முன்மாதிரிபருவத்தேர்வு - STD IX DECEMBER 2022.

 கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண்  மேனிலைப்பள்ளி

கோலப்பெருமாள் பள்ளித் தெரு , அரும்பாக்கம்,  சென்னை- 106.

மாதிரிப் பருவத்தேர்வு டிசம்பர் (2022-23)

வகுப்பு : 9                                                                                  காலம்: 3 மணிநேரம்

பாடம்: தமிழ்                                                                               மதிப்பெண்கள்: 80

(பகுதி -அ)


I.பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க  :                    5×1=5.

            மகாத்மா காந்தியின்நினைவாகக் காந்திஎன்னும் பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டபோது, நடந்த நிகழ்ச்சி.காந்தியாக நடிக்க ;பென்கிங்ஸ்லி எனும் நடிகர் தேர்வுசெய்யப்பட்டிருந்தார். அவர் தங்குவதற்காகப் புதுடில்லியில் ஆடம்பரமான நட்சத்திர விடுதி ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது. அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் மிகவும்  மகிழ்ச்சியடைவார் என மற்றவர் எதிர்பார்க்க, பென்கிங்ஸ்லியோ அந்த அறையில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் அகற்றச்சொல்லி, தமக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டும் போதும் என்றார். அதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர். இந்த வசதி போதவில்லையா என்று கேட்டனர்? அதற்கு அவர் ,  காந்தி மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். நான் அவருடைய பாத்திரம் ஏற்று நடிக்கிறேன். இந்தப்படம் எடுக்கும் வரையிலாவது நானும் அவரைப் போன்று எளிமையாக இருக்க விரும்புகிறேன். அதை நான்பெருமையாகக்கருதுகிறேன் என்றார்.காந்தியடிகளின் எளிமை மற்றவர்களுடைய வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது. எளிமை என்றும் துணை வரும். பகட்டு ஆணவத்தைத் தூண்டும்,பொறாமை கொள்ளச் செய்யும் ஏளனத்திற்கு வழிவகுக்கும். துன்பம் தரும். துணை நிற்காது என்பதை நாம் அறிய வேண்டும் .


வினாக்கள்:

1.யாருடைய நினைவாகப் படம் எடுக்கப்பட்டது?

அ) பென் கிங்ஸ்லி ஆ) காந்தியடிகள் இ) நடிகர்

2.ஆடம்பரமான நட்சத்திர விடுதி யாருக்காக ஏற்பாடு செய்யப்பட்டது?

அ) மகாத்மா காந்தி ஆ) நடிகர் இ) பென் கிங்ஸ்லி

3.எது என்றும் துன்பம் தரும்?

அ) எளிமை ஆ) ஆணவம் இ) அன்பு

4.அறையில் இருந்த ஆடம்பரமான பொருள்களைக்கண்டு கிங்ஸ்லி என்ன செய்தார்?

அ) அனைத்துப்பொருள்களையும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்.

ஆ) பாதி பொருள்களை மட்டும் பயன்படுத்தினார்.

இ) பாயும் தலையணையும்  மட்டும் போதும் என்றார்.

5.எது என்றும் துணை வரும்?

அ) எளிமை ஆ) ஆணவம் இ) ஆடம்பரம்


II.  பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு  விடையளிக்க :             5×1=5

சாலை விபத்துகளைத்தவிர்க்க சாலை விதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும். சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டு விட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடானது இருபோக்குவரத்திற்காகச் சாலை சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக்கோட்டுக்கு வலப்பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள்
 கோடு வரையப்பட்டிருந்தால்முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலப்பக்கச்சாலையைப்பயன்படுத்தக்கூடாது. ஒரு வழிப்பாதை என்று குறிப்பிட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே   வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப்பின்  தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும்போது சைகை அடையாள விளக்கை ஒளிரச்செய்ய வேண்டும்.

வினாக்கள்:

1.சாலையின் எந்தப்பக்கமாக வாகனத்தைச் செலுத்த வேண்டும்?

அ) வலப்புறம் ஆ) இடப்புறம் இ) குறுக்கும் நெடுக்குமாக

2.விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக்குறிக்கும்?

அ) நிற்க வேண்டும் என்பதைக்குறிக்கும்

ஆ) செல்ல வேண்டும் என்பதைக்குறிக்கும்

இ) இரு போக்குவரத்திற்காகச்சாலை சரிசமமாகப்                           பிரிக்கப்பட்டுள்ளதைக்குறிக்கும்.

3.சாலை விபத்திற்கான அடிப்படைக்காரணம்-------------

அ) சாலை விதிகளைப் பற்றிய அலட்சியம்.

ஆ) சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு பெற்றிருத்தல்

இ) சாலை விதிகளைப்பின்பற்றுதல்.

4.ஒரு வழிப்பாதையில் செய்யவேண்டியது-----------

அ) அனுமதிக்கப்பட்ட திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்துதல்.

ஆ) எதிர் திசையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும்.

இ) குறுக்கு வழியில் வாகனங்களைச்செலுத்த வேண்டும்.

5.திரும்பும் முன் செய்ய வேண்டியது-----------------

அ) வேகமாகச்செல்லுதல் வேண்டும்

ஆ) அடையாள விளக்கை ஒளிரச்செய்தல் வேண்டும்

இ) முந்திச்செல்ல வேண்டும்.

பகுதி-ஆ

(இலக்கணப்  பகுதி வினாக்கள்  )


III. சான்று தருக (எவையேனும் நான்கனுக்கு மட்டும்)                                 4×1=4.

1.கூட்டுவினை-----------

அ) ஆசைப்பட்டேன்.             ஆ) வா                 இ) வந்தார்கள்

2.திரிதல் விகாரப்புணர்ச்சி--------------

அ) வாழைக்காய்    ஆ) கடவுள் வந்தார்    இ) பொற்குடம்

3.ஓகார இடைச்சொல்--------------

அ) இவனைக்கண்டான்                ஆ) தெய்வத்தோடு வந்தான்

இ) அவனோ செய்தான்

4.நான்காம் வேற்றுமைத்தொடரில் வல்லினம் மிகும் எ. கா-----------------

அ) இறைவனுக்குப்பூசை                ஆ) இறைவனைக்கண்டேன்

இ) இறைவன் போலத்தெரிந்தான்

5.கெடுதல் விகாரப்புணர்ச்சி —-------

அ)வைரம்+வேல்        ஆ) மரம்+பலகை        இ) வீரம்+கலை.


IV. நிரப்புக (எவையேனும் நான்கனுக்கு மட்டும்)                                         4×1=4.

1. ஆ  ,   ஓ என்பன —-----ஆகும்.

அ)வினா எழுத்துகள்     ஆ) சுட்டெழுத்துகள்                இ) சுட்டுச்சொற்கள்

2.புணர்ச்சி---------வகைப்படும்.

அ)     4                         ஆ)     3                     இ)     2

3.அடுக்குத்தொடரிலும் ,     இரட்டைக்கிளவியிலும் வல்லினம் மிகாத தொடர்கள்---------

அ) பல பல, பளபள                    ஆ) தருகத் தருக, படப் பட

இ)குறு குறு, மறு மறு

4.முதல் வினைக்குத்துணையாக, வேறு இலக்கணப்பொருளைத்தரும் 

வினை-------------

அ) தனிவினை    ஆ) கூட்டு வினை    இ) துணை வினை

5.கூட்டுவினைகள் பொதுவாக —-----வகைப்படும்.

அ)     3                 ஆ)     4.                                 இ)     6


V. இலக்கணக்குறிப்பு தருக. (எவையேனும் நான்கனுக்கு மட்டும்)     4×1=4.

1.வானொலியில் பாட்டு வைத்தான்-------------

அ) முதல் வினை        ஆ) துணை வினை            இ) கூட்டு வினை

2.வாழைப்பழம்-----------------

அ) தோன்றல் விகாரப்புணர்ச்சி         ஆ) திரிதல் விகாரப்புணர்ச்சி

இ) கெடுதல் விகாரப்புணர்ச்சி

3.எத்தனை பெரியது? —------------

அ) இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது

ஆ) சுட்டுப்பெயரில் வல்லினம் மிகாது

இ)அளவுப்பெயர்களை அடுத்து வல்லினம் வரின் மிகாது.

4.பால் பருகினான்---------------

அ) இரண்டாம் வேற்றுமைத்தொடர்      ஆ) இரண்டாம் வேற்றுமைத்தொகை

இ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

5.மல்லிகைப்பூ----------------------

அ) பண்புத்தொகை                ஆ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை

இ) உம்மைத்தொகை


VI. கூறியவாறு செய்க( எவையேனும் நான்கனுக்கு மட்டும்)                 4×1=4.

1.கண்டு கொண்டேன்(வினை வகையைச்சுட்டுக)

அ) கூட்டுவினை    ஆ) துணைவினை        இ) தனிவினை

2.கிழக்கு+பகுதி = புணர்ச்சிவிதி      தருக.

அ) கிழக்குபகுதி (பெயர் முன் வல்லினம்மிகாது)

ஆ) கிழபகுதி (    இயல்புப்புணர்ச்சியில் வல்லினம் மிகாது    )

இ) கிழக்குப்பகுதி (  திசைப்பெயர்களை அடுத்து வரும் வல்லினம் மிகும்    )

3.எது கண்டால்? (    வல்லினம் மிகாமைக்குக்காரணம் தருக.    )

அ)சுட்டுச்சொல்லை அடுத்து வல்லினம் மிகாது.

ஆ) நிலைமொழியில் வல்லினம் வரின் மிகாது.

இ) எது எனும் வினாப்பெயரின் பின் வரும் வல்லினம் மிகாது.

4.பழம் , மரம் (    இடைச்சொல் சேர்க்க    )

அ) மாம்பழம், மாமரம்                ஆ) பழமும் மரமும்

இ) பழன்ன மரம்

5.கடி நகர், கடி மலர்,கடி குதிரை (    சொல் வகையை எழுதுக    )

அ) பல பொருள் குறித்த ஓர் உரிச்சொல்

ஆ) ஒருபொருள் குறித்த பல உரிச்சொல்                    இ) இடைச்சொல்.


VII. பின்வரும் செய்யுட்பகுதியைப்படித்து அதனைத்தொடர்ந்து வரும் வினாக்களுக்கு உரிய   விடையளிக்க.                                                         (5×1=5)

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடலன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்...


வினாக்கள்:

1.இப்பாடலின் ஆசிரியர்--------------

அ) கவிஞர் தமிழ் ஒளி            ஆ) சீத்தலைச்சாத்தனார்           இ) சேக்கிழார்

2) இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர்----------------

அ) பட்ட மரம்         ஆ) தமிழ் விடு தூது         இ) பெரிய புராணம்

3.கழை - என்பதன் பொருள்--------

அ) கரும்பு                     ஆ) சேலை                     இ) சங்கு

4.கருங்குவளை -இலக்கணக்குறிப்பு தருக.

அ) வினைத்தொகை        ஆ) பண்புத்தொகை                இ) உவமைத்தொகை

5.இப்பாடலாசிரியர் வாழ்ந்த நூற்றாண்டு--------

அ) கி. மு -12 ஆம் நூற்றாண்டு            ஆ) கி. பி. 12 ஆம் நூற்றாண்டு

இ) கி. பி. இரண்டாம் நூற்றாண்டு.


VIII. பின்வரும் உரைநடைப்பகுதியைப்படித்துணர்ந்து தொடர்ந்து வரும்

வினாக்களுக்குச்சரியான விடை தருக.                                                             5×1=5.

தமிழகவரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலன் சோழன்

காலத்தில் கட்டப்பட்ட கல்லணையே விரிவான பாசனத்திட்டமாக இருந்துள்ளது.

கல்லணையின் நீளம் 1080 அடியாகவும், அகலம் 40 முதல் 60 அடியாகவும் இருக்கிறது. அது

வலுவான கட்டுமானத்தொழில்நுட்பத்தால் இன்றும் பயன்படுவதோடு நமது

வரலாற்றுப்பெருமைக்குச் சான்றாக உள்ளது. அதைப்போலவே சோழர்காலக்குமிழித்தூம்பும்

குறிப்பிடத்தக்கதாகும். மழைக்காலங்களில் ஏரி நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவர்

தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து குமிழித்தூம்பை மேலே தூக்குவர்.அடியில்

இரண்டு துளைகள் காணப்படும். மேலே இருக்கும் நீரோடித்துளையில் இருந்து நீர்

வெளியேறும்.கீழே உள்ள சேறோடித்துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும்.

இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.


வினாக்கள்:

1.கல்லணையைக்கட்டியவர்------------------


அ) ஆங்கிலேயர்

ஆ) கரிகால சோழன்

இ) பென்னி குவிக்


2.கல்லணையின் நீளம்------------------

அ) 1080 ஆ) 40 இ) 60

3.கல்லணையின் பயன்பாடு —------

அ) குமிழித்தூம்பாக உள்ளது

ஆ) பாசனத்திட்டமாக உள்ளது

இ) தூர் வாரப்பயன்படுகிறது.

4.ஏரிகளில் தூர் வார வேண்டிய அவசியம் இல்லாமைக்குக்காரணம்------------

அ)குமிழித்தூம்பு உள்ளதால்.

ஆ) கல்லணை உள்ளதால்.

இ) ஏரிகளில் தூரே இருக்காமையால்.

5.குமிழித்தூம்பு இயங்கும் முறை-------------

அ) தானியங்கி முறை

ஆ) மின்சக்தி மூலம் இயங்குகிறது.

இ) நீந்துவதில் வல்லவர் கழிமுகம் சென்று இயக்குநர்.


IX. திருக்குறளில் மனனப்பாடலில் விடுபட்ட சீர்களை நிரப்புக. (4×1=4)

1.மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் —------வென்று விடல்.

அ) தகுதியான்        ஆ) மிகுதியான்        இ) வெகுமதியான்.


2.எனைத்தானும் —---------கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.

அ) அல்லவை         ஆ) நல்லவை            இ)இனியவை.


3.ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் —--------- , —------------ என்னு மவர்.

அ) செய்யா வினை, ஆ அதும்            ஆ) செய்வினை, ஆஅதும்

இ) நல்வினை,அஆதும்.


X. பின்வரும் செய்யுள் வினாக்களுள் எவையேனும் இரண்டுக்கு மட்டும் விடை தருக.                                                                                                                         2×3=6.

1.நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை    ஒப்பிடுகிறது?

2.கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக்கவிஞர் உணர்த்தும் கருத்துகள் யாவை?

3.விதைக்காமலே முளைக்கும் விதைகள் -இத்தொடரின் வழி சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும்   கருத்துகளை விளக்குக.

4.தொல்காப்பியம் -குறிப்பு வரைக.


XI.  உரைநடை வினாக்களுள்  மூன்றனுக்கு மட்டும் விடை தருக.            3×4=12

1.மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக்குறிப்பிடுக.

2.நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணி குறித்து எழுதுக.

3.வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

4.இணையப்பயன்பாடு பற்றி எழுதுக.

5.சங்க காலப்பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.


XII. துணைப்பாட வினாக்களுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் கட்டுரை வடிவில் விடை தருக்க.                                                                                                    (1×7=7)

அ) தண்ணீர் - கதைப்பகுதி விளக்கும் செய்தியைக்  கட்டுரையாகத் தருக.

(அல்லது)

ஆ) விண்ணையும் சாடுவோம் - பாடக்  கருத்தினை விளக்கி வரைக.

(அல்லது)

இ) வீட்டிற்கோர் புத்தகசாலை- விவரிக்க.


XII. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.                                                         (1×3=3)








XIII  கடித வினாக்களுள்  ஒன்றுக்கு மட்டும் கடிதம் எழுதுக.                     (1×6=6)

1.            உனது கிராமத்தில் நடைப்பெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகை தரும்படி உன் நண்பனுக்கு  /   தோழிக்குக் கடிதம் வரைக.

(அல்லது)

2.          உங்கள் ஊரில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும்  விதமாகச் சுற்றித்திரியும் கால்நடைகளைத் தடைசெய்யக்கோரி மாநகராட்சி

உறுப்பினருக்குக்  கடிதம் வரைக.

(கடிதம் எதுவாயினும்  மாணவர்  தங்களது முகவரியாகக் கொள்ளவேண்டியவை: இர. அருள்நிதி, எண்-108,காந்திநகர்,   பெரியார் தெரு,   அரும்பாக்கம்,  சென்னை - 106. )

XIV.  ஏதேனும் ஒரு தலைப்பில்  மட்டும் கட்டுரை வரைக.                               1×6=6.

1.        முன்னுரை- நான் விரும்பும் கவிஞர்- சிறப்புகள் -  விரும்பக்காரணங்கள் -மொழிப்பற்றும், நாட்டுப்பற்று - படைப்புகள்-முடிவுரை.

(அல்லது)

2.       முன்னுரை- சுற்றுச்சூழல் மாசு - காரணங்கள்- விளைவுகள் -தீர்வுகள்-மாணவர் கடமை  -  முடிவுரை.

(அல்லது)

3.முன்னுரை-தமிழர் பெருநாள்-போகித்திருநாள் பொங்கல் விழா - மாட்டுப் பொங்கல்- காணும்

பொங்கல்- -முடிவுரை.


தமிழாசிரியர் : 

அன்புச்செல்வன் பழ. 

—-------------------------------------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )