி .
பகுதி - அ
1. பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.
அறிவினைத்துலங்க வைக்கும் பல கருவிகளுள் நூல் நிலையமும் ஒன்றாகும். கணக்கற்ற அறிஞர்கள் தங்கள் எண்ணங்களை, கண்டுபிடுப்புகளை , நூல்களாக எழுதி உள்ளனர். அந்த நூல்களை எல்லாம் முறையாகவும் , வரிசையாகவும், அழகாகவும் அடுக்கி வைத்துப்பயன்படுத்தும் ஓர் இடமே நூலகமாகும். நூல் நிலையத்தில் பலவகையான நூல்கள் இருக்கும். அவை இலக்கியம், இலக்கணம், வரலாறு, அறிவியல், புவியியல், புதினம், அகராதி, கலைக்களஞ்சியம் மற்றும் திறனாய்வு நூல்கள் எனப் பல்வேறு பொருண்மைகளைப் பற்றிய நூல்கள் இடம்பெற்றிருக்கும். நூல்களை வாங்கிப் படிக்க முடியாதவர்கள், நூல் நிலையத்தில் வந்து படித்துப் பயன் பெறலாம். நூல்நிலையங்களில் பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், குழந்தைகள் நூலகம், அரசுப் பொதுநூலகம், நடமாடும் நூலாகும், எனப் பலவகைகள் உண்டு . நூல் நிலையங்கள் மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ளப் பெரிதும் பயன்படுகின்றன. மாணவர்கள் நூல்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். "கண்டது கற்றால் பண்டிதன் ஆகலாம்" என்பதை உணர்ந்து நூலகம் சென்று படித்துப் பயனடைவோம் .
வினாக்கள்:
1. அறிவினைத் துலங்கச்செய்யும் கருவி எது?
அ) நூல் ஆ) தூக்கம் இ) உறவு ஈ) குடும்பம்
2. அழகாகவும், வரிசையாகவும் நூல்கள் வைக்கப் பட்டிருக்கும் இடத்தின் பெயர் என்ன ?
அ)கடைகள் ஆ)விற்பனையகம் இ) வாசிப்பகம் ஈ)நூலகம்
3. நூல்கள் எவற்றை வளர்க்க உதவும் ?
அ) உறவு ஆ) அறிவு இ) மரங்கள் ஈ) நெருப்பை
4. கற்றலின் சிறப்பினை உணர்த்தும் பழமொழி யாது ?
அ) கண்டது கற்றால் பண்டிதன்ஆகலாம்
ஆ) கண்டதைத் தின்றால் நலமாய் வாழலாம்.
இ) காலம் பொன் போன்றது.
ஈ) கடமை கண் போன்றது.
5. மாணவர்களுக்கான சிறந்த பழக்கம் எது..?
அ) காலையில் எழுவது ஆ) அளவோடு உண்பது
இ) உடற்பயிற்சி செய்வது ஈ) நூல்களைக்கற்பது
இலக்கணம்
3. .சான்று தருக ( மூன்றனுக்கு மட்டும் ) 3*1 = 3.
1. நெய்தல் நிலத்தொழில் -
அ) ஆநிரை மேய்த்தல் , நெல்லரித்தல்
ஆ) நிறைகவர்தல் , வழிப்பறி .
இ) உப்பு விளைத்தல், மீன்பிடித்தல்
ஈ) கிழங்கு அகழ்தல் , தேனெடுத்தல்
2. உணவு உண்டாயா.? எனும் வினாவிற்குப் விடையாக,
அ) பழங்கள் தின்றேன்
ஆ) சாப்பாடு வேண்டாம்.
இ) வயிறு வலிக்கிறது.
ஈ) நீயே உன். .......எனக்கூறல்.
3. படர்க்கைப்பெயர்கள்
அ ) நான்,யான் ஆ)அவன், அவர்கள், இராமன்
இ) யாம் , நாம் ஈ) நீ, நீவீர் .
