உரைநடை - இயல் - 1 2025 JUNE உரைநடையின் அணிநலன்கள்

    உரைநடை - இயல்  - 1

                                                 உரைநடையின் அணிநலன்கள்

குறிப்புச் சட்டகம் - முன்னுரை - இலக்கணம் - அணிநலன்  - புதிய உத்திகள்

முரண்படுமெய் - எதிரிணை இசைவு - சொல் முரண் - முடிவுரை.


முன்னுரை:

சங்கப் புலவர்கள் இலக்கியங்களைச் செய்யுட் பாக்களாகவே அமைத்தனர்.

அப்பாடல்கள் அகம் புறம் என்று வகைப்படுத்தப்பட்டன. தற்காலத்தில்

உரைநடை இலக்கிய வடிவத்தில் நாவல்,சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை எனும்

வடிவில்  வளர்ச்சி பெற்றுள்ளது. உரைநடையின் அணிநலன்கள் பற்றி

இக்கட்டுரையில் காண்போம்.


அணிநலன்:

இலக்கியம் என்பது படிப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பம் வேண்டும்.

படைப்பாளி சொல்ல வரும் கருத்தை மிகத்தெளிவாக எடுத்துரைப்பதற்குஅணிநலன்கள் துணை நிற்கின்றன. தொல்காப்பியர் தனது இலக்கண நூலில்

உரைநடை பற்றியும் குறித்துள்ளார்.சங்கப் பாடல்களில் உவமை அணி பயன்படுத்தப்பட்டது. பின்னர் வந்த தண்டி

ஆசிரியர் உவமை, உவமேயம் இரண்டிற்கும் வேற்றுமை தோன்றாதபடி பாடுதலை

"உருவகம்" என வகைப்படுத்தினர். இலக்கியங்கள் உயிரோட்டமாகவும்   உணர்ச்சி

உடையதாகவும் பொருள்புரிதலுக்கும் இருப்பதற்கு அணிநலன்கள் உதவுகின்றன.



புதிய உத்திகள்:

கால மாற்றத்திற்கு ஏற்ப உரைநடை இலக்கியம் பல புதுமைகளைப் பெற்று 

சிறப்பாக வளர்ந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

உவமை:

“ திருப்பரங்குன்றத்தின் அழகை காண்பதற்கு என்றே இயற்கை பதித்து

வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப்போல் வடபுறம், 

தென்புறமும் நீர் நிறைந்த இரு கண்மாய்கள் " என்று எழுதியுள்ளார்

நா. பார்த்தசாரதி தனது ' குறிஞ்சி மலர் '  நூலில் .


இலக்கணை: ( analogy )

அஃறிணைப்பொருள்கள் எல்லாம் சொல்வது போலவும் , கேட்பது போலவும்

கற்பனை செய்துகொண்டு இலக்கியம் படைப்பது இலக்கணை எனப்படும்.

தமிழ்த் தென்றல் திரு வி.கல்யாண சுந்தரனார் இந்த யுத்திஅழகாகப்

பயன்படுத்தியுள்ளார்.

“ சோலையில் புகுவேன்; மரங்களில் கூப்பிடும்; விருந்து வைக்கும்;

ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல் என் விழுதைப் பார் அரசுக்கு இது உண்டா ? என வினவும்..,..என்று குறிப்பிட்டுள்ளார்.

எதுகை மோனை:

வாக்கியங்கள் எதுகையும் மோனையும் அமையும் படியாக எழுதுதல்.

இரா. பி. சேதுப்பிள்ளை   தனது, தமிழ் இன்பம்   நூலில் ,

‘ தென்றல் அசைந்து வரும் தமிழ்நாட்டில் அமைந்திருந்த குற்றாலம்.

மழை வளம் படைத்த பழம்பதி ஆகும். அம்மலையில் கோங்கும் வேங்கையும்

ஓங்கி வளரும்……' என எதுகை மோனையை அமைத்துள்ளார்.


முரண்படு மெய்மை  :  (  paradox  )

உண்மையில் முரண்படாத மெய்மையைச்  சொல்லுவது முரண்படு மெய்மை  ஆகும்.

" இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கும் நாம் பயப்பட

வேண்டாம்."


சொல் முரண்: (  oxymoron   )

முரண்பட்ட சொற்களை எழுதுதல் சொல் முரண் எனப்படும்.

“ கலப்பில்லாத சுத்தப் பொய் “

எதிரிணை இசைவு: ( antithesis)

எதிரும் புதிருமான கருத்துக்களை அமைத்து எழுதுதல் எதிர்வினை இசைவு

எனப்படும்.

தோழர்  ப. ஜீவானந்தம்

“  குடிசைகள் ஒருபக்கம் ;  கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம்;

புளித்த ஏப்பம் மறுபக்கம்;  மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்த

தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு

எப்போது விமோசனமோ ? தோழர்களே ! சிந்தியுங்கள்  “ என்று எழுதுகிறார் தோழர்.


முடிவுரை:

சங்ககாலத்தில் செய்யுள் பாக்கள் சிறப்புற்று இருந்தன. அதுபோல தற்காலத்தில்

உரைநடை இலக்கியம் வளர்ந்துள்ளது. செய்யுள் பாக்கள் தந்த இலக்கிய நயத்தை

உரைநடை இலக்கியம் தருகிறது என்பதை உரைநடையின் அணிகநலன்கள்

பாடப்பகுதியின் மூலமாக நாம் இங்கு கண்டோம்.


வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம்..!

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )