பருவத்தேர்வு II MARCH- 2024-25.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி
எஎண் : 815 ,கோலப்பெருமாள் பள்ளித் தெரு ,
அரும்பாக்கம், சென்னை- 106.
பருவத்தேர்வு - II ( 2024 - 25 )
வகுப்பு : 9. காலம்: 3 மணிநேரம்
நாள் :05.03.2025. தமிழ் மதிப்பெண்கள்: 80
(பகுதி -அ)
I. பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5.
சோழன் பகைவரை வென்று வீரத்தை நிலைநாட்டும் தன்மையுடையவன். எனினும், இரவலர்பால் பேரருள் பாராட்டுபவன். அவன்பால் சென்று , உணவில்லை என்று அடுகலன் நீட்டினால் , அதில் சோறினைப் பெய்யமாட்டான். அவனது தலைநகரான கருவூரையே அதற்கு ஈடாகத் தந்து விடுவான். பெண்கள் பூவிற்கு உரிய விலை தாருங்கள் எனக்கேட்டால், மதுரை மாநகரையே அவர்களுக்கு விலையாக வழங்கிவிடுவான். எனவே, பரிசில் பெற விரும்புவோர் சோழனை நாடி வாருங்கள். பழையதான இம்மண்ணின் உரிமை யாருக்கு ? என்று ஆராய்ந்தால் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் உள்ள மண்ணானது, பானையாகி யாருக்குப் பயன் தரப்போகிறது என்பதை யாராலும் எப்படிக் கூறிட இயலாது. அதுபோல , சோழனின் கைப்பொருளான நாடு யாருக்கு உரிமையுடையதாகும் என்பதை யாராலும் கூறிட இயலாது. அத்தகைய வள்ளன்மை உடையவன் சோழமன்னன் .
வினாக்கள்:
1. ) சோழன் எப்படிப்பட்டவன் ?
அ) நல்லவன் ஆ) உயர்ந்தவன் இ) வீரமுடையவன் ஈ ) காயமுடையவன்
2. ) சோழனுடைய நாடு எத்தகையது ?
அ) வளங்கள் உடையது ஆ) பக்தி உடையது இ) வறுமை ஈ ) ஆறுகளைக் கொண்டது.
3. ) பெண்கள் தரும் பூவிற்கு விலையாகத் தரப்படுவது எது..?
அ) மாலைகள் ஆ) மதுரை மாநகர் இ) பொற்காசுகள் ஈ) வைரங்கள்
4. மண்பாண்டங்கள் செய்வோர் யார் ?
அ) விறலியர் ஆ) குயவர்கள் இ) பாணர்கள் ஈ ) கூத்தர்கள்
5. இது எந்த மன்னனின் சிறப்பினைக் கூறுகிறது ?
அ) சேரர்கள் ஆ) சோழர்கள் இ) களப்பிரர்கள் ஈ) பாண்டியர்கள்
II. பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5
தலைசிறந்த சேர மன்னர்களில் ஒருவன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவான். இவன் இரும்பொறையின் மரபினைச் சேர்ந்தவன். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகன்.தகடூர் பெரும்பொருள் அதியமான் நெடுமான் அஞ்சியை வென்றவன். அதனால் பெரும்புகழைப் பெற்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் சேர மன்னர்களின் செல்வாக்கு உயர்ந்த நிலையில் இருந்தது. புலவர் அரிசில் கிழார் பதிற்றுப்பத்து நூலில் இவனைக் குறித்துச் சிறப்பாகப் பாடியுள்ளார்.
நீண்ட தூரம் நடந்து வந்த பயணக்களைப்பால் முரசுக்கட்டில் என்றும் அறியாது அதன்மேல் படுத்து உறங்கினார் மோசிகீரனார். அதனை அறிந்து சினமுற்ற அரசன் , வாள் கொண்டு தண்டிக்கத் துடித்தான். வாளினை ஓங்கினான்; உறங்குவது புலவர் என்று அறிந்ததும், அவர் மேல் கருணை கொண்டு, உறங்கி எழும்வரை அவருக்குக் கவிரி வீசி நின்றான். நீங்காத புகழினையும் பெற்றான். இம்மன்னனும் சிறந்த புலனாக இருந்தான்.
வினாக்கள்:
1) பெருஞ்சேரல் இரும்பொறை எவரது மரபினைச் சேர்ந்தவன்
2.) பதிற்றுப்பத்து நூலில் இவனைக் குறித்துச் சிறப்பாகப் பாடிய புலவர் யார் ?
3.) உறங்குவது புலவர் என்று அறிந்ததும் மன்னன் செய்தது யாது..?
4.) புலவர் எங்கு உறங்கினார் ? ஏன் ?
5.) பத்திக்கு ஏற்ற ஒரு தலைப்பிடுக.
பகுதி-ஆ
(இலக்கணப் பகுதி வினாக்கள் )
III. சான்று தருக (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1.பெயர்ப்பயனிலைத்தொடர் -----------
அ) கம்பர் கவிஞர் ஆ) எடுத்து எழுதினான் இ) எழுந்தவன் யார் ?
2.திரிதல் விகாரப்புணர்ச்சி--------------
அ) வாழைக்காய் ஆ) கடவுள் வந்தார் இ) பொற்குடம்
3.ஓகார இடைச்சொல்--------------
அ) இவனைக்கண்டான் ஆ) தெய்வத்தோடு வந்தான்
இ) அவனோ செய்தான்
4.நான்காம் வேற்றுமைத்தொடரில் வல்லினம் மிகும். -----------------
அ) இறைவனுக்குப் பூசை ஆ) இறைவனைக் கண்டேன்
இ) இறைவன்போலத் தெரிந்தான்
5.கெடுதல் விகாரப்புணர்ச்சி —-------
அ)வைரம்+வேல் ஆ) மரம்+பலகை இ) வீரம்+கலை.
IV. நிரப்புக (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1. ஆ , ஓ என்பன —-----ஆகும்.
அ)வினா எழுத்துகள் ஆ) சுட்டெழுத்துகள் இ) சுட்டுச்சொற்கள்
2.புணர்ச்சி---------வகைப்படும்.
அ) 4 ஆ) 3 இ) 2
3. வினைக்கு அடையாக வருவது ---------- எனப்படும்.
அ) பெயரடை ஆ) வினையடை இ) கூட்டுவினை
4.முதல் வினைக்குத்துணையாக, வேறு இலக்கணப்பொருளைத்தரும்
வினை-------------
அ) தனிவினை ஆ) கூட்டு வினை இ) துணை வினை
5.ஒருசொல் பலபொருள் குறித்து வருவது ------------------ ஆகும்.
அ) இடைச்சொல் ஆ) வினைச்சொல் இ) உரிச்சொல்.
V. இலக்கணக்குறிப்பு தருக. (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1.வானொலியில் பாட்டு வைத்தான்-------------
அ) முதல் வினை ஆ) துணை வினை இ) கூட்டு வினை
2.வாழைப்பழம்-----------------
அ) தோன்றல் விகாரப்புணர்ச்சி ஆ) திரிதல் விகாரப்புணர்ச்சி
இ) கெடுதல் விகாரப்புணர்ச்சி
3.எத்தனை பெரியது? —------------
அ) இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது
ஆ) சுட்டுப்பெயரில் வல்லினம் மிகாது
இ)அளவுப்பெயர்களை அடுத்து வல்லினம் வரின் மிகாது.
4.பால் பருகினான்---------------
அ) இரண்டாம் வேற்றுமைத்தொடர் ஆ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
இ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
5.மல்லிகைப்பூ----------------------
அ) பண்புத்தொகை ஆ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை
இ) உம்மைத்தொகை
VI. கூறியவாறு செய்க( எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) 3×1=3.
1.கண்டு கொண்டேன்(வினை வகையைச்சுட்டுக)
அ) கூட்டுவினை ஆ) துணைவினை இ) தனிவினை
2.கிழக்கு+பகுதி = புணர்ச்சிவிதி தருக.
அ) கிழக்குபகுதி (பெயர் முன் வல்லினம்மிகாது)
ஆ) கிழபகுதி ( இயல்புப்புணர்ச்சியில் வல்லினம் மிகாது )
இ) கிழக்குப்பகுதி ( திசைப்பெயர்களை அடுத்து வரும் வல்லினம் மிகும் )
3.எது கண்டாய் ? ( வல்லினம் மிகாமைக்குக்காரணம் தருக. )
அ)சுட்டுச்சொல்லை அடுத்து வல்லினம் மிகாது.
ஆ) நிலைமொழியில் வல்லினம் வரின் மிகாது.
இ) எது எனும் வினாப்பெயரின் பின் வரும் வல்லினம் மிகாது.
4.பழம் , மரம் ( இடைச்சொல் சேர்க்க )
அ) மாம்பழம், மாமரம் ஆ) பழமும் மரமும்
இ) பழன்ன மரம்
5.கடி நகர், கடி மலர்,கடி குதிரை ( சொல் வகையை எழுதுக )
அ) பல பொருள் குறித்த ஓர் உரிச்சொல்
ஆ) ஒருபொருள் குறித்த பல உரிச்சொல் இ) இடைச்சொல்.
VII. பின்வரும் செய்யுட்பகுதியைப்படித்து அதனைத்தொடர்ந்து வரும் வினாக்களுக்கு உரிய விடையளிக்க. (5×1=5)
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடலன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்...
வினாக்கள்:
1.இப்பாடலின் ஆசிரியர்--------------
அ) கவிஞர் தமிழ் ஒளி ஆ) சீத்தலைச்சாத்தனார் இ) சேக்கிழார்
2) இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர்----------------
அ) பட்ட மரம் ஆ) தமிழ் விடு தூது இ) பெரிய புராணம்
3.கழை - என்பதன் பொருள்--------
அ) கரும்பு ஆ) சேலை இ) சங்கு
4.கருங்குவளை -இலக்கணக்குறிப்பு தருக.
அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உவமைத்தொகை
5.இப்பாடலாசிரியர் வாழ்ந்த நூற்றாண்டு--------
அ) கி. மு -12 ஆம் நூற்றாண்டு ஆ) கி. பி. 12 ஆம் நூற்றாண்டு
இ) கி. பி. இரண்டாம் நூற்றாண்டு.
VIII. திருக்குறளில் மனனப்பாடலில் விடுபட்ட சீர்களை நிரப்புக. ( 2×1=2 )
1).மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
—------ ---- வென்று விடல்.
அ) தகுதியான் ஆ) மிகுதியான் இ) வெகுமதியான். ஈ )பகுதியான்
2.) ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
—------------ என்னு மவர்.
அ) செய்யா வினை ஆ) ஆஅதும் இ ) அதும் ஈ ) நல்வினை
X. பின்வரும் செய்யுள் வினாக்களுள் (```மூன்றனுக்கு மட்டும் ``)
விடை தருக : 03 × 0 3 09.
1) தமிழ் விடு தூது - குறிப்பு வரைக.
2) பெண்கல்வியின் அவசியம் குறித்து பாரதிதாசன் கூறுவன யாவை?
3) இராவண காவியத்தில் புலவர் குழந்தை காட்டும் பாலை நிலக்காட்சி யாது?
4) கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டி கவிஞர் வைரமுத்து விளக்குவது யாது?
5.) ஆண்டாள் தான் கண்டகனவு குறித்து தோழியிடம் கூறியது யாது?
XI. உரைநடை வினாக்களுள் ( மூன்றனுக்கு மட்டும் )
விடை தருக. 3×5=15.
1.மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
2. இந்திய மொழிக்குடும்பங்கள் பாடத்தின் வாயிலாக நீயறிந்தவற்றை எழுதுக.
3.வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
4. சோழர்காலச் சிற்பக்கலைப் படைப்புகள் குறித்து எழுதுக.
5.தமிழருக்கும் தண்ணீருக்குமான தொடர்பு குறித்து எழுதுக.
XII. துணைப்பாட வினாக்களுள் ( ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் ) ( 10 )
வளரும் செல்வம் துணைப்படைப்பகுதி விளக்கும் செய்தியைக் கட்டுரையாக்கித் தருக.
(அல்லது)
ஆ)
விண்ணையும் சாடுவோம் - பாட த்தியின் வழியாக நீ உணர்ந்த கருத்தினை விளக்கி வரைக.
(அல்லது)
இ)
தி . ஜானகி ராமன் அவர்களின் " செய்தி " கதை உணர்த்தும் கருத்துக்களை விவரிக்க.
XII. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக. (1×3=3)
XIII கடித வினாக்களுள் ஒன்றுக்கு மட்டும் கடிதம் எழுதுக. ( 1 × 8 = 8. )
1. மதுரையில் நடைப்பெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வரச்சொல்லி உன் நண்பனுக்கு / தோழிக்குக் கடிதம் வரைக.
(அல்லது)
2. உங்கள் ஊரில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாகச் சுற்றித்திரியும் கால்நடைகளைத் தடைசெய்யக்கோரி மாநகராட்சி
உறுப்பினருக்குக் கடிதம் வரைக.
(கடிதம் எதுவாயினும் மாணவர் தங்களது முகவரியாகக் கொள்ளவேண்டியவை: தமிழியளன் / தமிழினியள் , எண்-108, பெரியார் தெரு, காந்திநகர், சென்னை - 600 106. )
XIV. ஏதேனும் ஒரு தலைப்பில் மட்டும் கட்டுரை வரைக. 1 × 7 = 7.
1)
முன்னுரை - அறிவியலின் பயன்கள் - வளர்ச்சி - மருத்துவம்- கல்வி-போக்குவரத்து- முடிவுரை.
(அல்லது)
2. முன்னுரை- சுற்றுச்சூழல்மாசு - காரணங்கள்- விளைவுகள் -தீர்வுகள்-மாணவர் கடமை - முடிவுரை.
(அல்லது)
3. )
முன்னுரை- நான் விரும்பும் நூல் - நூலின் சிறப்புகள் - நூலின் ஆசிரியர் - படைப்பாளி - கருத்துகள் - முடிவுரை.
—-------------------------------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment