இடைப்பருவத்தேர்வு - 1 ஆகஸ்டு - 2024. விடைகள்

 கோலப்பெருமாள்   செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

 எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , 

 அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 இடைப்பருவத்தேர்வு - 1  ஆகஸ்டு - 2024.   விடைகள்   

 வகுப்பு : பத்து                                                    தமிழ்த்தேர்வு                                          மதிப்பெண் : 40. 

 நாள் ;   3 ஆகஸ்டு 2024                                                                                           கால அளவு ;  90 நிமிடம்.

அ . பத்தியைப் படித்து  வினாக்களுக்கு  விடையளி                                                         5 * 1 = 5.

விடைகள்: 

1.  கதையைப் படித்தவர்  யார் ?    -   ( காந்தியடிகள் )

2.  யாரை எண்ணி மனமுருகிக் கண்ணீர் வடித்தார்  ?   (   அரிச்சந்திரன் )

3.  ஒருவனை  மகானாக்குவது    எது ?   (   நல்ல எண்ணம் )

4. இறைவனின் திருவருளால் நமக்குக் கிடைப்பது  எது  ?  (   சொர்க்கம் )

5. பத்திக்கு  ஏற்ற  ஒரு தலைப்பிடுக.   

  ( காந்தியடிகள் / அரிச்சந்திரன்/ உண்மை  - பொருத்தமான தலைப்பு  )

  

                                             இலக்கண வினாக்கள்

ஆ . நிரப்புக                                                                                                                                      2* 1 = 2.

1) ஓசை  குறையும்போது சொற்கள்   நீண்டு  ஒலிப்பது  ___________  எனப்படும்.

விடை : அளபெடை 

2) வினைத்தொகையின்  வேறுபெயர்   ______  ஆகும்.

விடை : காலம்கறந்த பெயரெச்சம் 

இ .  சான்று தருக                                                                                                                           2* 1  = 2.

1)  பகாப்பதம் : ..........  (  கண்  / பால் / விழி  - பொருத்தமான  ஓன்று )

2.) வேற்றுமைத்தொகை நிலைத்தொடர்:....

 ( மதுரை சென்றேன் /  வீடு காட்டினேன் / பால் குடித்தேன் )


ஈ. கூறியவாறு  செய்க.                                                                                                            2* 1  =  2.

1) அங்ங்ஙனம்     ( அளபெடையை  நீக்கி  எழுது   )... ( அங்ஙனம்  )

2)  காந்தியடிகள்  சூடு பட்டு இறந்தார். ( தொழிற்பெயரை     எழுதுக   ).. ( சுடுதல் )

  

ஈ. இலக்கணக்குறிப்புத் தருக                                                                                              2* 1  =  2.

1)   முறுக்கு  மீசை பேசினார் :   அன்மொழித்தொகை 

2)  எட்டு :  பொதுமொழி ( 1.  எண்ணிக்கை  /  2. எள்  +து  = எள்ளினை உண்க )


உ . பாடல் வினா விடை.                                                                                4 * 1 = 4.

விடைகள் :

1. பாடல் இடம் பெற்ற நூல் எது ?  (  முல்லைப்பாட்டு  )

2. பெண்டீர்  எவற்றை  எடுத்துச்சென்றனர் ? ( நெல்லும் / முல்லைப்பூவும்  )

3. மாலையில் மலரும் மலர் எது ?  (   முல்லைப்பூ  )

4.கடி மூதூர் -  பொருள் எழுது ? (   காவல்  உடைய ஊர்   )

5.  பாடலின் ஆசிரியர்  யார்  ? (   நப்பூனார்    )


உ . செய்யுள்   வினாக்கள்                      ( எவையேனும்  இரண்டு மட்டும்  )         2 * 3 = 6.

1.  தமிழின் பெருமைகளாகப்  பெருஞ்சித்திரனார்  கூறுவன  யாவை   ?

(இலக்கிய வளம்/ காப்பிய வளம் / இலக்கணம் / நீதி நூல்கள் / பாண்டியன் மகள் )

2. மகாகவி பாரதியார்    காற்றிடம் வேண்டுவன யாவை ?  

( வீசுக/  அவித்து விடாதே / மெதுவாக வீசு/  உன்னை வாழ்த்துகிறோம்.)  

3. விரிச்சி  கேட்டல்   - குறிப்பு எழுதுக . 

( முதுபெரும் பெண்டிர் தலைவிக்காகத்   தெய்வத்தை  வணங்கி  நன்மொழி கேட்டு நிற்றல்.)

 

ஊ  . உரைநடை வினாக்கள் ( எவையேனும்  இரண்டு மட்டும்  )             2  * 4 = 8.

1. பூவின் நிலைகளுக்கு  வழங்கும்  பெயர்களையும் ,  தானிய வகைகளுக்கு  

 வழங்கும் சொற்களையும் வரிசைப்படுத்துக   ?

2. காற்றுமாசினைத்  தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப்  பட்டியலிடுக.

3. காற்றினால் கிடைக்கும் பயன்மிகு ஆற்றல்கள்  பற்றி விவரி ?


எ .துணைப்பாடக்  கேள்விக்கு   விடை தருக.     (     ஏதேனும்  ஓன்று மட்டும்    )      8*1=8.

1. சங்கப்புலவரும்  -    இணையத்தமிழனும்  பகிர்ந்து கொண்ட  செய்திகளைக்  கட்டுரையாகத்  தருக.

" புயலிலே ஒரு தோணி "  கதையினைக்  கட்டுரை வடிவில்  எழுது?

ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை வடிவில் இருக்க வேண்டும்.  
முன்னுரை  - பொருளுரைகள்  - முடிவுரை எனும் அமைப்பில் 
இருந்தால் முழுமதிப்பெண்  வழங்கலாம்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------

 வாழ்க   வளத்துடன்..!                                                            வாழ்க  வையகம் ..!!


APL2024.


Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023