பிறந்தநாள் 2024

குழந்தைகள் பிறந்தநாள்  விழாப்  பாடல்.


நீங்கள்  இன்று பிறந்தீர்  இங்கு  மலர்ந்தீர் 
நீலவான்    வளர்பிறை போல   மண்ணில் வளர்வீர்
பூவுலகம்  பூத்திட என்றும்  புன்னகை  பூத்திருப்பீர் 
புதுக்காலை மலர்போல  மணத்தைப் எங்கும்  பரப்பிடுவீர்  

அன்பின்  வடிவே  அழகின் உயிர்ப்பே  
அன்னை வளர்ப்பே வாழ்த்துகிறோம்  உங்களை   வாழ்த்துகிறோம்..!

 அகிலத்தின் ஆருயிரே அகண்டத்தின் அன்புயிர்ப்பே  
 ஆளப் பிறந்தவரே   வாழ்த்துகிறோம்   உங்களை வாழ்த்துகிறோம்..!

                                                                                                                        ( கீழ்ஸ்த்தாயி ) 

சரித்திரத்தின் நாயகரே  சாதனைகள்  நாளும்  புரிவோரே
சங்கீதச்  சந்தங்களே   வாழ்த்துகிறோம் உங்களை  வாழ்த்துகிறோம்.! 

கலைகளில்  சிறந்தோங்கி  கல்வியில் மேலோங்கி 
கனவுகள்  நனவாக  வாழ்த்துகிறோம்  உங்களை வாழ்த்துகிறோம்.!

                                                                                                                  ( மேல்ஸ்த்தாயி ) 


இறையருள் கூடி என்றும்  இன்புற்று நீவிர்  வாழ்க..! 
 பல்கலைக்    கற்றுச் சிறந்து  பல்லாண்டு நீவிர் வாழ்க..!  
இன்பத்தின் புகலிடமாய்  என்றும்  நீவிர்  வாழ்க..!பாரோர்  போற்ற நீவிர்   பலநூறு ஆண்டு  வாழ்க வாழ்க..! 

                                                                                                                            ( தொகையறா ) 

                                                                    கவிஞர்  வாரூர்ச்செல்வன்.
 
                                                                                                     (      தொடரும் .........)

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )