அமைதியே ஓர் அறம்...!
அமைதியே ஓர் அறம்.!
அல்லல் அலைச்சல் இன்றியே அன்பு மேலோங்கட்டும் . .!
ஆலமரமே என்றாலும் சோதனைகள் ஆயிரமாயிரம் உண்டு .!
இதயங்கள் தேடிடும் இரக்கத்தின் இன்பம் தொடரட்டும் .!
ஈரமண்போல என்றைக்கும் இன்பங்கள் தொடரட்டும் ..!
உயர உயரப்பறந்தாலும் ஒளிவட்டம் தோன்றாது..!
ஊக்கம் பிறந்துவிட்டால் உலகமே உனதாகும்.!
எண்ணத்தின் வலிமையென்றும் இமயம்போல் உயரவைக்கும்.!
ஏக்கப்பெருமூச்சு முயலாதரின் முடிந்த வாய்ப்பேச்சு..!
ஐயனாவேன் என்றுநின்றால் மாநிலம் நீயேயாள்வாய்...!
ஒற்றைச் சிந்தனையை ஒருநாளும் மறவாதே...!
ஓங்கி உலகளந்த உத்தமன்போல நீயும் வாழ வழிகளுண்டு..!
ஒளவையவள் சொல்போற்றி ஒளஷதம் நீங்கி வாழ்க..!!
செப்டெம்பரில் பள்ளி செல்ல உள்ள அனைத்து மாணவர்களுக்கும்..
மனங்கனிந்த வாழ்த்துகள் ...!!!
அன்புடன்
உங்கள் அன்பின் அன்பன்...!
அன்புச்செல்வன் பழ .
9444892969
பொன் . வார்ப்பட்டு
பொன்னமராவதி தாலுக்கா
புதுக்கோட்டை - மாவட்டம் .
ponanbu

Comments
Post a Comment