மாதிரித்தேர்வு - 1 - டிசம்பர் 2024. ( இயல் 3,4,5 )
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
------------------------------------------------------------------------------------------------------
மாதிரித்தேர்வு - 1 - டிசம்பர் 2024. ( இயல் 3,4,5 )
வகுப்பு : பத்தாம் தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 80.
. . 2024 கால அளவு ; 3 மணி .
பகுதி - அ
1) பின்வரும் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பல்வுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
மரங்கள் நமது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அரணாக உள்ளன. மரங்கள்தான் மண் வளத்தைப் பேணிப் பாதுகாக்கின்றன. மரங்கள் பகற்பொழுதில் உயிர்க்காற்றை நமக்குத் தருகின்றன. புவியின் வெப்பத்தைத் தணிக்க உதவுகின்றன. ஆனால், மனிதர் சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அதிலிருந்து காகிதம், இரப்பர் , கோந்து, மேஜை நாற்காலி போன்றவற்றைச் செய்து விற்கின்றனர். மரங்கள் அழிவதால் மனிதகுளம் பெரும்சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்தியாவில் 60% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால், அது நாளும் குறைந்து வருக்கின்றது. அசோகா சக்கரவர்த்தி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மரங்களின் பெருமையை உணர்ந்து, சாலையின் இரு மருங்கிலும் எண்ணற்ற மரங்களை நட்டார். எனவே, மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அரணாக உள்ளது. மரங்கள் மருத்துவக்குணம் வாய்ந்தவை.
வினாக்கள் :
1. சுற்றுச்சூழலினைப் பாதுகாக்கும் அரண் எது ?அ) அரசன் ஆ) மக்கள் இ) மரங்கள் ஈ) காவலர்கள்
2. மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவது எது ?
அ) ஆணி ஆ) மண்வெட்டி இ) காகிதம், ரப்பர் ஈ) தகரப்பெட்டி
3. சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டவர் யார் ?
அ ) சோழன் ஆ) அசோகர் இ) பல்லவர்கள் ஈ) பாண்டியர்கள்
4. மரங்களின் தனிக்குணம் எது ?
அ) மருத்துவக்குணம் ஆ) கூழாக்குவது இ) காற்றைத்தடுப்பது.
ஈ) பொருளாவது.
5. மரங்கள் அழிவதால் எத்தகைய சூழல் உருவாகும் ?
அ )நல்ல காற்று ஆ)துன்பம் இ)பெரும்சவால்கள் ஈ) கதவு.
2. பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.
அறிவினைத்துலங்க வைக்கும் பல கருவிகளுள் நூல் நிலையமும் ஒன்றாகும். கணக்கற்ற அறிஞர்கள் தங்கள் எண்ணங்களை, கண்டுபிடுப்புகளை , நூல்களாக எழுதி உள்ளனர். அந்த நூல்களை எல்லாம் முறையாகவும் , வரிசையாகவும், அழகாகவும் அடுக்கி வைத்துப்பயன்படுத்தும் ஓர் இடமே நூலகமாகும். நூல் நிலையத்தில் பலவகையான நூல்கள் இருக்கும். அவை இலக்கியம், இலக்கணம், வரலாறு, அறிவியல், புவியியல், உயிரியல், கணினியியல், கதை, கட்டுரை, புதினம், அகராதி, கலைக்களஞ்சியம் மற்றும் திறனாய்வு நூல்கள் எனப் பல்வேறு பொருள்களைப் பற்றிய நூல்கள் இடம்பெற்றிருக்கும். அதனை வாங்கிப் படிக்க முடியாதவர்கள், நூல் நிலையத்தில் வந்து படித்துப் பயன் பெறலாம். நூல்நிலையத்தில் பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், குழந்தைகள் நூலகம், அரசுப் பொதுநூலகம், நடமாடும் நூலாகும், நூல்களை வாடகைக்கு விடும் நூலகம் எனப் பலவகைகள் உண்டு . நூல் நிலையங்கள் மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ளப் பெரிதும் பயன்படுகின்றன. மாணவர்கள் நூல்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். கண்டது கற்றால் பண்டிதன் ஆகலாம் என்பதை உணர்ந்து நூலகம் சென்று படித்துப் பயனடைவோம் .
வினாக்கள்:
1. அறிவினைத் துலங்கச்செய்யும் கருவி எது?
2. அழகாகவும், வரிசையாகவும் நூல்கள் வைக்கப் பட்டிருக்கும் இடத்தின் பெயர் என்ன ?
3. நூல்கள் எவற்றை வளர்க்க உதவும் ?
4. கற்றலின் சிறப்பினை உணர்த்தும் பழமொழி யாது ?
5. மாணவர்களுக்கான சிறந்த பழக்கம் எது..?
இலக்கணம்
3. .சான்று தருக ( மூன்றனுக்கு மட்டும் ) 3*1 = 3.
1. வினைமுற்றுத்தொடர்
அ)பாடினாள் கண்ணகி ஆ) கம்பர் கவிஞர்
இ) காவிரி பாய்ந்தது ஈ) பெருந்துவருமா ?
2. எழுவாய்த்தொடர்
அ) நண்பா எழுது ஆ) கேட்ட பாடல் இ) இனியன் கவிஞர்
ஈ) மற்றொன்று
3. படர்க்கைப்பெயர்
அ ) நான்,யான் ஆ)அவன், அவர்கள்
இ) யாம் , நாம் ஈ) நீ, நீவீர் .
4. கொடை வினா
அ )சிங்கப்பூருக்குச் செல்வாயா.?
ஆ) திருக்குறளை எழுதியவர் யார் ?
இ) புதுக்கோட்டைக்கு வழி எது?
ஈ) உன்னிடம் பேனா இருக்கிறதா?.
5. எழுவாய்த்தொடர்
அ) வந்த கந்தன் ஆ)வா கந்தா இ)கந்தன் வந்தான்
ஈ) வருகின்றான் கந்தன் .
4. நிரப்புக ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 3*1 = 3.
1. தொகாநிலைத் தொடர் ------------ வகைப்படும் .
அ ) 4 ஆ) 6 இ) 9 ஈ) 7
2. தான் அறியாத ஒன்றை, அறிந்து கொள்வதற்காக வினவுவது
அ ) ஐய வினா ஆ) அறிவினா இ) அறியா வினா
ஈ) கொளள் வினா.
3. இடைச்சொல்லுடன், பெயரோ? வினையோ? தொடர்வது ------- ஆகும்.
அ) வினையெச்சம் ஆ) பெயரெச்சம் இ) உம்மைத்தொகை ஈ) இடைச்சொல்தொடர்
4. செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள்கொள்ளும் முறைக்குப் ---------------- என்று பெயர் .
அ ) பொருள்கோள் ஆ ) செய்யுள்நிலை இ ) விளக்கநிலை ஈ ) பொருள்கொள்ளுதல் .
5. பொருள்கோள் -------------- வகைப்படும்.
அ ) 2 ஆ) 4 இ) 8 ஈ) 7
5. கூறிவாறு செய்க ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 4*1 = 4.
1. மலர் மலர்ந்தது ( எவ்வகைத் தொடர் )
அ )தனிமொழி ஆ) விளித்தொடர் இ) எழுவாத்தொடர்
ஈ) வேற்றுமைத்தொடர் .
2. செங்கதிரோன் ( இதில் உள்ள பண்புத்தொகையை எழுது )
அ ) அளவு ஆ) வடிவம் இ)வண்ணம் ஈ) சுவை .
3. வண்டி - வினைத்தொகை ஆக்குக.
அ) மாட்டு வண்டி ஆ) வில் வண்டி இ) கட்டை வண்டி ஈ)தள்ளு வண்டி .
4. சல சலத்தது ( சொல்வகையை எழுதுக )
அ) இரட்டைக்கிளவி ஆ) அடுக்குத்தொடர் இ) உணர்ச்சித்தொடர் ஈ)உரிச்சொல்தொடர் .
5. ஆலத்து மேல குவளை குளத்துல
வாலின் நெடிய குரங்கு ----( பொருள்கோள் வகை )
அ ) கொண்டு கூட்டுப்பொருள்கொள்
ஆ) நிரல் நிறைப்பொருள்கொள்
இ) ஆற்றுநீர்ப்பொருள்கோள்
ஈ) மொழிமாற்றுப்பொருள்கொள்.
6. இலக்கணக்குறிப்புத் தருக ( எவையேனும்
மூன்றனுக்கு மட்டும் ) 3*1 = 3.1. " கடைக்குப்போவாயா ?" எனும் வினாவிற்கு " போவேன்" என்று விடையளிப்பது,
அ)நேர்விடை ஆ) சுட்டுவிடை இ)இனமொழி விடை ஈ) ஏவல் விடை .
2. இராமாயணத்தை எழுதியது யார் ? ( என மாணவன் ஆசிரியரிடம் வினவுகிறான் )
அ ) ஏவல் வினா. ஆ) அறியா வினா. இ) அறிவினா
ஈ) ஐய வினா .
3. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பு பயனும் அது.
அ ) ஆற்றுநீர்ப்பொருள்கோள் ஆ)தாப்பிசைப்பொருள்கோள்
ஈ) கொண்டுகூட்டுப்பொருள்கோள் இ ) நிரல்நிறைப்பொருள்கோள்
4. தேர்ப்பாகன்
அ ) வேற்றுமைத்தொகை ஆ) உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை இ) உம்மைத்தொகை ஈ)உம்மைத்தொகை
5. கத்தும் குயிலோசை - சற்றே வந்து
கதிர் படவேணும்..
அ ) காலவழு ஆ) பால்வழு இ) திணைவழு ஈ) மரபு வழுவமைதி .
7. கோடிட்ட இடங்களை நிரப்புக. ( எவையேனும்
மூன்றனுக்கு மட்டும் ) 3*1 = 3.1. பொருளல் லவரைப் ------------------ செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
அ) பொருளாகச் ஆ) மருளாகச் இ) இருளாகச்
ஈ) தெளிவாகச்
2. --------------------------- பாடற் கியைபின்றேல் : கண் என்னாம்
காண்ணோட்டம் இல்லாத கண்.
அ ) மண்ணென்னாம் ஆ) எண்ணென்னாம்
இ) புண்ணென்னாம் ஈ) பண்ணென்னாம்
3. அருமை உடைத்தன் றசாவாமை வேண்டும்
பெருமை ---------- தரும்.
அ) பயிற்சி ஆ) உயர்ச்சி இ)முயற்சி ஈ) சுழற்சி
4. குற்றம் இலானாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் -------- உலகு .
அ)சுற்றும் ஆ) சாற்றும் இ) சாரும் ஈ) செய்யும்
பகுதி - ஆ
8. பின்வரும் செய்யுள் பகுதியைப் படித்துத் தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக.
5*1 = 5.
பெண்ணினைப் பானகம் கொண்ட பெருந்தகைப் பரம யோகி
விண்ணிட மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்
புண்ணிய சிரியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ
எண்ணிய பெரியோருக்கு என்ன ஏத்தினான் இறைஞ்சினானே ..!
1. இப்பாடலின் ஆசிரியர் யார் ?
அ ) ஒளவையார் ஆ) கபிலர்
இ) இளங்கோவடிகள் ஈ) பரஞ்சோதி முனிவர்
2. பாடல் இடம்பெற்ற நூல் எது ?
அ) நாலடியார் ஆ)நன்னெறி இ)திருவிளையாடற் புராணம்.
ஈ)நறுந்தொகை
3. பாடல் யார் கூற்றாக அமைந்துள்ளது ?
அ) சிவன் ஆ) குலேசபாண்டியன் இ) பார்வதி ஈ) கபிலர்
4. இறைவனுக்குப் பெருமை சேர்ப்பது எது ?
அ) பொறுத்தல் ஆ) ஆக்கல் இ) அழித்தல் ஈ) காத்தல்
5. சிவனாரின் இடப்பக்கத்தில் இருப்பவர் யார் ?
அ) கலைமகள் ஆ) அம்மன் இ) கண்ணகி ஈ) பார்வதி தேவி
9 . ) பின்வரும் செய்யுள் வினாக்களில் மூன்றனுக்கு மட்டும் விடையளி - 3 * 3 = 9.
1. விருந்தினரை வரவேற்கும் முறைகளை எழுது ?
2. பரிபாடல் கூறும் உலகத்தோற்றம் பற்றிய குறிப்புகள் யாவை ?
3. குலசேகராழ்வார் இறைவனிடம் வேண்டுவது யாது ?
4. கல்வியின் சிறப்புப் பற்றி நீதிவெண்பா கூறுவது யாது ?
5. இறைவனிடம் இடைக்காடனார் முறையிட்டது யாது ?
10) எவையேனும் மூன்று உரைநடை வினாக்களுக்கு மட்டும் விடையளி - 3 * 5 =15.
1. வறுமையிலும் விருந்து போற்றிய தமிழரின் பெருமைகள் குறித்து எழுது ?
2. மொழிபெயர்ப்பின் செம்மை குறித்த செய்திகளை எழுது ?
3. மின்னணுப்புரட்சியால் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் யாவை ?
4. மொழிபெயர்ப்பின் இன்றியமையாத் தேவை குறித்து எழுது ?
5. இலக்கியங்கள் காட்டும் விருந்து போற்றல் குறித்து எழுதுக .
11 ) பின்வரும் துணைப்பாடத் தலைப்பிற்கு ஏற்ற கருத்துகளைக் கதை வடிவில் ஒன்றிற்கு மட்டும் விடை எழுதுக. (7 ).
1 ) மேரிஜேனின் வாழ்வியல் மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து எழுது ?
2 ) விண்ணைத்தாண்டிய நம்பிக்கை உணர்த்திடும் அறிவியல் உண்மையை எழுதுக.
3) அன்னமய்யா கதாபாத்திரம் உணத்தும் பண்புநலன்கள் யாவை ?
12 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக . 1 * 3 =3.
13. ஏதேனும் ஒரு கடிதத்திற்கு விடை தருக. 1 *8 = 8.
அ ) அறிவியல் தமிழ் மன்றம் நடத்திய பேச்சுப் போட்டியில் முதற்பரிசு பெற்றது குறித்து, வெளியூரில் வசிக்கிக்கும் உனது நண்பனுக்குக் கடிதம் வரைக.
( அல்லது )
ஆ )
நீங்கள் வசதிக்கும் பகுதியில் விளையாட்டுத்திடல் அமைத்துத் தரவேண்டி விளையாட்டுத்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
( கடிதம் எது ஆயினும் உனது முகவரி: பேரரசன் / பேரரசி - கதவு எண் : 27, பாரதியார் யார் தெரு , கண்ணதாசன் நகர், திருநெல்வேலி -2 எனக்கொள்க. )
14 ) பின் வருவனவற்றுள் ஏதேனும் ஒரு தலைப்பில் கொடுக்கப் ள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக ( 6 ).
1) முன்னுரை - இலக்கியங்கள் - காலந்தோறும் மாற்றம்- காப்பியங்கள் - புதுக்கவிதை - ஹைஹூ கவிதை - உரைநடை - - முடிவுரை .
( அல்லது )
2) முன்னுரை - அறிவியல் வளர்ச்சி - போக்குவரத்து - மருத்துவம் - கல்வி வளர்ச்சி - தகவல் பரிமாற்றம் -முடிவுரை .
( அல்லது )
3) முன்னுரை - சங்ககாலப் புலவர்கள் - சமையல் - பெண்கல்வி - அறிவு வளர்ச்சி - சரிநிகர் சமம் - வேலைவாய்ப்பு - பொருளாதார வளர்ச்சி - முடிவுரை .
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!
Comments
Post a Comment