முன் மாதிரித்தேர்வு - 21 - பிப்ரவரி 2024.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
----------------------------------------------------------------------------------------------------------------
முன் மாதிரித்தேர்வு - 21 - பிப்ரவரி 2024.
வகுப்பு : ஒன்பது தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 80.
21.02.2024. கால அளவு ; 3 மணி .
பகுதி - அ ( 10 )
1. பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து
வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.
மொழிபெயர்ப்பு , எல்லாக் காலங்களிலும் தேவையான ஓன்று. விடுதலைக்குப்பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின் கீழ் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு , மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது. ஒரு மொழியில் இருக்கும் நூல்களைப் பிற மொழியில் மொழிபெயர்த்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்த, இருக்கின்ற எழுத்தாளர்கள் , சிந்தனையாளர்கள் ஆகியோரைப் பற்றிய நூல்களையும் வெளியிட்டது . இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்ய அகாதெமி , தேசிய புத்தக நிறுவனம் , தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.
வினாக்கள் :
1. எல்லாக் காலங்களிலும் தேவையானது எது ?அ) உணவு ஆ) மொழி இ) மொழிபெயர்ப்பு ஈ) நூல்கள்
2. ஒற்றுமைக்கான முயற்சி எப்போது மேற்கொள்ளப்பட்டது ?
அ) விடுதலைப்போரில் ஆ) மன்னர் ஆட்சியில்
இ) விடுதலைக்குப்பின் ஈ) ஆங்கிலேயர்கள் காலத்தில்
3. மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவை எவை ?
அ) வேதங்கள் ஆ) மாநில நூல்கள்
இ) காப்பியங்கள் ஈ) இலக்கியங்கள்
4. எம்மொழி நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன ?
அ) பிற மொழிநூல்கள் ஆ) ஆங்கிலேயர் நூல்கள்
இ) அறிவியல் நூல்கள் ஈ) ஆராய்ச்சி நூல்கள்
5. தேசிய நூல் நிறுவனம் எது ?
அ ) கழகப்பதிப்பு ஆ) பழனியப்பா பதிப்பகம்
இ)சாகித்ய அகாதெமி ஈ) அன்னை பதிப்பகம்.
2. பின்வரும் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பலவுள்
தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
மரங்கள் நமது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அரண்களாக உள்ளன. மரங்கள்தான்மண்வளத்தைப் பேணிப்பாதுகாக்கின்றன. மரங்கள் பகற்பொழுதில் உயிர்க்காற்றை நமக்குத் தருகின்றன. புவியின் வெப்பத்தைத் தணிக்க உதவுகின்றன. ஆனால், மனிதர் சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அதிலிருந்து காகிதம், இரப்பர் , கோந்து, மேஜை நாற்காலி போன்றவற்றைச் செய்து விற்கின்றனர். மரங்கள் அழிவதால் மனிதகுளம் பெரும்சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்தியாவில் 60% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால், அது நாளும் குறைந்து வருக்கின்றது. அசோகா சக்கரவர்த்தி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மரங்களின் பெருமையை உணர்ந்து, சாலையின் இரு மருங்கிலும் எண்ணற்ற மரங்களை நட்டார். எனவே, மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அரண்களாக உள்ளன . மரங்கள் மருத்துவக்குணம் வாய்ந்தவை.
வினாக்கள் :
1. சுற்றுச்சூழலினைப் பாதுகாக்கும் அரண் எது ? ( மரம் )
2. மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவது எது ? ( காகிதம் , ரப்பர் )
3. சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டவர் யார் ? ( அசோகர் )
4. மரங்களின் தனிக்குணம் எது ? ( மருந்து/ நிழல் )
5. மரங்கள் அழிவதால் எத்தகைய சூழல் உருவாகும் ? ( சவால்கள் )
இலக்கணம் - ஆ ( 12 )
3. .சான்று தருக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. நெடில் தொடர்க்குற்றியலுகரம்
அ ) இரும்பு ஆ ) முதுகு இ ) பேசு
2. வியங்கோள் வினைமுற்று
அ) வாழ்க தமிழ் ஆ ) வாழ்க்கை இ ) வாழ்
3. இரட்டைக்கிளவி
அ) வா வா ஆ ) குடுகுடு இ ) நட நட
4. முதல்வினை
அ) இரு ஆ) இருக்கிறது இ) வந்திருக்கிறார்
5. பிறவினை
அ) உண்டான் ஆ) உண்பித்தான் இ) உண்ண வைத்தான்
4. கூறிவாறு செய்க ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. பாட்டு அக்காவால் பாடப்பட்டது. ( தொடர் வகையை எழுதுக )
அ) செய்வினைத்தொடர் ஆ) செயப்பாட்டு வினைத்தொடர்
இ) தன்வினைத்தொடர் ஈ ) பிறவினைத்தொடர்
2. பார், இரு, வை ( எவ்வகை வினை )
அ) துணைவினை ஆ) முதல்வினை இ) இருவகை வினை
3. எந்தப்பணம் ? ( சொல் வகையை எழுதுக )
அ) வினை ஆ) சுட்டுத்திரிபு இ) வினாத்திரிபு.
4. போல, விட ,காட்டிலும், மாதிரி - ( உருபு வகையை எழுதுக )
அ) வேற்றுமை உருபு. ஆ) உவம உருபு. இ) இடைச்சொல்
5. பால் குடித்தான் ( வேற்றுமை உருபுசேர் )
அ) பல் குடித்தான் ஆ) பாலைக் குடித்தான் இ) குடித்தான் பாலை .
5. இலக்கணக்குறிப்புத் தருக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. மண்மலை
அ) இயல்புப்புணர்ச்சி ஆ) மெய்யீற்றுப்புணர்ச்சி
இ) உடம்படுமெய்ப்புணர்ச்சி ஈ) வன்தொடர்க்குற்றியலுகரப்புணர்ச்சி
2. புகழேந்தி நேற்று உன்னுடன் பேசினானா ?
அ) பிரிநிலை ஆ) தேற்றம் இ) ஏகாரம் ஈ) வினாப்பொருள்.
3. கடிமலர்
அ ) இடைச்சொல் ஆ ) உரிச்சொல் இ ) பெயர்ச்சொல்
ஈ ) வினைச்சொல்
4. தன்வினைத்தொடர்
அ) கவிதா உரை படித்தால் ஆ) கவிதா நேற்று வரவழைத்தார் .
இ) கவிதா படிக்கவில்லை.
ஈ) கவிதா கேட்டாளா.
5. விளித்தொடர்
அ) கம்பர் வந்தார். ஆ) வந்தார் அம்மா இ)அம்மா வா. ஈ) கம்பர் பாடினார்.
6. பின்வரும் கோடிட்ட இடங்களை நிரப்புக. ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. ------- என்னும் இடைச்சொல் அழுத்தப்பொருளில்தான் வருகிறது.
அ) ஏ ஆ) ஆவது இ) தான் ஈ) மட்டும்
2. சுட்டு , சுட்டுத்திரிபு , வினா, வினாத்திரிபு போன்றவைகளை அடுத்துவரும்
-------------- மிகும்.
அ) வினைச்சொல் ஆ) உரிச்சொல்
இ) வல்லினம் ஈ) திசைச்சொல்
3. கூட்டுவினையடிகளைக்கொண்ட வினைச்சொற்களைக்
---------------------- என்பர்.
அ) தனிவினை ஆ) வினை இ) முதல்வினை ஈ) கூட்டு
4. விகாப்புணர்ச்சி ------------------ வகைப்படும்.
அ) 3 ஆ) 6 இ) 9 ஈ) 4
5. சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த
பெயர்ச்சொல்லையே ------------------ என்கிறோம் .
அ) வினை ஆ) செயப்படுபொருள் இ) எழுவாய்
பகுதி - இ ( 31 )
7 ) திருக்குறள் விடுபட்ட சீர்களை எழுதுக: 2.
1. ------------ மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
1) மிகுதியான் 2) வளமை ,3) வாழ்வில்
4) மிகுதியான் ,
2. அடுக்கிய ------------- பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
1) கோடி 2) மாடி 3 ) தொகை 4) செய்யாதவர்.
8 ) பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி : 5.
அன்னம் ஆடும் அகத்துறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியாத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேல் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்.
வினாக்கள் :
1 ) அன்னங்கள் எங்கு விளையாடின ?
அ ) கிணற்றில் ஆ ) நீர்நிலையில் இ ) ஆற்றில் ஈ ) பள்ளத்தில்
2. நீரில் வீழ்ந்து கிடப்பவை எவை ?
அ ) மட்டைகள் ஆ ) கற்கள் இ) பூக்கள் ஈ ) எருமைகள்
3. வாளை - பொருள் தருக ?
அ ) மீன்கள் ஆ ) வளையல் இ) வலை ஈ ) மரம்
4. நெடிது வளர்ந்து பூத்து நிற்கும் மரங்கள் எவை ?
அ ) பனை ஆ ) தென்னை இ ) பாக்கு ஈ ) பலா
5. பாடல் விளக்கும் காட்சி யாது ?
அ ) வானவில் ஆ ) மழை இ ) தென்றல் ஈ ) இரவு
9 ) பின்வரும் செய்யுள் வினாக்களில் மூன்றனுக்கு மட்டும் விடையளி - 3 * 3 = 9.
1. பட்ட மரத்தின் துன்பநிலை பற்றி விளக்கு ?
2. சான்றாண்மையைத் தாங்கிநிற்கும் தூண்கள் ? சான்றோர்க்குரிய பண்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை
3. சிறுபஞ்ச மூலம் உணர்த்தும் செய்தி யாது ?
4. ஆண்டாள் கண்ட கனவுக்காட்சியைப் பற்றி எழுது ?
5. கம்பர் காட்டும் மருத நிலக்காட்சியை எழுத்துக.
10 ) எவையேனும் மூன்று உரைநடை வினாக்களுக்கு மட்டும் விடையளி - 3 * 5 =15.
1. தமிழ்மொழியின் தனித்தன்மைகள் பற்றி விளக்கு ?
2. தமிழருக்கும் தண்ணீருக்குமான வாழ்வியல் தொடர்பைப் பற்றி எழுதுக ?
3. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரி ?
4. தமிழ்நாட்டுச் சிற்பங்களில் பாண்டியர் காலச் சிற்பங்கள்,
சோழர் காலச்சிற்பங்கள் குறித்து எழுதுக. ?
5. தமிழரின் தொன்மையான பண்பாடு ஏறு தழுவுதல் என்பதைச் சான்றுகள்
தந்து விளக்குக.
பகுதி - ஈ ( 27 )
11 ) பின்வரும் துணைப்பாடத்தலைப்பிற்கு ஏற்ற கருத்துகளைக்
கதை வடிவில் (ஒன்றிற்கு மட்டும் ) விடை எழுதுக. ( 10 ).
1 ) நூலகத்தின் முக்கியத்துவம் பற்றிய அண்ணாவின் கருத்து க்களை எழுதுக .
2 ) இராமநாதபுரத்தின் வறட்சி நிலையினைத் தண்ணீர்க்கதை வழி நிறுவுக .
3) தி . ஜானகி ராமனின் "செய்தி" கதை உணர்த்தும் கருத்தினை
எழுதுக.
12. ஏதேனும் ஒரு கடிதத்திற்கு விடை தருக. 1 * 8 = 8.
அ )
காணாமல்போன ஓட்டுநர் உரிமத்தைக் கண்டுபிடித்துத் தரவேண்டி உங்கள் பகுதியின் காவல்நிலைய ஆய்வாளருக்குக் கடிதம் எழுதுக.
ஆ )
அறிவியல் தமிழ் மன்றம் நடத்திய பேச்சுப்போட்டியில் முதற் பரிசு பெற்றது குறித்து, வெளியூரில் வசிக்கும் உனது நண்பனுக்கு கடிதம் வரைக.
இ )
நீங்கள் வசிக்கும் பகுதியில் விளையாட்டுத்திடல் அமைத்துத்தரவேண்டி விளையாட்டுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதுக.
( கடிதம் எது ஆயினும் உனது முகவரி: பேரரசன் / பேரரசி - கதவு எண் : 27, பாரதியார் யார் தெரு , கண்ணதாசன் நகர், திருநெல்வேலி -2 எனக்கொள்க. )
14) பின் வருவனவற்றுள் ஏதேனும் ஒரு பகுதியில் உள்ள
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக. ( 6 ).
1) முன்னுரை - இலக்கியங்கள் - காலந்தோறும் மாற்றம்- காப்பியங்கள் -
புதுக்கவிதை - ஹைஹூ கவிதை - உரைநடை - - முடிவுரை .
2) முன்னுரை - அறிவியல் வளர்ச்சி - போக்குவரத்து
- மருத்துவம் கணினி - கல்வி வளர்ச்சி - -முடிவுரை .
3) முன்னுரை - சங்ககாலப் புலவர்கள் - சமையல் - பெண்கல்வி
- அறிவு வளர்ச்சி - சரிநிகர் சமம் - வேலைவாய்ப்பு - நாட்டின் கண்கள் - முடிவுரை .
!...... வளமும் நலமும் சிறந்து வாழ்க.....!
Comments
Post a Comment