STD X NON DETAIL -01 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி
சிங்கம்புணரி ப.சிங்காரம்
குறிப்புச்சட்டகம்
முன்னுரை
கப்பித்தான்
கடற்கூத்து
தொங்கான்
கரையைக்கண்டனர்
முடிவுரை
முன்னுரை
தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழ்தல் மிக இயல்பான ஒன்றாகும். ப சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி எனும் நாவல்
மிக அழகாக அதனை விவரிக்கிறது. புலம்பெயர்தலின் போது ஏற்பட்ட கடற்கூத்தின் கோரத்தாண்டவத்தைப் பற்றி நாவலில் விவரித்துள்ளார்.
கப்பித்தான்:
கொளுத்திய வெயில் மறைந்தது; வானம் இருண்டது பேசிக்கொண்டிருந்த மாலுமிகள் விரைந்து செயல்பட்டனர். பயம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது .இடி முழக்கத்துடன் மின்னல் மின்னியது; மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. சூறாவளியுடன் சேர்ந்து அலையும் சேர்ந்து தொங்கானைத் திணறடித்தன. அனைவரும் அச்சத்துடன் பலகைக்குள் புகுந்து கொண்டனர்.
கடற்கூத்து
வானமும் மழையும் கடலும் மீண்டும் மீண்டும் கொந்தளித்தன; தொங்கான் தாவிக்குதித்துத் தள்ளாடுகிறது. சுழல்கிறது ,மூழ்கி நீந்துகிறது. கடலின் சீற்றமும், ,. இருட்டில் கப்பல் அசைந்து நொறுக்குவது போன்ற சத்தமும் கடலின் ஒன்றிணைந்து
சீன பிசாசுகளை நினைவூட்டின. மூட்டைகள், சிப்பங்கள் கடல் நீரில் மிதந்து மறைந்தன.. கப்பல் சிப்பந்திகள் கப்பலைச் சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். மரங்களைச் செதுக்கி ஓட்டைகளை அடைத்தனர்.
தொங்கான்:
புயலின் தாக்கம் எவ்வளவு நேரம் நீடித்தது என்று யாரும் அறியவில்லை. கடிகாரத்தைப் பார்த்த போது அவைகளும் நின்று போயிருந்தன. கப்பல் தன்வசம் இன்றி தடுமாறி பயணித்துக் கொண்டிருந்தது. பினாங்கு எப்போது அடைவோம்? எனச்சொல்ல யாரும் இல்லை. இரவில் தப்பித்தான் மேல்தட்டுக்கு வந்தான்: வானை உற்று நோக்கினான். இனிப்
பயமில்லை இரண்டு நாட்களில் கரையைப் பார்க்கலாம் என்றான். உப்புக் காற்று உடலை மிகவும் வருத்தியது.
கரையைக் கண்டனர்;
ஐந்து நாள் பயணத்தின் பின் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. பிலவான் முதல் சுமத்ரா வரை நடந்த அந்தப் பயணம் பரந்த கடலின் பயங்கரத்தை
உணர்த்தியது.அது நினைவில் நீங்கா அனுபவமாக அமைந்துவிட்டது.
முடிவுரை:
ஆழி என்பது அழகானது; அதுபோலவே, கப்பல் பயணம் ஆபத்துகள் நிறைந்தது என்பதை உணர்த்தியுள்ளதுஇக்கதை. நாவலாசிரியர் ப.சிங்காரம் தனது அனுபவங்களோடு கற்பனையையும் சேர்த்துப் புதினத்தை
அழகாக வழங்கியுள்ளார்.
தமிழாசிரியர் பழ அன்புச்செல்வன்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Comments
Post a Comment