இடைப்பருவத்தேர்வு - 1. 3ஆகஸ்டு - 2024. FIRST MIDTERM 2024.

 கோலப்பெருமாள்   செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

 எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , 

 அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 இடைப்பருவத்தேர்வு - 1  ஆகஸ்டு - 2024.     

 வகுப்பு : பத்து                                                    தமிழ்த்தேர்வு                                          மதிப்பெண் : 40. 

 நாள் ;   3 ஆகஸ்டு 2024                                                                                           கால அளவு ;  90 நிமிடம்.

அ . பத்தியைப் படித்து  வினாக்களுக்கு  விடையளி                                                            5 * 1 = 5.

காந்தியடிகள் , தமது சிறுவயதில் அரிச்சந்திரனின் கதையைப் படித்தார்.  அவனது    கதையினைத்  தெருக்கூத்தாகவும் பலமுறை கண்டார்; கண்ணீர் வடித்தார்.  மனிதன்     உண்மை மட்டுமே  பேசி  வாழ்வது அவ்வளவு கடினமா  ?   என்று எண்ணினார் .   அரிச்சந்திரனின் கதையைப் படிக்கின்ற போதும் , தெருக்கூத்தாகப் பார்க்கின்றபோதும்  மனமுறுகிக் கண்ணீர் வடித்தார்.  அப்படி ஒரு மனிதன் மீண்டும் பிறக்க மாட்டானா ? என்று பலமுறை  எண்ணினார்.  இறைவனின் திருவருளால் அவர்  சொர்க்கம் சென்றிருப்பார் . அப்படிச்  சென்றிருந்தால்   மீண்டும் பூமியில் மனிதனாகப்  பிறக்க இயலாது ?  என்பதை  உணர்ந்து கொண்டார்.  அப்போது தான் அவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. தானே அரிச்சந்திரன்போல ஏன் வாழ்ந்துகாட்டக் கூடாது ? என்ற எண்ணம்  தான் அது.  அவ்வாறே காந்தியடிகள்  தன்னை   ஓர்   அரிச்சந்திரனாகவே  கருத்திக் கொண்டார். அரிச்சந்திரனைப்போல  உண்மை மட்டுமே பேசுவது  என்று முடிவெடுத்தார் .   இளம்வயதில் அவருக்குத் தோன்றிய  நல்ல எண்ணமே     பிற்காலத்தில்,  அவரை ஒரு மகானாகவே  மாற்றியது. எனவே , நாமும்  நல்லதை   நினைப்போம்; மண்ணில்  நல்ல வண்ணம் வாழ்வோம்.

வினாக்கள்: 

1.  கதையைப் படித்தவர்  யார் ?  

2.  யாரை எண்ணி மனமுருகிக் கண்ணீர் வடித்தார்  ?

3.  ஒருவனை  மகானாக்குவது    எது ?

4. இறைவனின் திருவருளால் நமக்குக் கிடைப்பது  எது  ?

5. பத்திக்கு  ஏற்ற  ஒரு தலைப்பிடுக.

  

                                             இலக்கண வினாக்கள்

ஆ . நிரப்புக                                                                                                                                      2* 1 = 2.

1) ஓசை  குறையும்போது சொற்கள்   நீண்டு  ஒலிப்பது  ___________  எனப்படும்.

2) வினைத்தொகையின்  வேறுபெயர்   ______  ஆகும்.


இ .  சான்று தருக                                                                                                                           2* 1  = 2.

1)  பகாப்பதம் : ......................... 

2.) வேற்றுமைத்தொகை நிலைத்தொடர்:.................................... 


ஈ. கூறியவாறு  செய்க.                                                                                                            2* 1  =  2.

1) அங்ங்ஙனம்     ( அளபெடையை  நீக்கி  எழுது   )    

2)  காந்தியடிகள்  சூடு பட்டு இறந்தார். ( தொழிற்பெயர்    எழுதுக   )  

  

ஈ. இலக்கணக்குறிப்புத் தருக                                                                                              2* 1  =  2.

1)   முறுக்கு  மீசை பேசினார் :    -------------------------------------------------

2)  எட்டு :   -------------------------------------------------


உ . பாடல் வினா விடை.                                                                                4 * 1 = 4.

அருங்கடி  மூதூர்  மருங்கில் போகி 

யாழ் இசை  இன  வண்டு  ஆர்ப்ப , நெல்லொடு ,

நாழி கொண்ட , நறுவீ முல்லை 

அரும்பு அவிழ்  அலறி தூஉய், கைதொழுது,

பெருமுது பெண்டிர் , விரிச்சி நிற்ப ...!

வினாக்கள் 

1. பாடல் இடம் பெற்ற நூல் எது 

2. பெண்டிர்  எவற்றை  எடுத்துச்சென்றனர் ?

3. மாலையில் மலரும் மலர் எது ?

4.கடி மூதூர் -  பொருள் எழுது ?

5.  பாடலின் ஆசிரியர்  யார்  ?


உ . செய்யுள்   வினாக்கள்                      ( எவையேனும்  இரண்டு மட்டும்  )         2 * 3 = 6.


1.  தமிழின் பெருமைகளாகப்  பெருஞ்சித்திரனார்  கூறுவன  யாவை   ?

2. மகாகவி பாரதியார்    காற்றிடம் வேண்டுவன யாவை ?  

3. விரிச்சி  கேட்டல்   - குறிப்பு எழுதுக . முதுபெரும் பெண்டிர் தலைவிக்கு

 வழங்கிய ஆறுதல் மொழி யாது?


ஊ  . உரைநடை வினாக்கள் ( எவையேனும்  இரண்டு மட்டும்  )             2  * 4 = 8.


1. பூவின் நிலைகளுக்கு  வழங்கும்  பெயர்களையும் ,  தானிய வகைகளுக்கு  

 வழங்கும் சொற்களையும் வரிசைப்படுத்துக   ?

2. காற்றுமாசினைத்  தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப்  பட்டியலிடுக.

3. காற்றினால் கிடைக்கும் பயன்மிகு ஆற்றல்கள்  பற்றி விவரி ?


எ .துணைப்பாடக்  கேள்விக்கு   விடை தருக.     (     ஏதேனும்  ஓன்று மட்டும்    )      8*1=8.

1. சங்கப்புலவரும்  -    இணையத்தமிழனும்  பகிர்ந்து கொண்ட  செய்திகளைக்  கட்டுரையாகத்  தருக.

" புயலிலே ஒரு தோணி "  கதையினைக்  கட்டுரை வடிவில்  எழுது?
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

 வாழ்க   வளமுடன் ..!                                                            வாழ்க  வையகம் ..!!


APL2024.


Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023