பயிற்சித்தேர்வு - II 2 டிசம்பர் 2025. வகுப்பு : பத்து

            கோலப்பெருமாள்   செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,  அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

    பயிற்சித்தேர்வு - II 

 வகுப்பு : பத்து                                                    தமிழ்த்தேர்வு                                   மதிப்பெண் : 40. 

         நாள் ;  1  டிசம்பர்  2025                                                                                     கால அளவு ;  90 நிமிடம். 


 பகுதி  - அ 

1. பின்வரும்  பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.                                                               5*1 = 5.

      சோழன் பகைவரை வென்று வீரத்தை நிலைநாட்டும்  தன்மையுடையவன்.  எனினும், இரவலர்பால் பேரருள்  பாராட்டுபவன்.  அவன்பால் சென்று , உணவில்லை என்று அடுகளம்   நீட்டினால் ,  அதில் சோறினைப்  பெய்யமாட்டான்.  அவனது தலைநகரான கருவூரையே  அதற்கு ஈடாகத்  தந்து விடுவான். பெண்கள் பூவிற்கு உரிய விலை தாருங்கள் எனக் கேட்டால் வைரங்கள் வழங்கிடுவான். எனவே,  பாரிசில்பெற விரும்புவோர் சோழனை நாடி வாருங்கள். பழையதான  இம்மண்ணின் உரிமை யாருக்கு  ? என்று ஆராய்ந்தால்  மண்பாண்டம் செய்யும்  குயவர்களிடம்  உள்ள மண்ணானது, பானையாகி யாருக்குப் பயன்தரப்போகிறது என்பதை யாராலும் கூறிட இயலாது. அதுபோல ,  சோழனின் கைப்பொருளான  நாடு யாருக்கு உரிமையுடையதாகும் என்பதைக்கூறிட  இயலாது. 

வினாக்கள்:

1. )  சோழன் எப்படிப்பட்டவன்  ?

அ)  நல்லவன் ஆ) உயர்ந்தவன்   இ) வீரமுடையவன் ஈ ) காயமுடையவன் 

2. ) சோழனுடைய நாடு  எத்தகையது   ?

அ) வளங்கள்  உடையது  ஆ)  பக்தி உடையது  இ) வறுமை ஈ ) ஆறுகளைக்  கொண்டது.

3. ) பெண்கள்  தரும்  பூவிற்கு  விலையாகத்   தரப்படுவது  எது..?

அ)  மாலைகள்  ஆ)  மதுரை மாநகர்  இ)  பொற்காசுகள்  ஈ) வைரங்கள் 

4. மண் பாண்டங்கள்   செய்வோர்   யார்  ?

அ) விறலியர்         ஆ)  குயவர்கள்         இ)  பாணர்கள்      ஈ ) கூத்தர்கள் 

5. இது எந்த மன்னனின்  சிறப்பினைக் கூறுகிறது ?

அ)   சேரர்கள்      ஆ)  சோழர்கள்      இ)  களப்பிரர்கள்     ஈ)  பாண்டியர்கள்    

 

                                                                              பகுதி  - ஆ  இலக்கணம் 

.சான்று தருக  ( எவையேனும் மூன்று மட்டும் )                                                                        3*1 = 3.

1.சொல்லிசை அளபெடை 

         அ) தீதொரீஇ   ஆ) படாஅபறை    இ) ஓஒதல்  வேண்டும் ஈ)  தூஉம் மழை. 

 2.     உவமைத்தொகை 

அ ) பலமுத்து ஆ) ஊறுகாய்   இ) கபிலபரணர்  ஈ)பஞ்சுவிரல்.  

3.    அன்மொழித்தொகை  

அ ) கயல் பாடினாள்  ஆ)சிவப்புப்புச்சட்டை பேசினார்

இ) தேர்ப்பாகன்   ஈ) கருங்குரங்கு.   

4.    தொழிற்பெயர் 

அ ) ஆடு     ஆ) ஆடினாள்   இ) ஆடினார்   ஈ) ஆடல். 

