ஜனவரி அகமதிப்பீட்டுத் தேர்வு 2023 STD X A,B,C,D. SECTIONS.
ஜனவரி அகமதிப்பீட்டுத் தேர்வு 2023 - 2024
பத்தாம் வகுப்பு கொள்குறி வினாக்கள்.
நிரப்புக
அன்னை மொழியே பாடலின் ஆசிரியர் பாவலரேறு --------------------- அவர்கள்.
செந்தாமரை மலரில் இருந்த-------------------------உண்டு மகிழ்ந்தது வண்டு.
அன்னை மொழியே பாடல் இடம்பெற்றுள்ள நூல் --------------------.
இல்லைபூவின் பல்வேறு நிலைகளில் அரும்பு என்பது --------------------- குறிக்கும்.
நெல் கத்தரி முதலியவற்றின் இளமைப்பெயர் ---------------------------- என்பதாகும்.
ஒரே செய்யுள் பாடல் இரு பொருள் படப் பாடுதலை ------------------- என்பர். இதனைச் சிலேடை அணி என்றும் வழங்குவர்.
கண்ணன் என்னும் பெயர்ச்சொல் --------------------------------------------ஆகும்.
தொழிற் பெயர் ------------------------ காட்டாது.
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது --------------------- எனப்படும்.
ஆயுத எழுத்து அளபெடுத்தல் எனப்படும்.
இணையத் தமிழில் கால இயந்திரத்தில் சென்று ---------------------------- சந்தித்தான்.
சங்ககால இலக்கிய வடிவம் ------------------------------------------ஆகும்.
சங்க காலத்தில் செய்யுட்பாடல்களில் ----------------------------பயன்படுத்தப்பட்டன.
தற்காலத்தின் மிகச்சிறந்த இலக்கிய வடிவம் ஆகும்.
தற்காலத்தின் -------------------------- வடிவங்களாக வசனகவிதை புதுக்கவிதை சிறுகதை நாவல் நாடகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
- உவம உருபு மறைந்து வந்தால் அதற்கு --------------------------- என்று பெயர்.
உரைநடை இலக்கியத்தில் உவமை:
‘ திருப்பரங்குன்றத்தின் அழகை பார்ப்பதற்கு என்று இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடி களைப் போல் வட துபறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்' --------------------- நூலில் ------------------.
கருத்திற்கும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கும்அழுத்தம் தருதல்: டாக்டர் மு.வ.
“ வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்களில் பல வேண்டும்; அரிசி காய் கனி முதலியவை வேண்டும்; உடை வீடு முதலியவை வேண்டும்; காசும் காகித நோட்டும் வேண்டும்; இன்னும் பல வேண்டும்; இவற்றிலும் ----------------------------.
19. --------------------------------------- 105 பாடல்கள் உள்ளன.இந்நூல் எட்டாம் நூற்றாண்டில் குலசேகர ஆழ்வாரால் பாடப்பட்டது.
20.ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து, அவற்றின் இடையில் சொல்லோ , உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது ------------------------------------------எனப்படும்.
21. தொகைநிலைத் தொடர் -----------------------வகைப்படும்.
22. --------------------மூன்று வகைப்படும்.
23.எழுவாய்த்தொடரானது பெயர், எழுவாய், --------------------, வினா எழுவாய் என மூன்று வகையாக அமையும்
சான்று தருக:
தொகாநிலைத் தொடர்.
தொகை நிலைத்தொடர்
நிரல் நிறைப்பொருள்கோள்
வினாப் பயனிலைத் தொடர்
பொதுமொழி
வினைமுற்றுத் தொடர்.
பெயரெச்சத் தொடர்.
வேற்றுமைத் தொடர்
முல்லைக்குரிய சிறுபொழுது.
உரிச்சொல் தொடர்
- பெருஞ்சித்திரனார்
- தேனை
- கனிச்சாறு தொகுதி 1.
- தோற்ற நிலையைக்
- நாற்று
- இரட்டுறமொழிதல் அணி
- பகுபதம்
- காலம்
- தனிமொழி
- ஒற்றளபடை
- சங்கப்புலவரைச்
- செய்யுள் பாடல்கள்
- அணிநலன்கள்
- உரைநடை
- இலக்கிய
- எடுத்துக்காட்டு உவமை அணி
- ' குறிஞ்சி மலர் / நா. பார்த்தசாரதி.
- அறிவும் வேண்டும்.
- பெருமாள் திருமொழியில்
- தொகாநிலைத் தொடர்
- ஒன்பது
- எழுவாய்த்தொடர்
- வினை எழுவாய்
- எழுவாய்த்தொடர்
- விளித்தொடர்
- பெயர் தொடர்வது
- பெயர்ச்சொல்லைக்
- முடிவது
- வேற்றுமை உருபுகள்
- இடைச்சொல்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத்தொடர்
- எட்டு / 8
- ஏழு / 7
- பெரும்பொழுது
- நாளின்
- வினா
- விடை
- வினா எதிர் வினாத்தாள் விடை
- அறிவினா
சான்று தருக:விடைகள்
- தொகாநிலைத் தொடர்.
குரங்கு தாவியது
காற்று வீசியது.
2. தொகை நிலைத்தொடர்
வீடு கட்டினான் . செங்கரும்பு
3. நிரல் நிறைப்பொருள்கோள்
வினாப் பயனிலைத் தொடர்
பேருந்து வருமா…?
மயில் ஆடுமா..?
பொதுமொழி
வினைமுற்றுத் தொடர்.
பாடினாள் கண்ணகி.
ஆடியது மயில்.
வேற்றுமைத் தொடர்
கட்டுரையைப் படித்தாள்.
வீட்டைக் கட்டினார்.
உரிச்சொல் தொடர்
நனி நன்று.
சாலச் சிறந்தது.
நனி, சால என்பன உரிச்சொற்கள்.
தமிழாசிரியர்
பழ. அன்புச்செல்வன்
சென்னை—600106.
Comments
Post a Comment