கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
இடைப்பருவத்தேர்வு - II ( 2024 - 2025 )
வகுப்பு : பத்தாம் மதிப்பெண் :40.
தேர்வு நாள் : 15-10 -2024 காலம் : 90 நிமிடம்.
1. இலக்கணம்
அ .நிரப்புக 3 * 1 = 3.
1. ஆறறிவு உடைய மக்கள் உயர்திணை என்றும், பிற உயிரினங்கள்
அனைத்தும் ----------- என்றும் அழைக்கப்படுகின்றன.
அ) ஒன்றன் பால் ஆ) உயர்திணை இ) பலவின்பால் ஈ ) அஃறிணை
2. ஒன்றன் நிலையைச் சுட்டும் இடங்கள் -------------- வகைப்படும்.
அ) 4 ஆ) 6 இ) 8 ஈ ) 3
3. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் -------- எனப்படும்.
அ) வழுவமைதி ஆ) வழு இ) வழாநிலை ஈ ) பேச்சுவழக்கு
ஆ. சான்று தருக 3 * 1 = 3.
1. முன்னிலைப் பன்மை : --------------.
அ) அவைகள் உண்டன. ஆ) நாங்கள் உண்டோம்.
இ) நீங்கள் உண்டீர்கள். ஈ ) யாம் உண்டோம்.
2.பலர்பால் : -----------------------.
அ) பறவைகள் ஆ) அவைகள் இ) பலகைகள் ஈ ) மக்கள்
3. பால்வழு : ------------------.
அ) மாடு வந்தது . ஆ) அவர்கள் நின்றார்கள் . இ) செழியன் வந்தாள்.
ஈ ) தலைவர்கள் பேசினர்.
ஈ. நகவளைவில் குறித்தவாறு செய்க. 3 * 1 = 3.
- இ ராமன் வந்தது . ( வழுவின் வகையினை எழுதுக )
அ) திணை வழு ஆ) மரபு வழு இ)கால வழு ஈ ) பால்வழு.
2. கத்துங்குயிலோசை சற்றே எந்தன் காதில் விழவேண்டும்.( வழுவா ! )
அ) ஆம் . ஆ) திணைவழு. இ) இல்லை . ஈ) பால்வழு
3. நாங்கள் கண்டோம் . ( படர்க்கைப் பன்மை ஆக்குக )
அ)இராமன் கண்டான் . ஆ) அது கண்டது . இ) அவர்கள் கண்டார்கள்.
ஈ ) நீங்கள் கண்டீர்கள்.
2. பாடல் வினா விடை: 5*1 = 5
" செந்தீச் சுடரிய ஊழியும் ; பனியோடு
தண்பெயல் தலையிய ஊழியும் ; அவையிற்று
உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு ,
மீண்டும் பீடு உயர்வு ஈண்டி ............"
வினாக்கள் :
1. இப்பாடல் இடம்பெற்ற நூல் எது ?
அ) பரிபாடல் ஆ) கலித்தொகை இ) புறநானூறு ஈ ) அகநானூறு
2. பாடலின் ஆசிரியர் யார் ?
அ)கபிலர் ஆ) கம்பர் இ) கிழார் ஈ ) கீரந்தையார்
3. தண்பெயல் , பீடு - பொருள்தருக.
அ) மழை , மேல் . ஆ) மழைபெய்து , சிறப்பு. இ) குளிர்ந்த மண் , கீழே.
ஈ ) தண்ணீர் , படை.
4. பாடல் எப்பொருள் பற்றிப்பேசுகிறது ?
அ) காற்றின் தோற்றம். ஆ) பூமியின் தோற்றம். இ) மண்ணின் தோற்றம்.
ஈ ) சூரியனின் தோற்றம்
5. இந்நூல் வகை , எட்டுத்தொகையா ? பத்துப்பாட்டா ?
அ) இல்லை ஆ) தனிப்பாடல் இ) தமிழ்ப்பாட்டு ஈ ) எட்டுத்தொகை.
. செய்யுள் வினாக்கள் 3 * 2 = 6.
- கல்வியின் சிறப்புகளாக நீதி வெண்பா கூறுவன யாவை ?
- திருவாய் மொழியில் கூறப்படும் பக்தியின் உயர்நிலை யாது.?
4. உரைநடை வினாக்கள் 5 * 2 =10.
1. நுண்ணறிவுப்புரட்சி என்றால் என்ன ? அது நம்மை எவ்வாறு வந்தடைகிறது ?
2. செயற்கை நுண்ணறிவின் பொதுவான கூறுகள் யாவை? ?
5. துணைப்பாடக் கட்டுரை : 7 *1 = 7.
விண்ணைத்தாண்டிய தன்னம்பிக்கை - விளக்கிடும் செய்தி யாது ?
6. காட்சியைக் கண்டு கவினுற வரைக 3 * 1 = 3.
Comments
Post a Comment