மெய் எழுத்துகள் -18.
மெய்
எழுத்துகள் -18.
மொழி இயங்குவதற்குக் காரணமாக இருக்கும் எழுத்துகள்.
·
வன்மையான ஓசையுடன் ஒலிப்பன.
வல்லினம்: 6.
க், ச், ட்,
த் ,ப், ற்.
·
மென்மையான ஓசையுடன் ஒலிப்பன.
மெல்லினம்: 6.
ங், ஞ், ண், ந், ம், ன்.
அங்ஙனம் - இங்ஙனம்
மஞ்சள் - பஞ்சம்
திண்ணை - மண்
பந்து - தந்தை
· இடைப்பட்ட ஓசையுடன்
அதாவது,
வன்மையான ஓசையும், மென்மையான ஓசையும் இன்றி , இடைப்பட்ட ஓசையுடன் ஒலிப்பவை.
இடையினம்: 6.
ய், ர் , ல் , வ் , ழ் ,ள்.
ஐயா - கவலையா..?
இரவு - பரவு
யாரது..? - பாரதியார்
இலை - தலை
அல்வா..? - அல்லவா..!
புகல் - அகல்
கவலை - குடவோலை
கள்வன் - உள்ளவன்
புகழ்ச்சி - இகழ்ச்சி
வெள்ளி - வெள்ளம்
திகழொளி - புகழொளி
வல்லின எழுத்துகள் .
பயிற்ச்சி / முயற்ச்சி
அதற்க்குள்/ இதற்க்குள்
இவ்வாறு ஒரு சொல்லில் இரண்டு வல்லின மெய் எழுத்துகள் கள் சேர்ந்து சொற்கள் அமையாது.
அப்படி எழுதுதல் தவறாகும் .
இவைகள் முறையே,
பயிற்சி / முயற்சி , அதற்குள்/ இதற்குள் என்றே அமையும்.
Comments
Post a Comment