நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். குறிப்புச் சட்டகம் முன்னுரை நோய்வரக் காரணங்கள் வருமுன் காத்தல் உணவும் மருந்தும் உடற்பயிற்சிகள் முடிவுரை முன்னுரை: மகிழ்வான வாழ்விற்கான அடிப்படை உடல் நலத்துடன் இருப்பதே ஆகும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" - என்பது பழமொழி. உலகில் நீண்ட நாள் வாழ உடல் நலமாக இருத்தல் வேண்டும். அதனால் தான், "உடம்பார் அழியும் உயிரார் அழிவர்" என்றார் திருமூலர். உடல் நலமே , நமது உண்மையான செல்வம். எனவே, நோயின்றி வாழ்வதற்கான வழிகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம். நோய் வரக்காரணங்கள் : இன்றைய நமது வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது. சுற்றுச்சூழலும் மாசடைந்துள்ளது. சத்துக்குறைவான உணவுகள், உடற்பயிற்சி இன்மை, மனவழுத்தம் ஆகியவற்றால் மக்கள் துன்பமடைகின்றனர். துரித உணவுக் கலாச்சாரமே நோய்கள் வருவதற்குக் காரணமாகின்றன. உடலில் ஏற்படும் எல்லா நோய்ளுக்கும் காரணம் தவறான பழக்க வழக்கமே. ...
Comments
Post a Comment