annual qp std vi tamil 2026
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600106.
ஆண்டுத்தேர்வு - 2026
வகுப்பு : ஆறு தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 80.
நாள் ; 5 மார்ச் 2026 கால அளவு ; 3 மணி .
பகுதி - அ
1.பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி. 5 x 1 = 5.
சோழன் பகைவரை வென்று வீரத்தை நிலைநாட்டும் தன்மையுடையவன். எனினும், ஈகை என பொருள் வேண்டி நிற்போரிடம் பேரருள் காட்டுபவன். அவனிடம் சென்று , உண்பதற்கு உணவில்லை என்று பாத்திரத்தை நீட்டினால் , அதில் சோறினை ஈய மாட்டான். அவனது தலைநகரான கருவூரையே அதற்கு ஈடாகத் தந்து விடுவான். பெண்கள் சூடும் பூவிற்கு உரிய விலையைத் தாருங்கள் என்று கேட்டால், மதுரை மாநகரையே அவர்களுக்கு விலையாக வழங்கிவிடுவான். எனவே, பரிசில் பெற விரும்புவோர் சோழனை நாடி வாருங்கள். பழைமையான இம்மண்ணின் உரிமை யாருக்கு ? என்று ஆராய்ந்தால் மண்பாண்டம் செய்யும் குயவர்களிடம் உள்ள மண்ணானது, பானையாகி யாருக்குப் பயன் தரப்போகிறது ? என்பதை எப்படி யாராலும் கூறிட இயலாதோ ! அதுபோல, சோழனின் நாடு யாருக்கு உரிமையுடையது என்பதை யாராலும் உணர்ந்து கூறிட இயலாது. அத்தகைய வள்ளல் தன்மை உடையவன் சோழமன்னன்.
வினாக்கள்:
1. ) சோழன் எப்படிப்பட்டவன் ?
அ) நல்லவன் ஆ) உயர்ந்தவன் இ) வீரமுடையவன் ஈ ) காயமுடையவன்
2. ) சோழனுடைய நாடு எத்தகையது ?
அ) வளங்கள் உடையது ஆ) பக்தி உடையது இ) வறுமை ஈ ) ஆறுகளைக் கொண்டது.
3. ) பெண்கள் சூடும் பூவிற்கு விலையாகத் தரப்படுவது எது..?
அ) மாலைகள் ஆ) மதுரை மாநகர் இ) பொற்காசுகள் ஈ) வைரங்கள்
4. மண்பாண்டங்கள் செய்வோர் யார் ?
அ) விறலியர் ஆ) குயவர்கள் இ) பாணர்கள் ஈ ) கூத்தர்கள்
5. இப்பத்தியானது எந்த மன்னனின் சிறப்பினைக் கூறுகிறது ?
அ) சேரர்கள் ஆ) சோழர்கள் இ) களப்பிரர்கள் ஈ) பாண்டியர்கள்.
1.பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி. 5 x 1 = 5.
நாம் உண்ணும் உணவே மருந்தென அறிந்தவர் தமிழர். தமிழர்கள் உடல்நலம் பற்றிய அறிவையும் , மருத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் பெற்றிருந்தனர். வருமுன் காத்துக் கொள்வதே சிறந்த பண்பாகும். உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் வழக்கத்தில் இருந்தன. அப்படி இருந்தாலும் தமிழர்கள் தமெக்கென மரபு சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வாழ்ந்து வந்தனர் . நோய் நம்மைத் தாக்காமல் பாதுகாத்துக்கொள்வதே சிறந்த வாழும் வழி முறையாகும். இயற்கையோடு இணைந்து வாழ்வதே நோயை நீக்குவதற்குச் சிறந்த வழியாகும். நல்ல உணவு , உடற்பயிற்சி , நல்ல உறக்கம் , மூச்சுப்பயிற்சி போன்றனவே உடல் நலம் காக்கும் சிறந்த வழியாகும்.
வினாக்கள்:
1. உண்ணும் உணவு எதுவாக உள்ளது ?
2. நோய்வந்தபின் மருத்துவமனை செல்வதைவிடச் சிறந்தது
எது ?
3. உடல் நலம் காக்க எவ்வகையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும் ?
4. உலகில் நோய் நீக்குவதற்கு உள்ளன எவை ?
5. மருந்து பற்றி நன்கு அறிந்தோர் யார் ?
பகுதி - ஆ.
3. இலக்கணம்.
i )நிரப்புக. 5x 1 =5.
1) சொல்லின் இறுதியில் ------------ எழுத்துகள் தனித்து வருவதில்லை.
அ) மெய் எழுத்துகள் ஆ) உயிரெழுத்துகள் இ) உயிர்மெய்.
2) வினா எழுத்துகள் , சொல்லின் அகத்தே நின்று வினாப்பொருளைத்
தரும் எனில் -------------- எனப்படும்.
அ) அகவினா ஆ) வினாத்திரிபு இ) சுட்டுத்திரிபு.
3)தற்காலத்தில் பயன்பாட்டில் இல்லாத சுட்டெழுத்து ------------------.
அ) அ ஆ) ஓ இ) உ.
4) வல்லினத்திற்கு இனமான எழுத்துகள் ---------------------------- ஆகும் .
அ) மெல்லினம் ஆ) உயிரினம் இ) இடையினம்.
5) ஆய்த எழுத்து சொல்லின் ----------- மட்டுமே வரும்.
அ) குறில் ஆ) இடையில் இ) நெடில்.
ii.) சான்று தருக. 5x1=5.
1) மெல்லின மெய்கள்
அ) ங் ஞ் ண் ந் ம் ன் ஆ) க் ச் ட் த் ப் ற் இ) ய் ர் ல் வ் ழ் ள்
2) புறவினா
அ) திருந்தியது அவனே. ஆ) திருடன் அவனா ? இ) இப்புத்தகம்.
3) அகச்சசுட்டு
அ) அவன் , இவன் ஆ) அப்பையன் , இப்பையன்
இ) இந்தப்புத்தகம், இந்தப்பையன்
4) இன எழுத்துகள் அமைந்த சொற்களை எடுத்து எழுதுக.
அ) தட்டான், பொத்தான், சித்தன் ஆ) தாத்தா , கண்ணன் , மெத்தை.
இ) தந்தை , கண்டான் , மஞ்சள்
5) சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்
அ) உயிர் ஆ) மெய் இ) உயிர்மெய்.
iii.)கூறியவாறு செய்க. 5x1=5.
1) மஞ்சள் , கங்கை , தந்தை
( சொல்லில் இடம்பெற்றுள்ள இன எழுத்துகளை எழுது )
அ) ச்ஞ், க்ங், ந்த். ஆ) ச்ஞ், க்ங் ,ப்ம் . இ) ற்ன் , க்ங் ,ந்த்.
2) ஆண்டவன் , ஓடம் , ஊறுகாய்
( சொல்லின் முதல் எழுத்துகளை எடுத்து எழுதுக .)
அ) டவ , டம , று. ஆ) ண்ன் , ம் , ய். இ) ஆ , ஓ , ஊ.
3) இப்பையன், இந்தப்பக்கம் , இவன்
( எவ்வகைச் சுட்டு என எழுதுக.)
அ) அகச்சுட்டு ஆ) புறச்சுட்டு இ) அண்மைச்சுட்டு
4) இவனோ கள்வன் ? எடுத்தவன் அவனா ?
( வினா வகையை எழுதுக. )
அ) அகவினா ஆ) புறவினா இ) சுட்டு விடை
5) இந்தக்கதை, அந்த வீடு .
( சுட்டுத்திரிபை சுட்டுச் சொல்லாக்குக. )
அ) இக்கதை, அவ்வீடு. ஆ) கதை, வீடு. இ) அவ்வீடா? இக்கதையா?
3.பாடலிலிருந்து விடையளி. 5 x 1 = 5.
பண்டங்கள் ஏற்றிப் பயன் நல்கும் வணிகத்தால்
கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்,
அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவத்தை அஞ்சி அகற்றி விளக்கிடுவான் .
வினாக்கள்:
1) பாடல் இடம்பெற்ற நூல் எது.?
அ) புதியதோர் விதி செய்வோம் ஆ) நானிலம் படைத்தவன் இ) திருக்குறள் ஈ) காணி நிலம் வேண்டும்.
2)பாடலின் ஆசிரியர் யார் ?
அ) பாரதியார் ஆ) அவ்வையார் இ) தமிழழகனார்
ஈ) முடியரசன்
3) வணிகம் - பொருள் தருக.
அ) வியாபாரம் ஆ) லாபம் இ) இறக்குமதி ஈ) விவசாயி
4) கலங்களில் ஏறி கடலில் பயணித்தவன் யார் ?
அ) இந்தியன் ஆ) கர்நாடகம் இ) பாண்டியன் ஈ) தமிழன்
5) எதற்கு அஞ்சுகிறான் ?
அ) நன்மை செய்ய ஆ) தீமை செய்ய இ) உண்மை பேச
ஈ) கடலைக்கண்டு.
4. மனனச் செய்யுளை அடி மாறாமல் எழுதுக.-----------------------------------:4.
i.)
" புல்வெளி எல்லாம் " .... எனத்தொடங்கும் செய்யுள் மனனப்பாடலை ...............கலைக்கூடம்" என்பது வரை எழுதுக?
ii.)
திருக்குறள்...................................................................................................................................................................2.
"---------உயர்வு " என முடியும் திருக்குறளை எழுது?
5.உரைநடைப்பத்திவினா- விடை 5x1=5.
ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது ஏற்றுமதி எனப்படும். பிற நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது இறக்குமதி ஆகும். பழங்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை , அரிசி, சந்தனம் , இஞ்சி , மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சீனாவிலிருந்து கண்ணாடி, கற்பூரம் , பட்டு, போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவிலிருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.
1)தமிழ் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் எவை ?
அ) மயில்தோகை , குதிரைகள் ஆ) குதிரைகள் இ) கண்ணாடி, கற்பூரம் , பட்டு, ஈ)அரிசி, சந்தனம் , இஞ்சி.
2) ஏற்றுமதி என்றால் என்ன ?
அ )பொருட்களைப் பிறநாடுகளுக்கு அனுப்புவது. ஆ) பொருட்களை விற்பனை செய்வது இ) பொருட்களைப் பிற நாடுகளில் இருந்து வாங்குவது ஈ ) பொருட்களை உற்பத்தி செய்வது
3) குதிரைகள் எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டன?
அ) அமெரிக்கா ஆ) இலண்டன் இ) அரேபியா ஈ) சீனா.
4) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் எவை ?
அ) மயில்தோகை , அரிசி, சந்தனம் ஆ) கண்ணாடி, கற்பூரம் , பட்டு. இ) ஒட்டகம் , முதலை ஈ) கரும்பு , வெற்றிலை, பொம்மை
5) இறக்குமதி என்றால் என்ன ?
அ) பிறரிடம் வாங்குவது ஆ) கடன் வாங்குவது
இ) பிறநாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது.
ஈ) பொருள்களை பிறரை உற்பத்தி செய்யச் சொல்வது.
6.செய்யுள் வினா-விடை : ( எவையேனும் மூன்று மட்டும் ) 3x3=9.
1) நாம் யாருடன் நட்புக்கொள்ள வேண்டும்?
2) நான்கு நிலங்கள் என்பன யாவை ?
3) தாரா பாரதி பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக ?
4) அலையையும், மேகத்தையும் மீனவர்கள் எவ்வாறு கருதுகின்றனர்..?
5) ஆக்கம் யாரிடம் வழி கேட்டுச் செல்லும் ?
7.. உரைநடை வினா-விடை: 3 x 4 =12.
1) உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர் ?
2) சிறுவணிகம், பெருவணிகம் - வேறுபடுத்துக.
3 )காந்தியடிகளுக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பை எழுதுக.
4) காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய
நிகழ்வைக் கூறுக.
8 ) விரிவானம். 1x7=7.
அ )
உழைப்பே மூலதனம் - கதைப்பகுதியைக் கட்டுரையாக எழுது ?
( அல்லது )
ஆ )
வேலுநாச்சியார் தனது வீரச்செயல்களால் பெற்ற வெற்றி குறித்து எழுது?.
9.கடிதம்: ( ஏதேனும் ஓன்று மட்டும்) 1x6=6.
)
உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்குச் செல்ல இருப்பதால் 3 நாட்கள்
விடுமுறை வேண்டி உனது பள்ளியின் முதல்வருக்குக் கடிதம் வரைக.
( அல்லது )
ஆ )
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உனது நண்பனைப் பாராட்டிக்
கடிதம் எழுது ?
( இரு கடிதங்களுக்கும், உனது முகவரி:
வேலன் / வள்ளி , கதவு எண்: 108, ஸ்ரீ கிருஷ்ணா தெரு, ஜெய் நகர், அரும்பாக்கம் ,
சென்னை- 600 106. எனக்கொள்க. )
10. பொதுக்கட்டுரை: ( ஏதேனும் ஓன்று மட்டும்) 1x5=5.
அ )
சிறுசேமிப்பும் அதன் பயன்களும் குறித்துக் கட்டுரை எழுது ?
( அல்லது )
ஆ )
தண்ணீர் சேமிப்பும் அதன் பயன்களும் குறித்துக் கட்டுரை எழுது.
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment