இயல் 3 கோபல்லபுரத்து மக்கள் __ கி. இராஜநாராயணன்.

 இயல் 3

 

கோபல்லபுரத்து மக்கள் __ கிஇராஜநாராயணன்.

 

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

கிராமத்து மக்கள் 

அன்னமைய்யா

விருந்தோம்பல்

முடிவுரை

 

முன்னுரை;

                           விருந்தோம்பலில் சிறந்தவர்கள் தமிழர்கள். கிராமத்து விவசாயகளிடத்திலும் விருந்தோம்பும்  பண்பு  அமைந்திருப்பதை  இக்கதை விளக்குகிறதுஎளிமையான உணவே எனினும் அதைப் பகிர்ந்து உண்ணும் பண்பு உயர்ந்தது. விவசாயிகளின் விருந்தோம்பலை  அழகான கதையாக்கி உள்ளார் கரிசல் படைப்பாளி கிஇராஜநாராயணன்.

கிராமத்து மக்கள் :

விவசாயத்தையே  உயிராகக் கொண்ட மக்கள் வாழும் ஊரது சாலையோரமாக  புஞ்சைநிலத்தில் பாய்ச்சல் அருகு எடுத்துக் கொண்டிருந்தார்கள்  .வேலைக்கு இடையில்   கஞ்சி குடிக்க அமர்ந்திருந்தனர்அந்நேரத்தில் 
அன்னமையா,  ஒரு சந்நியாசியை அழைத்துக் கொண்டு வருவதைக் 
கண்டனர்.   சாலையோரமாக அமைந்திருந்த  கரிசல்  நிலம் அது. அதனால் அடிக்கடி யாராவது  ஒருவர் அவர்களோடு உணவு 
உண்ணுவது  இயல்பாகும்.பெரும்பாலும் அச்சாலை வழியாகச்செல்லும் சாமியார்களோ  அல்லது  மொழியே தெரியாத தேசாந்திரிகளோ 
கஞ்சியையோ தண்ணீரையோ , வாங்கிச் சாப்பிடுவது வழக்கமாகும்.
                                                                                                                                                                                    

 அன்னமய்யா;

                             புளிய மரத்தடியில் படுத்திருந்தவனைப் பார்த்தார் 

அன்னமய்யாஅழுக்கு உடையும் தாடியும் மீசையுமாகச் சாமியாரைப் 

போலத் தெரிந்தான் .  அருகில் சென்று பார்த்தபோதுதான் அவன் ஒரு  வாலிபன் என்பதை அறிந்தார் கொண்டார் அன்னமய்யா

ஏதாவது உண்ணக் கிடைக்குமா எனக் கேட்டவனைத் தன்னுடன் 

அழைத்து வந்தார்அவனோ நடக்கவே முடியாமல் மெதுவாக நடந்து 

வந்தான்.  பசியால் அயர்ந்து இருந்தான்வேப்பமர நிழலில் மூடி 

வைக்கப்பட்டிருந்த மண் கலயத்தில் இருந்த சோற்றுநீரை அவனிடம் 

தந்து குடிக்கச் செய்தார்.தேங்காய்ச் சிரட்டையில் சோற்றின் மகுளி   

மேலே வந்ததும் வார்த்துஉண்ணக்  கொடுத்தார்பிறகு அருகிலிருந்த 

சுப்பையாவின் வயலுக்கு அழைத்துச் சென்றார்.   வேலை 

செய்பவர்களுடன் சேர்ந்து இளைஞன் நிழலில் அமர்ந்தான்

கொத்தாளிகள் அளித்த கம்பஞ்சோற்றோடு துவயலையும் சேர்த்து உண்டு 

பசியாறினான் தன்னை அழைத்து வந்து பசியாற வைத்த 

அன்னமய்யாவின் பெயர்ப் பொருத்தத்தை ,  மனதிற்குள் நினைத்து

  நினைத்து மகிழ்ந்தான் அவன்.   உணவு உண்டு வாட்டம் தீர்ந்தான்  

வாலிபன் மணி.

விருந்தோம்பல்;

                                தமிழர்கள் எங்கு இருந்தாலும் விருந்தோம்பல் பண்பில் உயர்ந்து 

இருப்பார்கள் என்பதை இக்கதை உணர்த்துகிறது. உண்டி கொடுத்தோர்;  உயிர் கொடுத்தோரே; எனும் புறநானூற்று வரிகளை  உண்மையாக்கியது இவர்களின் செயல்.   செல்வத்துப் பயன் ஈதலே என்பது போல உணவினைப் பகிர்ந்துண்டு வாழும் தமிழரின்    பண்பை  

அன்னமையாவின் செயல் உணர்த்துகிறது.

 

முடிவுரை;

                        வழிப்போக்கனையும் விருந்தினனாக ஏற்று உபசரிக்கும் பண்பு  காட்டப்பட்டுள்ளது.  வயிறு நிறைந்ததும் தூங்கிவிடும் குழந்தையைப் போல  ,   இளைஞன் உறங்குவதைக் கண்டு மனநிறைவு கொண்டார் அன்னமையா.  கி இராஜநாராயணன் அவர்களின் கதை ,  கிராமவாசிகளின் விருந்தோம்பல் சிறப்பினை உணர்த்துகிறது.

             அன்புச்செல்வன்   பழ.

              தமிழசிரியர்                        

              கோலப்பெருமாள் செட்டி வைணவ மேனிலைப்பள்ளி

            அரும்பாக்கம் சென்னை _600 106.

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை