விண்ணைத்தாண்டிய நம்பிக்கை இயல்-4 STD X

 

இயல் 4

விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

ஸ்டீபன் ஹாக்கிங்

கருந்துளைக்கோட்பாடு

முன்னோடிகள்

பெருமைகள்

முடிவுரை

 

முன்னுரை

றியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரி அல்ல. அது  அறிவின் மாயையே. அறிவாற்றலின் உயர்ந்த நிலையே கண்டுபிடிப்புகள். அத்தகைய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி இங்கு காண்போம்.

 

ஸ்டீபன் ஹாக்கிங்

வானியல் ஆய்வு பற்றிய முந்தைய ஆய்வுகளைத் தானும் ஆராய்ந்து அவற்றைத் தவறு என்று நிரூபித்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

 வானியல் பற்றி நாம் அறிந்து கொள்ள துணை செய்வது சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் உள்ள பிர்லா கோளரங்கம் ஆகும். அது 360 டிகிரி பாகையில் அரைவட்ட வடிவில் அமைந்த தனித்துவமான அரங்கம் ஆகும். இது 1988ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

 ஸ்டீபன்  ஹாக்கிங்  பற்றிய  செய்திகளும்  இங்கு  திரையிடப்படும். நரம்பு நோய் பாதிப்பு மற்றும் மூச்சுக்குழாய் தடங்கல் இதனால்  பேசும் திறனை இழந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். கண் அசைவின் மூலம் தன் கருத்தைச் செயற்கை நுண்ணறிவு கணினியின் உதவியுடன் வெளியிட்டார். இங்கிலாந்தில் பிறந்து இருபத்தியோரு வயதுவரை மட்டுமே வாழ்வார் என்று மருத்துவர்கள்  கணித்தபோதும் , தனது 70 வயது வரை வாழ்ந்த மிகச்சிறந்த வானியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங்.


கருந்துளைக் கோட்பாடு

ஜான் வீலர் என்பவர்தான் முதன் முதலில் கருந்துளை என்ற சொல்லையும், அதன் கோட்பாட்டையும் குறிப்பிட்டார்.  சுருங்கிய  விண்மீனின் ஈர்ப்பு எல்லைக்குள் செல்கிற எதுவும் தப்ப முடியாது. அவ்வாறு உள்ளே சென்ற எதுவும் வெளி வர முடியாததால் அதனைக் கருந்துளை என்று கூறலாம் என்றார். அது அழிவின் ஆற்றலாகக் கருதப்பட்டது. ஆனால் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் சான்றுகளுடன் விளக்கினார்.

 

முன்னோடிகள்

ஐன்ஸ்டீன்,  நியூட்டன் ஆகியோர் முன்னோடிகள் எனலாம். நியூட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வகித்த லூகாஸ் சின் பேராசிரியர் என்ற  மதிப்புமிக்க பதவிய ஸ்டீபன் ஹாக்கிங் வகித்தார். விண்மீன்களுக்கு இடையே ஈர்ப்பு அலைகள் இருப்பதை உலகம் பின்னர் உணர்ந்தது. ஐன்ஸ்டைன் போலக்  கோட்பாடுகளைச் சொல்லாமல், விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு நோக்கி கூறியதால் உலகம் கருந்துளைக் கோட்பாட்டை மிக எளிதாகப் புரிந்து கொண்டது. இப்பேரண்டமானது பெரு வெடிப்பினால் உருவானதே ( பிக் பேங் தியரி ) என்பதைத் தக்க சான்றுகளுடன் கணித அடிப்படையில்  ஸ்டீபன் ஹாக்கின் விளக்கியதே  தனிச்சிறப்பாகும்.

 

பெருமைகள்

கலிலீயோவின் நினைவு நாளில் பிறந்து; ஐன்ஸ்டைனின் பிறந்தநாளில் இறந்தவர்; ஸ்டீபன் ஹாக்கிங் இம்மூவரும் வானியல் பற்றிய அறிவு வளரத்துணை நின்றவர்கள் ஆவர்.  2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாயகன் என்ற சிறப்பைப் பெற்றவர் ஸ்டீபன் ஹாக்கிங். அவர்  தனது 60வது பிறந்த நாளை பறக்கும் பலூனில்பறந்தபடி கொண்டாடியவர். போயிங் 727 ரக விமானத்தில் ( 0 ) சுழியம் புவியீர்ப்பு விசையற்ற நிலையில் (எடையற்ற  நிலையில்) பறந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

1) அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது.

2) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது.

 3) காப்ளி விருது.

4) அடிப்படை இயற்பியல் பரிசு எனப் பல  விருதுகளும் இவரால் பெருமை பெற்றன. 

 

முடிவுரை

உடல் ஊனம் என்பது மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத் தடை அல்ல என்பதை உணர்த்தியவர் ஸ்டீபன் ஹாக்கிங். தளராத ஊக்கமும் அயராத உழைப்பாளராகவும் திகழ்ந்தவர்.

உடல்  மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும்  புத்திக்கூர்மையும் வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

  

தமிழாசிரியர் : 

அன்புச்செல்வன் பழ. 

அறிவியல் தமிழ் மன்றம்.

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை