MIDTERM 23.08.2023 STD X QUESTION PAPER - IYAL -- 1, 2.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடைப்பருவத்தேர்வு - ஆகஸ்டு - 2023.
வகுப்பு : பத்து தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40.
நாள் ; 23 ஆகஸ்டு 2023 கால அளவு ; 90 நிமிடம்.
அ. பத்தி வினா விடை 5* 1 = 5.
அறிவினைத் துலங்க வைக்கும் பல கருவிகளுள் நூலும்ஒன்றாகும். கணக்கற்ற அறிஞர்கள் தங்கள் எண்ணங்களையும் கண்டுபிடிப்புகளையும் நூல்களாக எழுதித் தந்துள்ளனர். அந்நூல்களை முறையாகவும் , அழகாகவும் அடுக்கி வைத்துப் பயன்படுத்தும் இடமே நூலகமாகும். நூல்நிலையத்தில் பலவகையான நூல் இருக்கும். விலை கொடுத்து நூல்களை வாங்கிப்படிக்க இயலாதவர்கள், நூல் நிலையங்களுக்குச் சென்று படித்துப்பயன் பெறலாம். நூல்நிலையங்களைப் பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், குழந்தைகள் நூலகம், பொதுநூலகம், நடமாடும் நூலாகும்,நூல்களை வாடகைக்கு விடும் நூலகம் எனப்பல வகைப்படுத்தலாம். நூலகங்கள் மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். "கண்டது கற்றால் பண்டிதன் ஆகலாம்" என்பதை உணர்ந்து நூலகம் சென்று பயனடைவோம் .
வினாக்கள்:
1. அறிவினைத் துலங்கச்செய்யும் கருவி எது?
2. நூல்கள் எவ்வாறு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ?
3. நூல்கள் எவற்றை வளர்க்க உதவும் ?
4. கற்றலுடன் தொடர்புடைய பொன்மொழி எது ?
5. பத்திக்கு ஏற்ற தலைப்பினை எழுது ?
ஆ . நிரப்புக 4* 1 = 4.
1. மொழி --------------- வகைப்படும்.
2. குறையும்போது சொற்கள் நீண்டு ஒலிப்பது ______ எனப்படும்.
3. தொழிற்பெயர் ----------------- காட்டாது.
4. வினைத்தொகையின் வேறுபெயர் ______ ஆகும்.
இ . சான்று தருக 4* 1 = 4.
1. உயிரளபெடை : .........................
2. தொடர்மொழி :.........................
3. வேற்றுமைத்தொகை நிலைத்தொடர்:....................................
4. உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை : .................................
ஈ. கூறியவாறு செய்க. 3* 1 = 3.
1.அங்ங்ஙனம் ( அளபெடை வகையை எழுது )
2. முறுக்கு மீசை பேசினார் ( தொகை வகையைக் காண்க )
3. அலையும் கடலும் ( வினைத்தொகை ஆக்குக )
உ . பாடல் வினா விடை. 4 * 1 = 4.
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத்தவர் காக்கா ஆழிக்கு
இணைக்கிடந்த தேதமிழ் ஈண்டு .
1. பாடல் இடம் பெற்ற நூல் எது?
2. பாடல் ஆசிரியரின் இயற்பெயர் என்ன?
3.வணிகலமும் - இச்சொல் உணர்த்தும் இருபொருளை எழுது?
4. முச்சங்கம் - பிரித்து எழுது ?
உ . செய்யுள் வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் ) 2 * 3 = 6.
1. தமிழின் பெருமைகளாகப் பெருஞ்சித்திரனார் கூறுவன யாவை ?
2. மகாகவி பாரதியார் காற்றிடம் வேண்டுவன யாவை ?
3. விரிச்சி கேட்டல் - குறிப்பு எழுதுக . முதுபெரும் பெண்டிர் தலைவிக்கு வழங்கிய ஆறுதல் மொழி யாது?
ஊ . உரைநடை வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் ) 2 * 4 = 8.
1. கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் பெயர்களையும் , தானிய வகைகளுக்கு வழங்கும் சொற்களையும் வரிசைப்படுத்துக ?
2. இலக்கியங்களில் காற்று எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்பட்டுள்ளது ?
( உன் முகவரி: வேலன் / செல்வி, எண்; 11, பாரதி தெரு,
நாச்சியார் நகர், திருமங்கலம், மதுரை ...2. எனக்கொள்க.)
-----------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
APL2023.
Comments
Post a Comment