STD VII NON DETAILS2026

 

இயல் -01 

விரிவானம்

ஆளுக்கு ஒரு வேலை 

பொம்மலாட்டம் 


நீங்கள்  அறிந்த  சில  சொலவடைகளையம் 

அவை உணர்த்தும்  பொருளையும்   எழுதுக.

முன்னுரை:

சொலவடைகள் என்பன சிறுசிறு தொடர்களாக வட்டார வழக்கில் வழங்கி வருபவை. அவைகள்  பேச்சு மொழியின் அழகியலையும், பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவை.  சுருங்கச் சொல்லி  விளங்க வைப்பதில உவமை கள் போன்று  பயன்படுகின்றன . 

1)

பிடிவாதம் தவிர் .

புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போடா முடியமா? 

புடிவாதம் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

2)

தகாத செயல்களைத் தவிர்.

நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நோக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா ?

நமக்குத் பொருந்தாத செயல்களைத் தவிர்த்தல் வேண்டும் என்று கூறுகிறது.

3)

உணர்வற்று இருத்தல் கூடாது. 

குத்துக்கல்லுக்கு குளிரா ? வெய்யிலாங்கிற  மாதிரி.

நாம் பிறரின் உணர்வுகளை  புரிந்துகொண்டு நடக்க வேண்டும். உணர்வற்று இருத்தல் கூடாது.

4)

ஆதரவு இன்றி  வாழ்தல்:

தட்டிப் போட்ட ரொட்டிக்குப்  புரட்டிப் போட ஆளு இல்லை. 

தனக்கு உதவிட யாரும் இல்லாத நிலையில் இருத்தலை உணர்த்துகிறது.

5)

இழந்ததை மீண்டும் பெற்றிட  இயலாது.

அணை உடைஞ்சு  போன வெள்ளம் அழுதாலும் வராது.

நாம் செய்யும் செயல்களை விழிப்புடன் செய்திட வேண்டும். பெயரையும் , புகழையும் , செல்வத்தையும் இழந்தால் மீண்டும் பெற்றிட இயலாது.

முடிவுரை :

 சொலவடைகள் எல்லா இடங்களிலும் எல்லோராலும் பயன்படுத்தப் படுபவையாகும். நாமும்  சொலவடைகளின் தன்மை  பற்றி  அறிந்து கொண்டோம் . பொருள் உணர்ந்து சொலவடைகளைப்  பயன்படுத்தி மகிழ்வோம். 


தமிழாசிரியர் பழ அன்புச்செல்வன்

வாழ்க வளமுடன்     வாழ்க  வையகம் 


Comments

Popular posts from this blog

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

10.09.2025 STD X ANSWER KEY FOR MCQ

மாதிரித்தேர்வு - 1 - டிசம்பர் 2025. ( இயல் 4,5,6 )