இயல் - 6 விரிவானம். காலம் உடன்வரும்.
வகுப்பு : எட்டு தமிழ் - பிப்ரவரி 2024.
இயல் - 6 விரிவானம்.
காலம் உடன்வரும்.
குறிப்புச்சட்டகம்
முன்னுரை:
சுப்ரமணியத்தின் கவலை.
நண்பர் ரகுவின் உதவி.
பாவு பிணைத்தல்:
முடிவுரை:
முன்னுரை:
நெசவுத்தொழிலில் ஏற்படும் இன்னல்களையும், அதனைத் தாண்டி முன்னேறத்துடிக்கும் ஏழை நெசவாளர்களின் நிலையினையும் காலம் உடன் வரும் கதை வழியே காண்போம்.
சுப்ரமணியத்தின் கவலை.
அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோவில்
தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காகத்
துணிகளை அனுப்பி வைப்பார்கள்.துணியை அனுப்புவதற்குத் தாமதமாகிறது. தறி நெய்யவும் ஆள் கிடைக்கவில்லை . நாளைக்கே துணிகளை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்கிறது அனந்திகா நிறுவனம்.
நண்பர் ரகுவின் உதவி.
சுப்பிரமணி , தனது நண்பர் ரகுவின் பட்டறைக்குச் சென்று
பாவு பிணைக்க ஆள் வேண்டும் , யாரையாவது உடனே அனுப்பி
உதவுங்கள் என்று கேட்டார். அவரும் தனது தறியில் வேலை பார்க்கும் மாயழகைப்பற்றிக்கூற , அவர்களின் உதவியை நாடுகிறார். இரவு பகல் என்று பார்க்காமல் வேலை பார்க்கும் ஒச்சம்மாளுக்குத் தறி வேலையெல்லாம் அத்துபடி. பாவு ஓட்டுவதைத்தவிர, ஒடு எடுத்தல், கோன் போடுதல் , போன்ற வேலைகளையும் கற்றிருந்தாள்
பாவு பிணைத்தல்:
சுப்பிரமணி , தான் தனது நண்பர் ரகுவின் பட்டறைக்குச் சென்று வந்ததையும் சூழ்நிலையையும் எடுத்துக்கூற மாயழகு புரிந்து கொண்டான். தனது மனைவி ஒச்சம்மாளை பாவு பிணைக்க அனுப்பி வைத்தான். கைக்குழந்தையோடு தறி வேலைக்கு வருகிறாள். தனது குழந்தையின் நல்ல எதிர் காலத்திற்காகத் தூக்கத்தையும் மறந்து உழைக்கிறாள் அந்தத்தாய். பாவு தீர்ந்துவிட அதனைச் சரிசெய்து தறியினை ஓட்டுகிறாள். அவ்வேளையில் குழந்தை விழித்துக்கொண்டு அழுகிறது. அதனைத் தூங்க வைத்தபடியேபாவை இணைக்கிறாள். பொழுது விடியும்போது , வேலையும் முடிந்து இருந்தது. சுப்பிரமணியன் , இரட்டைச் சம்பளத்தோடு ஒச்சம்மாளை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறார். ஒச்சம்மாளும் , தனது வாழ்வும் விடியும் என்னும் நம்பிக்கையில் அன்றைய கடமைகளை வழக்கம்போலத் தொடங்கினாள்.
முடிவுரை:
வறுமையின் காரணமாக இரவு பகல் பார்க்காமல் துணி நெய்யும்
தறிப் பட்டறைகளில் உழைக்கும் நெசவாளர்களின் கனவையும்
மனநிலையையும் , ஒச்சம்மாளின் வழியாக இங்கு கண்டோம்.
தறிப் பட்டறைகளில் உழைக்கும் நெசவாளர்களின் கனவையும்
மனநிலையையும் , ஒச்சம்மாளின் வழியாக இங்கு கண்டோம்.
!...... வளமும் நலமும் சிறந்து வாழ்க.....!
Comments
Post a Comment