கோலப்பெருமாள் பள்ளித் தெரு , அரும்பாக்கம், சென்னை- 106.
முதற்பருவத் தமிழ்த்தேர்வு --- அக்டோபர் (2023-24)
வகுப்பு : 10 காலம்: 3 மணிநேரம்.
நாள் : 05.10.2023 மதிப்பெண்கள்: 80
(பகுதி -அ)- 10
I.பத்தியைப் படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5.
வானொலி என்பது மக்களின் செய்தித்தொடர்புச் சாதனமாகும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சிகள், அரசியல் , சினிமா என எல்லாச் செய்திகளையும் தருகின்ற தலைசிறந்த ஊடகம் வானொலியே ஆகும். உள்ளூர்ச் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அனைத்தையும் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது இவ்வூடகமே ஆகும். படித்தோர்க்கும் பாமரனுக்கும் பாலமாக விளங்கியதும் இதுவே ஆகும். 1932ல் சென்னை வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. பண்பலை, சிற்றலை, மத்திய அலை, இணையவலை என அனைத்தின் வழியாகவும் வானொலி வலம்வந்துகொண்டு இருக்கின்றது. அறிவியல் தந்த படைப்புகளில் உயர்ந்த படைப்பு வானொலி ஆகும். அதனைக்கண்டு பிடித்த மார்கோனி அவர்களுக்கு என்றும் நன்றி சொல்ல வேண்டும். எத்தனை ஊடகங்கள் வந்தாலும், வானொலியின் இடத்தை எதுவுமே ஈடு செய்ய இயலாது என்பதே உண்மை ஆகும்.
வினாக்கள்:
1. வானொலி எத்தகு சாதனம் ?
அ) சமையல். ஆ) போக்குவரத்து இ) வெளிப்பாடு ஈ) பொழுதுபோக்கு
2. செய்தியின் வகைகளை எழுது ?
அ) வெளியூர்/ உள்ளூர் ஆ) உள்ளூர்/ பக்கத்தூர் இ) பக்கா நாடு/ வெளிநாடு. ஈ) நாளேடுகள்/ இதழ்கள்.
3. வானொலியின் அலைவரிசைகள் எத்தனை ?
அ) 3 ஆ) 5 இ) 7 ஈ) 4
4.வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் ?
அ) நியூட்டன் ஆ) கலிலியோ இ) இராபர்ட் ஈ) மார்க்கோனி
5. ஈடு செய்ய இயலாத அறிவியலின் படைப்பு எது ?
அ) பத்திரிக்கை ஆ) தொலைக்காட்சி
இ) தொலைபேசி ஈ) வானொலி
II. பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க : 5×1=5.
1960 களில் இந்திய தேசமே பசிக்கொடுமையால் வாடியபோது, கோவை வேளாண் கல்லூரியில் வேளாண்மை பட்டம், பெற்றார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரபணுப் பயிர்கள் பாடத்தில் முதுகலைப் பட்டம், அமெரிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுத் தன்னைத்தானே , செதுக்கிக் கொண்டவர். 1954 முதல் 1972 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திலும், 1972 முதல் 1980 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலிலும், 1988 வரை சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றினார். பத்மவிபூஷன், மகசேசே விருது, 38 உலக பல்கலைக்கழகங்களில் கவரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர் ஆனார். 1988- இல் சென்னை - தரமணியில் M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவியதோடு, அதனைக் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தியவர். இந்தியாவில் வாழ்ந்த 70 கோடி வயிறுகளின் பசிப்பிணிக்கு மணிகட்டிய , சுவாமிநாதன் உண்மையிலேயே பசுமைப் புரட்சியின் சிறந்த நாயகன் தான். அவரைப் பழுத்துப் பசிபோக்கி நெடிது வாழ்ந்த நெற்கதிர் எனலாம்.
வினாக்கள்:
1. இந்தியதேசமே பசிக்கொடுமையால் வாடிய ஆண்டு எது .?
2. எந்தப் பயிரோடு ஒப்பிட்டு வேளாண் அறிஞர் சிறப்பிக்கப்படுகிறார் ?
3. தமிழ்நாட்டில் ஆராய்ச்சி அறக்கட்டளையை எங்கு அமைத்தார் ?
4. வேளாண்மைப் புரட்சியின் நாயகன் என அழைக்கக் காரணம் என்ன ?
5. அறிஞர் சுவாமிநாதன் பெற்ற கௌரவ டாக்டர் பட்டங்கள் எத்தனை ?
பகுதி- ஆ – 12
( இலக்கணப்பகுதி வினாக்கள் )
III. சான்று தருக ( எவையேனும் முன்றனுக்கு மட்டும் ) 3×1=3.
1. தொகைநிலைத்தொடர்
அ) குட்டி நாய் ஆ) தாயும் நாயும் இ) குரங்கு ஈ ) நாய்க்குட்டி
2. விளித்தொடர்
அ) கண்ணன் வந்தான் ஆ) கண்ணா வா. இ)கண்ணு வந்தான்
ஈ ) கண் வா.
3. முதனிலைத்தொழிற்பெயர்
அ) வாழ் ஆ) வாழ்க்கை இ) வாழ்தல் ஈ ) வாழ்த்துதல்
4. தனிமொழி
அ) அந்த மான் ஆ) அந்தமான் இ) எந்த மான் ஈ ) சொந்தமான்
5. விகுதிபெற்ற தொழிற்பெயர்
அ) பார்த்தான் ஆ) பார்வதி இ) பார் ஈ ) பார்த்தல்
IV. நிரப்புக (எவையேனும் நான்கனுக்கு மட்டும்) 3×1=3.
1. அளபெடையில் இடம் பெறாத மெய்யெழுத்துக்கள் மொத்தம் _______.
அ) 8 ஆ) 3 இ) 11 ஈ ) 18
2. பெயரையோ ? அல்லது வினையையோ ? தொடர்ந்து வருவது _________ தொடர் ஆகும்.
அ) வினைச்சொல் ஆ) உரிச்சொல் இ) இடைச்சொல் ஈ ) பெயர்ச்சொல்
3. சிறப்புப்பெயர் முன்னும் , பொதுப்பெயர் பின்னுமாக நின்று இடையில் 'ஆகிய' என்னும் ----------------------------- தொக்கிவருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
அ) பண்புருபு ஆ) சொல்லுருபு இ) இடையுருபு ஈ ) தொகையுருபு
4. பகாப்பதமாக அமைவது ----------------------------- ஆகும்.
அ) வினைத்தொகை ஆ) தனிமொழி இ) தொடர்மொழி
ஈ ) அன்மொழித்தொகை
5. தொழிலை உணர்த்தாமல் , தொழிலைச் செய்யும் கருத்தாவை உணர்த்துவது, -------------------------- பெயராகும்.
அ) கருத்தாப் ஆ) தொழிற்பெயர் இ) தொகாநிலைத் தொடர்
ஈ ) வினையாலணையும் பெயர்
V. இலக்கணக்குறிப்பு தருக. ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 3×1=3.
1. கொல்களிறு.
அ) பெயரெச்சம் ஆ) வினையெச்சம் இ) முற்றெச்சம்
ஈ ) வினைத்தொகை
2. உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை.
அ) பாகன்தேர் ஆ) பல்மருத்துவர் இ) தேர்ப்பாகன் ஈ ) பாகன்
3. உரைனசைஇ.
அ) இசைநிறையளபெடை ஆ) சொல்லிசையளபெடை
இ) ஒற்றளபெடை ஈ ) செய்யுளிசையளபெடை
4. மாமன்றம்.
அ) உரிச்சொல்தொடர் இடைசொல்தொடர் ஆ) நெடில்தொடர் இ)
ஈ ) அடுக்குத்தொடர்
5. முறுக்குமீசை பேசினார்.
அ) எழுவாய்த்தொடர் ஆ) அன்மொழித்தொகை
இ) தொகாநிலைத்தொடர் ஈ) தொழிற்பெயர்
VI. கூறியவாறு செய்க ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 3×1=3.
1. செந்தாமரை ( பண்புருவை நீக்குக )
அ) சிவப்பு ஆ) தாமரை இ) மரை ஈ ) செம்மை
2. பேருந்து வருமா ? ( வினைத்தொடர் ஆகுக. )
அ) வாராப் பேருந்து ஆ) வரும் பேருந்து இ) வந்தது பேருந்து
ஈ ) வந்த பேருந்து
3. பால் குடித்தான் ( வேற்றுமைத் தொகாநிலையாக மாற்றுக )
அ) குடித்தான் ஆ) பால் இ) குடி பால் ஈ ) பாலைக் குடித்தான்
4. நடந்தான் ( தொழிற்பெயராக்குக )
அ) ஆன் ஆ) நட இ) நடத்தல் ஈ ) நடித்தல்
5. அவன் வந்தான் ( வினையாலணையும் பெயராக்குக )
அ ) அவர் வந்தவர் ஆ ) வந்தவர் அவர்தான் இ ) வந்தான் அவன் .
ஈ ) அவன் வந்தான்
பகுதி- - 31
VII. செய்யுட் பகுதியைப்படித்து அதனைத் தொடர்ந்து வரும்
வினாக்களுக்குரிய விடையளிக்க. (5×1=5)
தென்னன் மகளே ! திருக்குறளின் மாண் புகழே !
இன்னரும் பாப்பதே ! எண்தொகையே நற்கணக்கே !
மன்னுஞ்சு சிலம்பே ! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே..!
வினாக்கள்:
1. பாடல் இடம்பெற்ற நூல் எது ?
2. முடி = பொருள் எழுது ?
3. தென்னன் மகளாக வளர்ந்தவள் யார் ?
4. இப்பாடல் ஆசிரியரின் இயற்பெயர் யாது ?
5. இன்னரும் பாப்பதே ! எண்தொகையே நற்கணக்கே !
இவ்வடியில் இருந்து நீவிர் அறிந்த விளக்கம் யாதோ ?
VIII. திருக்குறளில் மனனப்பாடலில் விடுபட்ட சீர்களை நிரப்புக. (2×1=2)
1. ------------------ பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் .
அ) குள்ளார் ஆ) புல்லார் இ) கல்லார் ஈ) பல்லார்
2. அருமை உடைத்தென் ------------------ வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
அ) றசாவாமை ஆ) ராசாவாமை இ) அசாவாமை ஈ) ஆசாவாமை
IX. செய்யுள் வினாக்களுள் (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்) விடை தருக. 3×3=9.
1. தமிழின் பெருமைகளாகப் பெருஞ்சித்திரனார் கூறுவன யாவை ?
2. மகாகவி பாரதியார் காற்றிடம் விடுக்கும் வேண்டுகோள்கள் யாவை ?
3. கடலும் தமிழும் ஒன்றாவது எவ்வாறு என்பதை விளக்கி எழுது ?
4. விருந்தினரை வரவேற்கும் முறைகளாக நறுந்தொகை கூறுவன யாவை ?
5. பரிபாடல் தரும் உலகத்தோற்றம் பற்றிய செய்திகளை எழுதுக .
X. உரைநடை வினாக்களுள் மூன்றனுக்கு மட்டும் விடை தருக. 3×5=15.
1. தமிழ் இலக்கியங்கள் காட்டும் தமிழர் விருந்தோம்பல் பற்றி விளக்கு.?
2. காற்றினால் விளையும் நன்மைகள் யாவை?
3. தமிழ்ச்சொல் வளம் தரும் பூவின் நிலைப்பெயர்கள் / கிளைப்பெயர்கள் குறித்து எழுதுக .?
4. காற்றினை மாசுபடுத்தும் காரணிகளைப் பட்டியலிடுக.
5. தற்காலத்தில் விருந்தினர் என்போர் யார் ?
விருந்துபோற்று முறைகள் குறித்து விரிவாக எழுது.?
பகுதி-ஈ - 27.
XI. துணைப்பாட வினாக்களுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் கட்டுரை வடிவில் விடை தருக. ( 10 × 1= 10 )
அ) உரைநடையின் அணி நலன்களில் எவையேனும் ஐந்தினை - விளக்குக .
ஆ) அன்னமய்யாவின் தாய்மை உள்ளம் பற்றி விவரித்து எழுது..?
இ ) கடற்பயணத்தின் அவலங்கள் பற்றி ப. சிங்காரத்தின் நாவல் வழி விளக்குக.
XII. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக. (1×3=3)

Comments
Post a Comment