வகுப்பு - எட்டு. தமிழ் இரண்டாம் பருவத்தேர்வு - 2024.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600106.
இரண்டாம் பருவத்தேர்வு தமிழ் மார்ச் 2024.
வகுப்பு : எட்டு தமிழ் மதிப்பெண் : 80.
நாள் ; மார்ச் 2024. நேரம் : 3 மணி.
பகுதி-அ. ( 10 )
அ ) பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி. 5 x 1 = 5.
கற்றறிந்த ஒருவர், தன்னைப் போன்ற கற்றறிந்த மற்றொருவரிடம் , தான் கற்ற கல்வியைப்பற்றிக் கலந்துரையாடுவது மனமகிழ்ச்சியைத் தரும். கற்ற கல்வியைக் கொண்டு வாழ்வில் முன்னேறுவதற்கான செயல்களைச் செய்தல் வேண்டும். கல்விக்கு ஏற்ற நல்ல வேளையில் அமரவேண்டும். அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்க வேண்டும். சிற்றறிவு படைத்த கீழ் மக்களோடு நட்புக்கொள்ளாமல் இருத்தல் நல்லது. தான் உழைத்துத் தேடிய செல்வத்தின் ஒரு பகுதியைப் பிறருக்குத் தர வேண்டும். தன்னிடம் செல்வம் அதிகம் இருக்கும்போது பிறருக்கு உதவும் நல்ல மனம் பெற்றிருக்க வேண்டும். சிறந்த கல்வியும் , நல்ல ஒழுக்கமுமே தலைசிறந்த மனிதனின் அடையாளம் ஆகும்.
வினாக்கள் :
1. ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருவது எது ?
அ ) பணக்காரர்களோடு இருத்தல் ஆ ) மற்றவரோடு கலந்துரையாடல் இ) ஏழைகளோடு பேசுதல் ஈ ) கற்றவரோடு கலந்துரையாடுதல் .
2. கற்றபின் செய்ய வேண்டியது யாது ?
அ ) நன்கு உறங்குதல் ஆ ) நல்ல வேளையில் அமர்தல்
இ) அடையாளம் தேடுதல். ஈ ) பணம் சேகரித்தல்.
3. யாருடன் நட்புக் கொள்ளுதல் கூடாது ?
அ ) கற்றவரோடு ஆ ) நல்லவரோடு இ) தீயவரோடு ஈ ) தூயவரோடு.
4. எத்தனைப் பிறருக்குத் தர வேண்டும் ?
அ ) அறிவினை ஆ ) உழைத்துத் தேடிய செல்வத்தை
இ) பிறரது பொருளை ஈ ) அவரவர் பொருளை.
5. தலைசிறந்த மனிதனின் அடையாளம் எது ?
அ ) கல்வி,ஒழுக்கம். ஆ ) அறிவு , கல்வி.
இ) சிற்றறிவு, கல்வியறிவு. ஈ) பணம் , புகழ்.
ஆ) பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி. 5 x 1 = 5.
இலக்கணம் , இலக்கியம் எனும் தூய சொற்களும் தமிழ்ச் சொற்களே. இலக்கியம் தோன்றிய பின்னே இலக்கணம் தோன்றியது . எனினும் இலக்கியத்தால் இலக்கணமும் , இலக்கணத்தால் இலக்கியமும் உருப்பெருவது இயல்பாகிவிட்டது. இவைகள் இரண்டுமே மொழியைக்காப்பன. மொழியின் வளர்ச்சிக்குத் துணை செய்வன இலக்கணங்கள். ஒரு மொழியின் தொன்மையையும் , வரலாற்றையும் அறிந்து கொள்ளத் துணை செய்வன இலக்கியங்கள். மொழிக்கூறுபாடுகளில் முதன்மையானது இலக்கியங்கள் ஆகும். எழுத்தும், சொல்லும் இலக்கணத்தைப் பற்றியன. பொருள் என்பது முழுவதும் இலக்கியம் பற்றியது. நமக்குக் கிடைத்திருக்கும் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
வினாக்கள் :
1. இலக்கணம் , இலக்கியம் என்பன தமிழ்ச்சொற்களா?
அ) இல்லை ஆ) தமிழ்ச் சொற்களே இ) இருக்கலாம் ஈ) உண்டு.
2. இலக்கணங்கள் எப்போது தோன்றியன ?
அ) இலக்கியங்கள் தோன்றியபின்னர் ஆ) இலக்கணங்கள் தோன்றியபின்னர் இ) காப்பியம் தோன்றிய பின்னர் ஈ) பத்துப்பாட்டு தோன்றிய பின்னர்
3. பொருள் இலக்கணம் எதனைப் பற்றியது ?
அ) மரபு பற்றியது ஆ) தெலுங்கர் பற்றியது இ)தமிழர் பற்றியது ஈ )இலக்கியத்தைப் பற்றியன
4. தமிழின் முதல் இலக்கண நூல் எது ?
அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல் இ)யாப்பிலக்கணம் ஈ) தூது
5. எழுத்து , சொல் என்பன எதனோடு தொடர்புடையது ?
அ ) இலக்கியத்தோடு ஆ) தமிழோடு இ) வாழ்வியலோடு ஈ) வீரத்தோடு.
பகுதி-ஆ. ( 15 )
இலக்கணம்.
இ ) நிரப்புக. 5x1=5.
1. ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவது _________ எனப்படும் .
அ) வினை ஆ) பெயர் இ) உரிச்சொல் ஈ) வேற்றுமை .
2. உருபு இல்லாத வேற்றுமைகள் _____ , _____ ஆகியன.
அ) 3, 5 ஆ) 1,8 இ) 4,7 ஈ ) 1,8 .
3. மலை + கண்டேன் = இதில் ----------- வருமொழி முதல் ஆகும்.
அ)மெய்யீறு. ஆ) உயிரீறு இ) உயிர் முதல் ஈ) மெய்ம்முதல்.
4.பற்பொடி என்பது --------------- புணர்ச்சி ஆகும்.
அ) இயல்புப்புணர்ச்சி ஆ) திரிதல் விகாரப்புணர்ச்சி
இ) கெடுதல் விகாரப்புணர்ச்சி ஈ)தோன்றல் விகாரப்புணர்ச்சி.
5. விகாரப்புணர்ச்சி ________ வகைப்படும்.
அ) 6 ஆ) 4 இ) 3 ஈ) 8.
ஈ ) சான்று தருக. 5x1=5.
1. முதல் வேற்றுமை
அ) கந்தன் வந்தான் ஆ) கந்தன் இ) வந்தான் ஈ)வா கந்தா.
2. இயல்புப்புணர்ச்சி
அ)கடலலை ஆ) கற்சிலை இ) மலை ஈ )மண்மலை .
3. திரிதல் விகாரப்புணர்ச்சி
அ)பொற்சிலை ஆ)பொன்மாடம் இ)மாடம் ஈ)சிலை.
4. விளிவேற்றுமை
அ) வந்தார் ஆ)அம்மா வந்தார் இ)அம்மா வா ஈ)அம்மன் காண்.
5. உயிரீற்றுப்பணர்ச்சி
அ) காளை ஆ) கண் இ) கவண் ஈ) கள்வன்.
உ ) கூறியவாறு செய்க. 5x1=5.
1. தாயோடு குழந்தை சென்றது. ( இத்தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபை எழுது )
அ) ஓடு ஆ) ஒடு இ) யொடு ஈ) யோடு .
2. வீடு கட்டினான் ( வேற்றுமை உருபு சேர் )
அ ) கட்டனான் வீடு ஆ ) வீடினை கட்டினான்
இ) வீட்டைக் கட்டினான் ஈ) புது வீடு கட்டினான்.
3. கல் + சிலை ( திரிதல் விகாரப்புணர்ச்சி ஆக்குக )
அ ) கட்சிலை ஆ ) கடசலை இ)கற்சிலை ஈ) சிலைகள் .
4. கண்ணன் கொடுத்தான். ( நான்காம் வேற்றுமை உருபு சேர் )
அ) கண்ணனுக்குக் கொடுத்தான். ஆ) கொடுத்தான் கண்ணன்
இ) கொடுக்குக் கண்ணன் ஈ) கண்ணன் கொடு.
5. உடலோம்பல் ( எவ்வகைப்புணர்ச்சி எனக்காண்க )
அ) இயல்புப்புணர்ச்சி ஆ) கெடுதல் விகாரப்புணர்ச்சி
இ) திரிதல் விகாரப்புணர்ச்சி ஈ) தோன்றல் விகாரப்புணர்ச்சி.
பகுதி -இ. ( 42)
ஊ ) உரைநடைப் பத்தி வினா- விடை. 5 x 1= 5.
நாம் ஒவ்வொருவரும் இசை பயின்றிட வேண்டும்.இன்றைய சூழலில் இசைப்பயிற்சி மிகமிக இன்றியமையாதது. இசை பாட இயற்கை சிலருக்குத் துணை செய்யும். சிலருக்குத் துணை செய்வதில்லை. அத்துணைப் பெறாதவர் , இசையின்பத்தைப் பெற்றிட இசை பயில்வராக. பழந்தமிழர் இசைத்துறையில் நிலை கண்டவர் என்று ஈண்டு இறுமாந்து கூறுகிறேன். தமிழ் , யாழையும் ,குழலையும் என்னவென்று சொல்வது? அந்த
"ழ" கரங்களை நினைக்கும் போதே அமிழ்து ஊறுகிறது. கொடிய காட்டு வேழங்களையும் பாணர் தம் யாழ் மயங்குறச் செய்யுமாம். அந்த யாழ் எங்கே ? இனி இசைப்புலவர்களின் தொகை நாட்டில் பெருகப்பெருக நாடு பல வழியிலும் ஒழுங்கு பெறுதல் ஒருதலை. ஆகவே, மாணாக்கர் இசைத்துறைமீது கருத்துக் செலுத்துவாராக.
1) இன்றைய சூழலில் மிகமிக இன்றி அமையாதது எது ?
அ) முயற்சி ஆ) உடற்பயிற்சி இ) தொழிற்பயிற்சி
ஈ) இசைப்பயிற்சி .
2) எதனை நினைக்கையில் அமிழ்தம் ஊறுகிறது ?
அ) "ழ" கரம் ஆ) "த"கரம் இ) "ப"கரம் ஈ) "ந"கரம் .
3) இசையில் கரைகண்டவர் யார் ?
அ) தமிழர் ஆ) மலையாளர் இ) கன்னடர் ஈ) தெலுங்கர்.
4. மிகச்சிறந்த இசைக்கருவிகள் எவை ?
அ) முரசு, தபலா ஆ) யாழ், குழல் இ) குழல் , மேளம்
ஈ) யாழ் , நாகஸ்வரம்.
5. கொடிய காட்டு வேழங்களையும் மயக்குறச் செய்தது எது?
அ) சுவைக்கரும்பு ஆ) பாணர் இசை இ) செயற்கை இசை ஈ) இயற்கைக் காற்று.
எ ) பாடலின் பொருளறிந்து வினாவிற்கு விடையளி. 5 x 1= 5.
பெருநீரால் வாரி சிறக்க ! இருநிலத்து
இட்ட வித்து எஞ்சாமை நாறுக ! நாறாரா
முட்டாது வந்து மழை பெய்க ! பெய்தபின்
ஒட்டாதுவந்து கிளைபயில்க .......!
வினாக்கள்:
1) மழைநீரால் பெருகுவது எது ?
அ ) நெல் ஆ ) வருவாய் இ) பணம் ஈ ) வானம்.
2) எஞ்சாமை = பொருள் தருக.
அ ) குறைவின்றி ஆ) மிச்சம் இ) எச்சம் ஈ)நிறைவின்றி.
3) மேற்காணும் பாடல் இடமாற்ற நூல் எது ?
அ) சங்க இலக்கியம் ஆ) எட்டுத்தொகை இ) மதுரைக்காஞ்சி
ஈ ) தகடூர் யாத்திரை .
4) எவ்வாறு மழைபொழிய வேண்டும்?
அ) தட்டுப்பாடின்றி ஆ) தடையின்றி இ) தாமதமின்றி
ஈ)தயக்கமின்றி .
5) எதனால் பயிர்கள் கிளைத்து வளர்கின்றன ?
அ) சுட்டெரிக்கும் சூரியனால் ஆ) பருவக்காற்றினால் இ) தகுந்த காலத்தில் மழை பெய்வதால் ஈ) நல்ல பனி பெய்வதால்.
ஏ ) மனப்பாடப் பாடல் 5.
கற்றோர்க்குக்... எனத்தொடங்கும் செய்யுள் பாடலை
எழுது ?
ஐ ) திருக்குறள். - 2.
1 ) கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப --------------- சொல்.
அ ) மொழிவதாம் ஆ ) வழிவதாம் இ) நலிவதாம்
ஈ ) தலைவதாம்.
2. இதனை இதனால் இவன்முடிக்கும் ------------------
அதனை அவன் கண் விடல் .
அ) கான்றாய்ந்து ஆ) பண்றாய்ந்து இ) நன்றாய்ந்து ஈ)என்றாய்ந்து.
ஒ ) செய்யுள் குறுவினா, (எவையேனும் 2 மட்டும் ) 2 x 2 = 4.
1. தமிழிசையோடு இணைந்து ஒலிக்கும் இசைக்
கருவிகளாகச் சுந்தரர் கூறும் கருவிகள் எவை எவை ?
2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலியினை எழுப்புவர் ?
3. யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
4. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை எழுதுக.
ஓ ) செய்யுள் சிறுவினா, ( ஏதேனும் 1 மட்டும் ) 1 x 5 = 5.
1) நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
2) மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது ?
ஒள ) உரைநடை சிறுவினா ( எவையேனும் 3 மட்டும்) 3 × 2 = 6.
1) எவற்றை யெல்லாம் கைவினைக் கலைகள் என்கிறோம் ?
2) தமிநாட்டின் ஹாலந்துஎன்று அழைக்கப்படும் ஊர் எது ? ஏன் ?
3) தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது ?
4) பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை ?
5) கொங்குநாட்டில் பாயும் ஆறுகள் யாவை ?
7) உரைநடை குறுவினா ( எவையேனும் இரண்டு மட்டும்) 2 × 5 = 10.
1) கொங்கு மண்டலச் சதகம் கூறும் , கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?
2) பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையை எழுதுக.
3) தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க.கூறுவன யாவை ?
பகுதி - ஈ ( 13 )
அ )துணைப்பாடக் கட்டுரை. ( ஏதேனும் 1 மட்டும் ) 1 x 7 = 7.
1. தமிழர் இசைக்கருவிகள் குறித்து நீங்கள்
அறிந்த செய்திகளைக் கட்டுரை வடிவில் எழுது ?
( அல்லது )
2. ஒச்சம்மாளின் எதிர்காலக் கனவினை " காலம் உடன் வரும் " கதை கொண்டு கட்டுரை வடிவில் சுருக்கி எழுதுக.
ஆ ) அலுவலகக் கடிதம். ( ஏதேனும் 1 மட்டும் ) 1 x 6 = 6.
1. உங்கள் இல்லத்தில் நடைபெறவுள்ள , உனது சகோதரியின் திருமணத்திற்கு விடுமுறை வேண்டி , நீ கல்வி பயிலும் பள்ளியின் முதல்வருக்குக் கடிதம் ஒன்று எழுது ?
( அல்லது )
2. நீ வசிக்கும் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையினை உடனடியாக நீக்க வேண்டி உங்கள் பகுதியின் மின்பொறியாளருக்குக் கடிதம் எழுது?
!...... வளமும் நலமும் சிறந்து வாழ்க.....!
Comments
Post a Comment