காந்தியடிகள் , தமது சிறுவயதில் அரிச்சந்திரனின் கதையைப் படித்தார். அவனது கதையினைத் தெருக்கூத்தாகவும் பலமுறை கண்டார்; கண்ணீர் வடித்தார். மனிதன் உண்மை மட்டுமே பேசி வாழ்வது அவ்வளவு கடினமா ? என்று எண்ணினார் . ஒவ்வொரு முறை, அரிச்சந்திரனின் கதையைப் படிக்கின்ற போதும் , தெருக்கூத்தாகப் பார்க்கின்றபோதும் மணமுறுக்கிக்கிக் கண்ணீர் வடித்தார். அப்படி ஒரு மனிதன் மீண்டும் பிறக்க மாட்டானா ? என்று எண்ணினார். இறைவனின் திருவருளால் அவன் சொர்க்கம் சென்றிருப்பான். அப்படிச் சென்றிருந்தால் மீண்டும் பூமியில் மனிதனாகப் பிறக்க மாட்டாரே என்பதை நம்பினார். அப்போது தான் அவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. நாமே ஏன் அரிச்சந்திரன் போல வாழ்ந்துகாட்டக் கூடாது ? என்ற எண்ணம் தான் அது. காந்தியடிகள் தன்னையும் ஒரு அரிச்சந்திரனாகவே கருத்திக் கொண்டார். அரிச்சந்திரனைப்போல் உண்மை மட்டுமே பேசுவது என்று முடிவெத்தார் . இளம்வயதில் அவருக்குத் தோன்றிய இவ்வெண்ணம் பிற்காலத்தில் அவரை ஒரு மகானாகவே மாற்றியது. நல்லதே மட்டுமே நினைப்போம் , மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோம்.
வினாக்கள்:
1. அரிச்சந்திரனின் கதையைப் படித்தவர் யார் ?
2. யாருக்காக மணமுறுக்கிக் கண்ணீர் வடித்தார் ?
3. நம்மை மகானாக்குவது எது ?
4. இறைவனின் திருவருளால் நமக்குக் கிடைப்பது எது ?
5. பத்திக்கு ஏற்ற ஒரு தலைப்பிடுக.
ஆ . நிரப்புக 2* 1 = 2.
1) ஓசை குறையும்போது சொற்கள் நீண்டு ஒலிப்பது ___________ எனப்படும்.
2) வினைத்தொகையின் வேறுபெயர் ______ ஆகும்.
Comments
Post a Comment