5.    வேற்றுமைத்தொடர் 

         அ ) கட்டுரை படித்தான்  ஆ) கட்டுரை  படி   இ)                                                                       கட்டுரையைப்படித்தான்  ஈ)  படித்தான் கட்டுரை. 

 

3.  நிரப்புக   ( எவையேனும் மூன்று மட்டும் )                                                                                  3*1 = 3.

1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து  பொருளை உணர்த்துவது ----------  எனப்படும்.

அ )தொடர் மொழி  ஆ) அளபெடை  இ)பொதுமொழி   ஈ) தனிமொழி   

2.    வினையடியுடன் விகுதி  சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ----------- தொழிற்பெயர்  ஆகும்.

அ ) அடுக்குத்தொடர்  ஆ) இரட்டைக்கிளவி  இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்  ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்   

3.    தொகைநிலைத்தொடர் ----------- வகைப்படும்.

அ ) ஆறு  ஆ) ஏழு   இ) எட்டு   ஈ) ஒன்பது 

4.    காலம் கரந்த ----------------   வினைத்தொகை  ஆகும்.

அ ) பெயரெச்சமே  ஆ) வினையெச்சமே   இ) தெரிநிலை வினைமுற்று   ஈ) குறிப்பு வினைமுற்று. 

   5. எழுவாய்த் தொடரானது  ------- வகையாக அமையும்.

அ ) இரண்டு ஆ) நான்கு   இ) மூன்று   ஈ) ஐந்து  


4. கூறிவாறு  செய்க   ( எவையேனும் மூன்று மட்டும் )                                                                          3*1 = 3.

1. கரும்பு தின்றான் (  எவ்வகைத் தொகை நிலை )

அ ) உவமைத்தொகை  ஆ) உம்மைத்தொகை  இ)வேற்றுமைத்தொகை   ஈ)வினைத்தொகை   

2. பரிசு பெற்றான்  ( வினையாலணையும் பெயராக்குக )

அ ) பரிசு பெறு  ஆ) பெற்றான்பரிசு  இ) பரிசு பெற்றவனைப்பாராட்டினர்   ஈ) பரிசுபெற்றான் பாராட்டினர்.    

3.பவளவாய்   ( உருவகமாக்குக )

அ )வாய்ப்பவளம்  ஆ) பவளம்   இ) வாய்ப்பவள்   ஈ) பல்லாகிய வாய்   

4. செந்தாமரை  ( எவ்வகைப் பண்புத்தொகை  )

அ ) வண்ணம்  ஆ) வடிவம்   இ) அளவு  ஈ) சுவை 

 5.  சிரித்துப்பேசினார் ( அடுக்குத்தொடராக்குக )

அ )  சிரித்துச் சிரித்துப்பேசினார். ஆ) அழுது  அழுது பேசினார்   இ) கலகலவெனச் சிரித்தார்  ஈ) பேசிப்பேசி சிரித்தார்.

 

5. இலக்கணக்குறிப்புத்  தருக   ( எவையேனும் மூன்று மட்டும் )                                           3*1 = 3.

1. உறாஅர்க்கு   உறுநோய் 

அ) செய்யுளிசையளபெடை       ஆ) அடுக்குத்தொடர்  இ) ஒற்றளபெடை  ஈ)வினையாலணையும்பெயர்.   

        2. அமுதா பாடினாள் 

அ ) வினையெச்சத்தொடர் ஆ) குறிப்பு வினையெச்சம்    இ)  தெரிநிலை வினைமுற்று  ஈ) தொடர்மொழி.   

        3.  கேட்ட பாடல்  

அ ) பெயரெச்சத் தொடர்  ஆ) வினையெச்சத்தொடர்  இ) எழுவாய்த்தொடர்  ஈ) வினைமுற்றுத்தொடர்.    

                 4. மாமன்னர் 

            அ ) பொதுமொழி  ஆ) இடைச்சொல்தொடர்   இ) உரிச்சொல்தொடர்  ஈ) குறிப்பு வினைமுற்று. 

               5.   கொல்களிறு  

அ ) வினைத்தொகை  ஆ) பண்புத்தொகை  இ) உம்மைத்தொகை   ஈ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை.   

                                                    பகுதி  - இ    ( இலக்கியம்  ).

6. பின்வரும்  கோடிட்ட இடங்களை நிரப்புக.                                                                                  2*1 = 2.

1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும்  அப்பொருள் 

               ------------------  காண்பது  அறிவு. 

            அ)  எப்பொருள் ஆ) மெய்ப்பொருள்  இ)இப்பொருள்   ஈ) நற்பொருள்   

           2. அருமை உடைத்தென் றசாவாமை  வேண்டும் 

            பெருமை ---------- தரும்.  

        அ) முயற்சி  ஆ) பயிற்சி   இ) உயர்ச்சி  ஈ) தளர்ச்சி   


7. பின்வரும்  செய்யுள் பகுதியைப்  படித்துப்  பொருள் உணர்ந்து, தொடர்ந்து  வரும் பல்வுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.                                               5*1 = 5.

                                                 முத்தமிழ் துய்ப்பதால்  முச்சங்கம் கண்டதால் 

                         மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம் 

                        அணைகிடந்தே சங்கத்தவர் காக்க  ஆழிக்கு 

                        இணைகிடந்த தேதமிழ் ஈண்டு.

வினாக்கள்:

           1. இப்பாடலில் ஒப்பிடப்படுபவை எவை?

அ ) முத்தமிழ்  - முக்கடல்    ஆ) கடல் - கப்பல்
இ) கடல் - சங்கு    ஈ)  கடல் - தமிழ் 

  2. தமிழிணைக் காப்போர் யார்?

அ)  சான்றோர் ஆ) மூத்தோர்   இ) புலவர்கள்    ஈ)  பெண்டிர் 

 3.அணிகலன்களாக இருப்பவை எவை ?

அ)  புராணங்கள் ஆ) காப்பியங்கள்  இ) சிற்றலக்கியங்கள்   ஈ) புறநானூறு  

 4.ஒரு பாடலை  ,  இருபொருள்  தருமாறு  அமைப்பது  -----------------  எனப்படும்.

அ) இரட்டுற மொழிதல் ஆ) இருபொருள்  இ) ஒப்பிடுதல்   ஈ)  கூட்டு 

5. பாடலாசிரியரின் இயற்பெயர் என்ன?

அ ) சந்தக்கவிமணி ஆ) தமிழழகனார்  இ) பாரதியார்   ஈ) சண்முக சுந்தரம்

 7 . பின்வரும்  செய்யுள்  வினாக்களில் ( இரண்டனுக்கு  மட்டும்)  விடையளி:      3*2= 6.

     1. பாரதியார் காற்றிடம்   வேண்டுவன யாவை ?

    2. தமிழின் தனிச்சிறப்புகளாகப்  பெருஞ்சித்திரனார்  கூறுவன யாவை  ?

     3.அதிவீரராம பாண்டியர்  கூறும் விருந்தினரை வரவேற்கும்  முறைகளை வரிசைப்படுத்தி எழுது  ?

    4) ஒழுக்கமுடைமை  பற்றி வள்ளுவர் கூறுவன  யாவை ?

  8 ) எவையேனும் இரண்டு உரைநடை  வினாக்களுக்கு மட்டும்  விடையளி              2* 5 =10.

  1.  தேவநேயப்பாவாணர் குறிப்பிடும் பூவின் நிலைகள்  மற்றும் இளம்பயிர் வகைகள் குறித்து எழுதுக. ? 

  2.  மனிதர்களால் காற்று  மாசடைவதற்கான  காரணங்களையும் ,  அதற்கான  தீர்வுகளையும்  பட்டியலிடுக.     

   3. இலக்கியங்களால்   அறியப்படும் வறுமையிலும்  விருந்து போற்றிய தமிழரின் பண்பு குறித்து  விளக்கி வரைக.  

 

வாழ்க வளமுடன்

      

                     

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

பருவத்தேர்வு II MARCH- 2024-25.