4. கொடை வினா :
அ )சிங்கப்பூருக்குச் சென்றுள்ளாயா...?
ஆ) திருக்குறளை எழுதியவர் யார் ?
இ) புதுக்கோட்டைக்கு வழி எது?
ஈ) உன்னிடம் பேனா இருக்கிறதா?.
5. மரபு வழுவமைதி
அ) கத்தும் குயிலோசை - சாற்றே வந்து
காதிற் படவேணும்......,
ஆ) தென்னந்தோட்டம்.
இ) செந்தமிழ் நாடெனும் போதிலே....,
ஈ) மாமரக்கூட்டம்
4) நிரப்புக ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் )_ __ _ 3*1 = 3.
1)அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது __________.
அ) அகத்திணை ஆ) புறத்திணை
இ) பொருள் இலக்கணம் ஈ) சொல் இலக்கணம்
2) கார்காலத்திற்கு உரிய மாதங்கள்_____.
அ) ஆவணி, புரட்டாசி ஆ) ஆனி, ஆடி
இ) மாசி, பங்குனி ஈ) ஐப்பசி கார்த்திகை.
3) பொருள்கோள் _________ வகைப்படும்.
அ) 4 ஆ) 8 இ) 7 ஈ) 5.
4) பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது ______.
அ)அறிவினா ஆ)கொளல் வினா
இ)கொடை வினா
ஈ)ஏவல் வினா
5)அஃறிணையில் பலவற்றைக் குறித்து வருவது _______ ஆகும்.
அ) ஆண்பால்
ஆ) ஒன்றன்பால்
இ)பலவின்பால்
ஈ) பலர்பால்
5. கூறிவாறு செய்க ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 3*1 = 3.
1. கண்ணகி வந்தான்
( எவ்வகைப் பிழையென அறிக )
அ ) திணைவழு ஆ) விளித்தொடர் இ) பால் வழு ஈ)வேற்றுமைத்தொடர் .
2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை .... ( இதில் பயின்று வந்துள்ள பொருள்கோளை எழுது )
அ ) கொண்டு கூட்டுப்பொருள்கொள்
ஆ) நிரல் நிறைப்பொருள்கோள்
இ) ஆற்றுநீர்ப்பொருள்கோள்
ஈ) மொழிமாற்றுப்பொருள்கொள்
3. ஆவணி, புரட்டாசி
( எந்த நிலத்திற்குரிய பெரும் பொழுது)
அ) மருதம் ஆ) முல்லை இ) குறிஞ்சி ஈ) பாலை
4) விடியலின்பின் 6 மணி முதல் 10 மணிவரை உள்ள காலத்தை எவ்வாறு அழைப்பர் ?
அ) காலை ஆ)மாலை இ) எற்பாடு ஈ) யாமம்
5. நாங்கள் உண்டு மகிழ்ந்தோம். ( படர்க்கை இடமாக மாற்றுக )
அ ) நாம் உண்டு மகிழ்ந்தோம். ஆ ) நீங்கள் உண்டு மகிழ்ந்தீர்கள் இ ) அவர்கள் உண்டு மகிழ்ந்தார்கள்
ஈ ) இராமன் உண்டு மகிழ்ந்தான்.
6. இலக்கணக்குறிப்புத் தருக ( எவையேனும்
மூன்றனுக்கு மட்டும் ) 3*1 = 3.1. " கடைக்குப்போவாயா ?" எனும் வினாவிற்கு " போவேன்" என்று விடையளிப்பது,
அ)நேர்விடை ஆ) சுட்டுவிடை இ)இனமொழி விடை ஈ) ஏவல் விடை .
2. இராமாயணத்தை எழுதியது யார் ? ( என மாணவன் ஆசிரியரிடம் வினவது.... )
அ ) ஏவல் வினா. ஆ) அறியா வினா. இ) அறிவினா
ஈ) ஐய வினா .
3. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பு பயனும் அது..... இக்குறப்பாவில் பயின்றுவருவது,
அ ) ஆற்றுநீர்ப்பொருள்கோள் ஆ) தாப்பிசைப்பொருள்கோள்
ஈ) கொண்டுகூட்டுப்பொருள்கோள் இ ) நிரல்நிறைப்பொருள்கோள்
4. தேர்ப்பாகன்
அ ) வேற்றுமைத்தொகை ஆ) உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை இ)உம்மைத்தொகை
ஈ)உம்மைத்தொகை
5. முதல்வர் நாளை டெல்லி செல்கிறார்.
அ ) காலவழு ஆ) பால்வழு இ) திணைவழு ஈ) மரபு வழுவமைதி .
7. கோடிட்ட இடங்களை நிரப்புக. ( எவையேனும்
மூன்றனுக்கு மட்டும் ) 2*1 = 2.1. இன்மையின் இன்னாதது யாதெனின் ..........................
இன்மையே இன்னா தது .
அ) வறுமையின் ஆ) ஏழ்மையின் இ) இன்மையின்
ஈ) சுழற்சி
2. குற்றம் இலனாய்க் .......................... வாழ்வானைச்
சுற்றமாச் -------- உலகு .
அ) குடிசெய்து ஆ) சாற்றும் இ) சாரும் ஈ) செய்யும்
பகுதி - ஆ
8. பின்வரும் செய்யுள் பகுதியைப் படித்துத் தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5 *1 = 5.
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத்தவர் காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு.
1. இப்பாடலில் ஒப்பிடப்படுபவை எவை?
அ ) முத்தமிழ் - முக்கடல் ஆ) கடல் - கப்பல்இ) கடல் - சங்கு ஈ) கடல் - தமிழ்
2. தமிழினைக் காப்போர் யார்?
அ) சான்றோர் ஆ) மூத்தோர் இ) புலவர்கள் ஈ) பெண்டிர்
3.அணிகலன்களாக இருப்பவை எவை ?
அ) புராணங்கள் ஆ) காப்பியங்கள் இ) சிற்றலக்கியங்கள் ஈ) புறநானூறு
4.ஒரு பாடலை , இருபொருள் தருமாறு அமைப்பது ----------------- எனப்படும்.
அ) இரட்டுற மொழிதல் ஆ) இருபொருள் இ) ஒப்பிடுதல் ஈ) கூட்டு
5. படலாசிரியரின் இயற்பெயர் என்ன?
அ ) சந்தைக்கவிமணி ஆ) தமிழழகனார் இ) பாரதியார் ஈ) சண்முக சுந்தரம்.
7 . ) பின்வரும் செய்யுள் ( மூன்றனுக்கு மட்டும்) விடையளி: 3*3 = 9.
1. பாரதியார் காற்றிடம் வேண்டுவது யாது ?
2. தமிழின் தனிச்சிறப்புகளாகப் பெருஞ்சித்திரனார் கூறுவன யாவை ?
3.அதிவீரராம பாண்டியர் கூறிடும் விருந்தினரை வரவேற்கும் முறைகளை வரிசைப்படுத்தி எழுது ?
4) ஒழுக்கமுடைமை பற்றி வள்ளுவர் கூறுவன யாவை ?
8 ) எவையேனும் இரண்டு உரைநடை வினாக்களுக்கு மட்டும் விடையளி 2* 5 =10.
1. தேவநேயப்பாவாணர் குறிப்பிடும் பூவின் நிலைகள் மற்றும் இளம்பயிர் வகைகள் குறித்து எழுதுக. ?
2. மனிதர்களால் காற்று மாசடைவதற்கான காரணங்களையும் , அதற்கான தீர்வுகளையும் பட்டியலிடுக.
3. இலக்கியங்ககளால் அறியப்படும் வறுமையிலும் விருந்து போற்றிய தமிழர் குறித்து விளக்கி வரைக.
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment