மனிதகுல நலனுக்காக*
- Get link
- X
- Other Apps
மனிதகுல நலனுக்காக*
முனைவர். ஷண்முக மூர்த்தி லக்ஷ்மணன். துணை வேந்தர் - சித்தவேத பல்கழைக்கழகம்
பிரபஞ்சம் விண்வெளி சிந்தனையில் இருந்து தோன்றியது என விளக்குகின்றன. விண்வெளியின்
அதிர்வுகள் விண் (ஆகாசம்) போன்ற ஆற்றல் துகள்களாக உருவாகி, அது ஐந்து நிலையிலான
பொருட்களாக (ஆகாயம், காற்று, நெருப்பு , நீர், மண் ) மாறுகின்றன. இவை மீண்டும்
விண்வெளிக்குள் இணைந்து, ஐந்துபண்புகளாக (பஞ்சதன்மாத்திரை): அழுத்தம், ஒலி,
வெப்பம்/ஒளி, சுவை மற்றும் மணம் ஆகியவற்றை உருவாக்குகின்றன. இந்த உணர்வுகளை
மனிதர்கள் ஐந்து அறிவியல் புலன்களின் மூலம் அனுபவிக்கின்றனர்.
நிகழ்வு சாராம்சம்
திரு. திருபுவனம் ஆத்மநாதன் தலைமையில் நடக்கும் நிகழ்வில், இந்தக் கவிதை சித்தர்கள்
மற்றும் மனிதகுல நலனுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.
இந்தக் கவிதையை கர்நாடக இசை மற்றும் பண் இசை வல்லுநர்கள் பாடி
மனிதகுலத்திற்காக பரப்பிடுமாறு கோருகிறோம்.
*பஞ்ச தன்மாத்திரை* கீதம்
முனைவர் ஷண்முக மூர்த்தி
மண்மாமலை மாணிக்கமே
மண்மாமலை மாணிக்கமே
மணமாய் மலர்ந்த மாமலரே
மண்மாமலை மாணிக்கமே
எழுவாய் பலகோடி எண்ணங்களாய்
சுடர் ஓடிடும் பம்பரம் பார்பரமே
நீர்கடல் நீலகண்டன்
நீர்கடல் நீலகண்டன்
சுவையாய் நிறைந்து நீக்கமர
நீர்கடல் நீலகண்டன்
வேறொன்றும் வேட்கை உமக்கில்லை காண்
அலை ஆடிக்கொண்டே அடங்கிடுமே
தீ பொறி தீ மலராய்
ஒளியாய்த் திகழ்ந்த தீச்சுடரே
உயிரோடும் கலந்த அகக்கனலே
பல்லாயிரக் கோடி சூரியனே
காற்றாய் கரைந்தனவே
ஒலி ஓய்ந்திடும் ஓர்வரமே
மூச்சோடும் பேச்சோடும் கலந்தனவே
நீ நின்றுகொண்டால் நிரந்தரமே
விண்ணோடு விண்டனரே
உணர்வின்றி உடலில்லை
கவிதை சாராம்சம் (பஞ்சதன்மாத்திரை கீதம்)
பூமியின் (மண்மாமலை மாணிக்கம்) மகத்துவத்தை பாராட்டி தொடங்குகிறது.
தண்ணீரின் (நீர்கடல் நீலகண்டன்) மேன்மையை விவரிக்கிறது.
அடுத்ததாக தீ (தீ பொறி தீ மலர்) மற்றும் அதன் ஒளி/வெப்பத்தை ஆராதிக்கிறது.
காற்றின் (காற்றாய் கரைந்தனவே) தாக்கத்தை மற்றும் மூச்சின் தொடர்பை விரிவாகக் கூறுகிறது.
இறுதியில், விண்வெளி (விண்ணோடு விண்டனரே) மற்றும் அதன் பரவலான அதிர்வுகளை விளக்குகிறது.
இந்த கவிதை சித்தர் தத்துவத்தின் ஆழமான அறிவையும், அதிர்வுகள் மற்றும்u பொறிகள் பற்றிய புரிதலையும், கலை மற்றும் அறிவியல் பார்வையில் தொகுத்து மாட்சிமையாக்குகிறது.
ReplyForward Add reaction |
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment