Posts

Showing posts from September, 2026

JANMASTAMI WELCOM SPEACH-2026

                                  உ                             சிவமயம்  வசுதேவ   சுதந் தேவம்  கம்ச சா னு ர மர்த்தனம் தேவகி பர மானந்தம் கிருஷ்ணம்    வந்தே ஜகத்குரும் ....! அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் .  வரவேற்புரை வழங்குவதற்கு உங்கள்    முன்   உங்கள்  அன்பின்  தமிழாசிரியன்,  அன்புச்செல்வன்.    இந்த இனிய மாலைப்பொழுதில்  ஜென்மாஷ்டமி விழாவினில்  நாம் அனைவரையும்  கூட்டுவித்த  இறைவனின் திருப்பாதங்களை வணங்குகிறேன். கடவுள் என்பதற்கு அதாவது, கட + உள் உள்முகமாக தன்னை நோக்குதல் என்றும்,  மற்றொரு  பொருள் கடப்பதற்கு அரிதான தடைகளைத் தாண்டி தன்முகமாகச் சிந்தித்தல்   அல்லது   அகமாகிய உள்ளத்தைக் கடந்து  இறையின்பம்  தேடல்  என்றும் பலவிதமாகப்   பொருள் கூறுவர்  பெரியோர். அதனை...

NEWS LETTER-2026-APL

செய்தியறிக்கை       54 ஆம் ஆண்டு விழா மற்றும் ஜென்மாஷ்டமி விழா .      இடம் :     துவாரகாதாஸ் கோவர்தன்தாஸ் கல்லூரி வளாகம் - துவாரகா அரங்கம்- அரும்பாக்கம்.        நாள் :    2026 - செப்டம்பர் 2 & 3 ஆம் நாள் .     விழா :  சென்னை - அரும்பாக்கம் கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளியின்    54 ஆம் ஆண்டு விழா மற்றும் ஜென்மாஷ்டமி விழா .        சென்னையின் தலைசிறந்த பள்ளியான கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண்   மேல்நிலைப் பள்ளியின் 54 ஆம் ஆண்டு விழா மற்றும் ஜென்மாஷ்டமி விழா செப்டம்பர் 2 ஆம் நாளன்று   துவாரகாதாஸ் கோவர்தன்தாஸ்   கல்லூரியின் , துவாரகா அரங்கில் மாலை 3 மணி அளவில்   இனிதே தொடங்கின .     சிறப்புச்   சொற்பொழிவாளர்    சொல்லமுதச்செல்வி ஸ்ரீமதி ஹரிப்பிரியா தேவநாதன் அவர்கள் கண்ணனின் அவதாரங்களின் நோக்கம் பெருமைகள் குறித்து விளக்கினார்கள் ....