மாதிரி முதற்பருவத்தேர்வு / வினா - விடைக்குறிப்பு செப்டெம்பர் 2023.

 கோலப்பெருமாள்    செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

 எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,  அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

           மாதிரி முதற்பருவத்தேர்வு                                          செப்டெம்பர் 2023.

வகுப்பு : பத்தாம்                        தமிழ்த்தேர்வு                 மதிப்பெண் : 40. 

நாள் ; 21 செப்டெம்பர் 2023                                     அளவு ;  90 நிமிடம். 

                                                                 பகுதி  - அ 

 1.பின்வரும்  பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக          5*1 = 5.

 ஆபிரகாம் பண்டிதர் 1874 ஆம் ஆண்டு  திண்டுக்கல் நார்மல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து முதன்மை மாணவராகத் தேர்ச்சி பெற்றார். ஆபிரஹாமின் தனித்  திறமையை அறிந்த முதல்வர் யார்க் துரை  அவர்கள் வெகுவாகப் பாராட்டினார் . தமது மாதிரிப் பள்ளியின் ஆசிரியராக அவரை நியமித்தார்.   ஆபிரகாம் பண்டிதர் பள்ளியின் வகுப்பறையில் பாடங்களை நேரடியாக நடத்தாமல் , கதைகளின் ஊடாகவே நடத்துவார். ஏதன் காரணமாக அவரைக் கதை வாத்தியார் என்று பெயரிட்டு  அழைத்தனர். திண்டுக்கல்லில் புகழ்பெற்ற வயலின் வித்வான் சடையாண்டிப் பண்டிதரிடம் இசையை முறையைக் கற்றுக்  கொண்டார் .ஐரோப்பிய இசை வல்லுனரான யார்க் துரை மேற்கத்திய இசையினையும் கற்றுக்கொண்டார். இசைத்துறையில் இருந்து கொண்டே சித்த மருத்துவமும் கற்றுக்கொள்ள விரும்பினார். சுருளிமலை கருணானந்த முனிவரிடம் சென்று பல்வேறு நோய்களை நீக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டார். 1882 இல் ஞானவடிவு பொன்னம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளியில்  பணியாற்றினார்.

வினாக்கள்: 

1. ஆபிரகாம் பண்டிதருக்கு வழங்கப்பட்ட  சிறப்புப் பெயருக்கான  காரணம் யாது  ?

அ ) முதன்மை மாணவர் என்பதால்.  ஆ)  சித்த மருத்துவம் பார்த்ததால்    இ) வள்ளல் தன்மையால்    ஈ) பாடங்களைக் கதையோடு கற்பித்ததால்.  

2. ஆசிரியராக நியமித்ததவர் யார்  ?

அ ) ஞானவடிவு  ஆ) பொன்னம்மாள்    இ)யார்க் துரை    ஈ) இசைஞானி   

3. ஆபிரகாம் , சடையாண்டிப் பண்டிதரிடம் கற்றது என்ன ?

அ) வயலின்    ஆ) மிருதங்கம்       இ) பாட்டு    ஈ) இசை 

4. கருணானந்த முனிவர்  எதில் சிறந்து விளங்கினார்.?

அ) சித்த மருத்துவம்  ஆ) யோகா     இ) வில்வித்தை    ஈ)வேட்டை    

5. கணவனும் மனைவியும் எங்கு பணியாற்றினர் ?

அ) தஞ்சை   ஆ)சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளி   இ) திருச்சி      ஈ)ஈரோடு.

                               பகுதி  - ஆ  இலக்கணம் 

3. .சான்று தருக  ( எவையேனும் நான்கு  மட்டும் )                           4*1 = 4.

1.இன்னிசையளபெடை 

                 அ) தீதொரீஇ   ஆ) படாஅபறை    இ) ஓஒதல்  வேண்டும் 

                    ஈ)  தூஉம் மழை. 

 2.  உம்மைத்தொகை

        அ )அலைகடல்  ஆ) தேர்ப்பாகன்    இ) கபிலரும் பரணரும்  

                    ஈ) தாய்சேய் .  

3. பண்புத்தொகை      

        அ ) கயல் பாடினாள்  ஆ)சிவப்புப்புச்சட்டை பேசினார்

        இ) சிவந்த மண்    ஈ) கருங்குரங்கு.   

4.    தொழிற்பெயர் 

அ ) ஆடு     ஆ) ஆடினாள்   இ) ஆடினார்   ஈ) ஆடல். 

5.    வேற்றுமைத்தொடர் 

         அ ) கட்டுரை படித்தான்  ஆ) கட்டுரை  படி   

இ) கட்டுரையைப்படித்தான்  ஈ)  படித்தான் கட்டுரை. 

4.  நிரப்புக   ( எவையேனும் நான்கு  மட்டும் )                            4*1 = 4.

1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து  பொருளை உணர்த்துவது ----------  எனப்படும்.

அ )தொடர் மொழி  ஆ) அளபெடை  இ)பொதுமொழி   ஈ) தனிமொழி   

2.    வினையடியுடன் விகுதி  சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ----------- தொழிற்பெயர்  ஆகும்.

அ ) அடுக்குத்தொடர்  ஆ) இரட்டைக்கிளவி  இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்  ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்   

3.    தொகைநிலைத்தொடர் ----------- வகைப்படும்.

அ ) ஆறு  ஆ) ஏழு   இ) எட்டு   ஈ) ஒன்பது 

4.    காலம் கரந்த ----------------   வினைத்தொகை  ஆகும்.

அ ) பெயரெச்சமே  ஆ) வினையெச்சமே   இ) தெரிநிலை வினைமுற்று   ஈ) குறிப்பு வினைமுற்று. 

   5. எழுவாய்த் தொடரானது  ------- வகையாக அமையும்.

அ ) இரண்டு ஆ) நான்கு   இ) மூன்று   ஈ) ஐந்து  

5. கூறிவாறு  செய்க   ( எவையேனும் நான்கு மட்டும் )             4*1 = 4.

1. கரும்பு தின்றான் (  எவ்வகைத் தொகைநிலை )

அ ) உவமைத்தொகை  ஆ) உம்மைத்தொகை  இ)வேற்றுமைத்தொகை   ஈ)வினைத்தொகை   

2. பரிசு பெற்றான்  ( வினையால் அணையும் பெயராக்குக )

அ ) பரிசு பெறு  ஆ) பெற்றான்பரிசு  இ) பரிசு பெற்றவனைப்பாராட்டினர்   ஈ) பரிசுபெற்றான் பாராட்டினர்.    

3.பவளவாய்   ( உருவகமாக்குக )

அ )வாய்ப்பவளம்  ஆ) பவளம்   இ) வாய்ப்பவள்   ஈ) பல்லாகிய வாய்   

4. செந்தாமரை  ( எவ்வகைப் பண்புத்தொகை  )

அ ) வண்ணம்  ஆ) வடிவம்   இ) அளவு  ஈ) சுவை 

 5.  சிரித்துப்பேசினார் ( அடுக்குத்தொடராக்குக )

அ )  சிரித்துச் சிரித்துப்பேசினார். ஆ) அழுது  அழுது பேசினார்   இ) கலகலவெனச் சிரித்தார்  ஈ) பேசிப்பேசி சிரித்தார்.

6. இலக்கணக்குறிப்புத்  தருக   ( எவையேனும் நான்கு   மட்டும் )                    4*1 = 4.

1. உறாஅர்க்கு   உறுநோய் 

அ) செய்யுளிசையளபெடை       ஆ) அடுக்குத்தொடர்  இ) ஒற்றளபெடை  ஈ)வினையாலணையும்பெயர்.   

        2. அமுதா பாடினாள் 

அ ) வினையெச்சத்தொடர் ஆ) குறிப்பு வினையெச்சம்    இ)  தெரிநிலை வினைமுற்று  ஈ) தொடர்மொழி.   

        3.  கேட்ட பாடல்  

அ ) பெயரெச்சத் தொடர்  ஆ) வினையெச்சத்தொடர்  இ) எழுவாய்த்தொடர்  ஈ) வினைமுற்றுத்தொடர்.    

                 4. மாமன்னர் 

            அ ) பொதுமொழி  ஆ) இடைச்சொல்தொடர்   இ) உரிச்சொல்தொடர்  ஈ) குறிப்பு வினைமுற்று. 

               5.   கொல்களிறு  

அ ) வினைத்தொகை  ஆ) பண்புத்தொகை  இ) உம்மைத்தொகை   ஈ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை.                                                                           

                                                    பகுதி  - இ   -  இலக்கியம்.

7. பின்வரும்  கோடிட்ட இடங்களை நிரப்புக.                                        3*1 = 3.

1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும்  அப்பொருள் 

               ------------------  காண்பது  அறிவு. 

           ஆ) மெய்ப்பொருள் 

        2. பண்என்னாம் பாடற்  கியைபின்றேல் : கண் என்னாம் 

            காண்ணோட்டம்  இல்லாத -------------.

           அ ) கண்  

        3. அருமை உடைத்தன் றசாவாமை  வேண்டும் 

            பெருமை ---------- தரும்.  

        அ) முயற்சி  

8. பின்வரும்  செய்யுள் பகுதியைப்  படித்துப்  பொருள் உணர்ந்து, தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.               5*1 = 5.

                அன்று அவண்  ஆசைஇ , அல்சேர்ந்து அல்கி 

                கன்று எரி  ஒள் இணர்  கடும்போடு  மலைந்து 

                சேந்த செயலைச் செப்பம் போகி ,

                அலங்கு கழை  நரலும்  ஆரிப்படுகர்ச்  ...... !

                வினாக்கள் :     

           1.பாடல்  இடம்பெற்ற நூல் எது ?

அ )  சங்க இலக்கியம் ஆ) பத்துப்பாட்டு 
இ) எட்டுத்தொகை      ஈ)  மலைப்படு கடாம்.  

2. எப்போது இளைப்பாற வேண்டும் ?

அ)  மாலையில் ஆ) காலையில்    இ) பகலில்   ஈ)  இரவில் 

         3.ஓசை எழுப்புபவை  எவை  ?

அ)  குயில்கள்  ஆ) மயில்கள்  இ) குரங்குகள்   ஈ)  மூங்கில்கள் 

         4. சேந்த செயலைச் செப்பம் போகி  - பொருள் எழுதுக.

அ) சிறப்பாக செய்த செயல் நேரம்      ஆ) சிறப்பான மூங்கில்கள்  வளர்ந்த இடம்   இ) சிவந்த  பூக்களைக் கொண்ட அசோகமரங்களை உடைய வழி ..!    ஈ) ஓசையை எழுப்புகின்ற  மூங்கில்கள் .

             5. பாடலின்  ஆசிரியர்   யார் ?

அ ) சந்தைக்கவிமணி ஆ) தமிழழகனார்  இ) பாரதியார்   ஈ)  பெருங்  கௌசிகனார் 

    9.  பின்வரும்   பலவுள்  தெரிவு வினாக்களுள்  ( எவையேனும் ஐந்தனுக்கு )  விடைகளை  எழுதுக.                                                     5 * 1 = 5.

                1.வரகு , கேழ்வரகு  போன்றவற்றின் உமிக்கு வழங்கப்படும்  பெயர்                 --------------------- ஆகும் .                

                   அ )தொம்பை ஆ) கொம்மை   இ) பொம்மை   ஈ) கெம்பை   

    2. தென்னை , பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு ---------- எனப்படும்.

        அ) குரும்பை  ஆ) முட்டு  இ) கச்சல்   ஈ) பூம்பிஞ்சு  

    3.இயற்கையின் கூறுகளில் காற்றின் --------   கூடுதலானது. 

        அ) பங்கு      ஆ) போக்கு     இ) ஆக்கம்     ஈ) தேக்கம் 

    4. வண்டோடு  புக்க மணவைத்த தென்றல் இடம்பெற்ற  நூல் -----------.

    அ ) சிலப்பதிகாரம் ஆ) சிவபுராணம்   இ) சீவக சிந்தாமணி 

    ஈ)  பெரிய புராணம் 

            5. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் -

            எனும் வரிகள் இடம்பெற்ற நூல் ----------------------.

  அ )  ஆத்திசூடி    ஆ ) திருக்குறள் 

இ )  குறுந்தொகை  ஈ ) கொன்றை வேந்தன்   

             6. தலைவாழை இலையில் விருந்தினருக்கு விருந்தளிப்பது நம் ----------

                கருதப்படுகிறது .

அ) பழக்கமாக  ஆ)  வழக்கமாக   இ) மரபாக  ஈ) வழிவழியாக  

            7.குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப்பெய்து 

                சிறிது புறபட்டன்றோ இலள் -  காட்சிப்படுத்தும் நூல் ---------------.

அ ) புறநானூறு         ஆ  ) அகநானூறு         இ ) கலித்தொகை   
ஈ)  அகத்தியம்.

10.   துணைப்பாடப்  பகுதி வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.   5*1 = 5.                 

           1.  அன்னமய்யாவின் தோட்டத்தில் இருந்த  வேப்பமரத்தின்                                           அடியில்   இருந்தவை  எவை.?

அ ) உழவர்கள்   ஆ) கரிசல் மண்  இ) காகங்கள்   ஈ)  மண்கலயங்கள் 

           2. பழங்காலச்   செவ்வியல் இலக்கிய வடிவமாக இருந்தது  எது    ?

அ ) பாட்டு   ஆ) செய்யுள் இ) உரைநடை   ஈ)  நாட்டுப்புறப்பாட்டு 

            3. தமிரோ  -- பொருள் தருக?

அ ) டம்ளர்    ஆ) சொம்பு  இ)தாய்லாந்து    ஈ) தமிழரா   

4. கேட்காதன  கேட்பது போலவும் , பேசாதன பேசுவது போலவும் படைப்பது  எவ்வகை அணி இலக்கணம் ?

அ)  சொல் முரண்  ஆ)  சிலேடை  இ) உவமை     ஈ)  இலக்கணை  

         5. புலம்பெயர்ந்த தமிழர்களின்  முதல் புதினம்   ?

          அ ) அலைகடல்     ஆ) கடற்கூத்து   இ) புயலிலே ஒரு தோணி    ஈ) புயலிலே ஒருகப்பல்.  

                      APL2023

கோலப்பெருமாள்    செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

 எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,  அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

           மாதிரி முதற்பருவத்தேர்வு                                          செப்டெம்பர் 2023.

வகுப்பு : பத்தாம்                     தமிழ்த்தேர்வு                        மதிப்பெண் : 40.

வினா      விடைக்குறிப்பு  

நாள் ; செப்டெம்பர் 2023                                     அளவு ;  90 நிமிடம். 

                                                                 பகுதி  - அ 

 1.பின்வரும்  பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக          5*1 = 5.

 ஆபிரகாம் பண்டிதர் 1874 ஆம் ஆண்டு  திண்டுக்கல் நார்மல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து முதன்மை மாணவராகத் தேர்ச்சி பெற்றார். ஆபிரஹாமின் தனித்  திறமையை அறிந்த முதல்வர் யார்க் துரை  அவர்கள் வெகுவாகப் பாராட்டினார் . தமது மாதிரிப் பள்ளியின் ஆசிரியராக அவரை நியமித்தார்.   ஆபிரகாம் பண்டிதர் பள்ளியின் வகுப்பறையில் பாடங்களை நேரடியாக நடத்தாமல் , கதைகளின் ஊடாகவே நடத்துவார். ஏதன் காரணமாக அவரைக் கதை வாத்தியார் என்று பெயரிட்டு  அழைத்தனர். திண்டுக்கல்லில் புகழ்பெற்ற வயலின் வித்வான் சடையாண்டிப் பண்டிதரிடம் இசையை முறையைக் கற்றுக்  கொண்டார் .ஐரோப்பிய இசை வல்லுனரான யார்க் துரை மேற்கத்திய இசையினையும் கற்றுக்கொண்டார். இசைத்துறையில் இருந்து கொண்டே சித்த மருத்துவமும் கற்றுக்கொள்ள விரும்பினார். சுருளிமலை கருணானந்த முனிவரிடம் சென்று பல்வேறு நோய்களை நீக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டார். 1882 இல் ஞானவடிவு பொன்னம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளியில்  பணியாற்றினார்.

வினாக்கள்: 

1. ஆபிரகாம் பண்டிதருக்கு வழங்கப்பட்ட  சிறப்புப் பெயருக்கான  காரணம் யாது  ? 

ஈ) பாடங்களைக் கதையோடு கற்பித்ததால்.  

2. ஆசிரியராக நியமித்தவர் யார்  ?

    இ)யார்க் துரை 

3. ஆபிரகாம் , சடையாண்டிப் பண்டிதரிடம் கற்றது என்ன ?

அ) இசை     

4. கருணானந்த முனிவர்  எதில் சிறந்து விளங்கினார்.?

அ) சித்த மருத்துவம்  ஆ) யோகா     இ) வில்வித்தை    ஈ)வேட்டை    

5. கணவனும் மனைவியும் எங்கு பணியாற்றினர் ?

   ஆ)சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளி   

    பகுதி  - ஆ  இலக்கணம் 

3. .சான்று தருக  ( எவையேனும் நான்கு  மட்டும் )                           4*1 = 4.

1.இன்னிசையளபெடை 

                       ஈ)  தூஉம் மழை. 

 2.  உம்மைத்தொகை

            ஈ) தாய்சேய் .  

3. பண்புத்தொகை      

            ஈ) கருங்குரங்கு.   

4.    தொழிற்பெயர் 

  ஈ) ஆடல். 

5.    வேற்றுமைத்தொடர் 

                 இ) கட்டுரையைப்படித்தான்  

4.  நிரப்புக   ( எவையேனும் நான்கு  மட்டும் )                            4*1 = 4.

1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து  பொருளை உணர்த்துவது ----------  எனப்படும்.

அ )தொடர் மொழி  

2.    வினையடியுடன் விகுதி  சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ----------- தொழிற்பெயர்  ஆகும்.

  இ) விகுதிபெற்ற தொழிற்பெயர்  

3.    தொகைநிலைத்தொடர் ----------- வகைப்படும்.

அ ) ஆறு  

4.    காலம் கரந்த ----------------   வினைத்தொகை  ஆகும்.

அ ) பெயரெச்சமே  

   5. எழுவாய்த் தொடரானது  ------- வகையாக அமையும்.

   இ) மூன்று   

5. கூறிவாறு  செய்க   ( எவையேனும் நான்கு மட்டும் )             4*1 = 4.

1. கரும்பு தின்றான் (  எவ்வகைத் தொகைநிலை )

   இ)வேற்றுமைத்தொகை   

2. பரிசு பெற்றான்  ( வினையால் அணையும் பெயராக்குக )

 இ) பரிசு பெற்றவனைப்பாராட்டினர்  

3.பவளவாய்   ( உருவகமாக்குக )

அ )வாய்ப்பவளம்  

4. செந்தாமரை  ( எவ்வகைப் பண்புத்தொகை  )

அ ) வண்ணம்  

 5.  சிரித்துப்பேசினார் ( அடுக்குத்தொடராக்குக )

அ )  சிரித்துச் சிரித்துப்பேசினார். 

6. இலக்கணக்குறிப்புத்  தருக   ( எவையேனும் நான்கு   மட்டும் )                    4*1 = 4.

1. உறாஅர்க்கு   உறுநோய் 

அ) செய்யுளிசையளபெடை       

        2. அமுதா பாடினாள் 

 ஈ) தொடர்மொழி.   

        3.  கேட்ட பாடல்  

அ ) பெயரெச்சத் தொடர்     

                 4. மாமன்னர் 

             இ) உரிச்சொல்தொடர்  

               5.   கொல்களிறு  

அ ) வினைத்தொகை  

                                                    பகுதி  - இ   -  இலக்கியம்.

7. பின்வரும்  கோடிட்ட இடங்களை நிரப்புக.                                        3*1 = 3.

1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும்  அப்பொருள் 

               ------------------  காண்பது  அறிவு. 

             ஆ) மெய்ப்பொருள்     

        2. பண்என்னாம் பாடற்  கியைபின்றேல் : கண் என்னாம் 

            காண்ணோட்டம்  இல்லாத -------------.

           அ ) கண்     

        3. அருமை உடைத்தன் றசாவாமை  வேண்டும் 

            பெருமை ---------- தரும்.  

        அ) முயற்சி   

8. பின்வரும்  செய்யுள் பகுதியைப்  படித்துப்  பொருள் உணர்ந்து, தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.               5*1 = 5.

                அன்று அவண்  ஆசைஇ , அல்சேர்ந்து அல்கி 

                கன்று எரி  ஒள் இணர்  கடும்போடு  மலைந்து 

                சேந்த செயலைச் செப்பம் போகி ,

                அலங்கு கழை  நரலும்  ஆரிப்படுகர்ச்  ...... !

                வினாக்கள் :     

           1.பாடல்  இடம்பெற்ற நூல் எது ?

    ஈ)  மலைப்படு கடாம்.  

2. எப்போது இளைப்பாற வேண்டும் ?

    இ) பகலில்   

         3.ஓசை எழுப்புபவை  எவை  ?

  ஆ) மூங்கில்கள்  

         4. சேந்த செயலைச் செப்பம் போகி  - பொருள் எழுதுக.

      இ) சிவந்த  பூக்களைக் கொண்ட அசோகமரங்களை உடைய வழி ..!    

             5. பாடலின்  ஆசிரியர்   யார் ?

                         ஈ)  பெருங்கௌசிகனார் 

    9.  பின்வரும்   பலவுள்  தெரிவு வினாக்களுள்  ( எவையேனும் ஐந்தனுக்கு )  விடைகளை  எழுதுக.                                                     5 * 1 = 5.

                1.வரகு , கேழ்வரகு  போன்றவற்றின் உமிக்கு வழங்கப்படும்  பெயர்                 --------------------- ஆகும் .                

                    ஆ) கொம்மை   

    2. தென்னை , பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு ---------- எனப்படும்.

        அ) குரும்பை  

    3.இயற்கையின் கூறுகளில் காற்றின் --------   கூடுதலானது. 

        அ) பங்கு     

    4. வண்டோடு  புக்க மணவைத்த தென்றல் இடம்பெற்ற  நூல் -----------.

    அ ) சிலப்பதிகாரம் 

            5. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் -

            எனும் வரிகள் இடம்பெற்ற நூல் ----------------------.

   ஈ ) கொன்றை வேந்தன்   

             6. தலைவாழை இலையில் விருந்தினருக்கு விருந்தளிப்பது நம் --               --------

                கருதப்படுகிறது .

  இ) மரபாக  

            7.குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப்பெய்து 

                சிறிது புறபட்டன்றோ இலள் -  காட்சிப்படுத்தும் நூல் ---------------.

அ ) புறநானூறு         

10.   துணைப்பாடப்  பகுதி வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.   5*1 = 5.                 

           1.  அன்னமய்யாவின் தோட்டத்தில் இருந்த  வேப்பமரத்தின்                                           அடியில்   இருந்தவை  எவை.?

   ஈ)  மண்கலயங்கள் 

           2. பழங்காலச்   செவ்வியல் இலக்கிய வடிவமாக இருந்தது  எது    ?

 இ) உரைநடை   

            3. தமிரோ  -- பொருள் தருக?

    ஈ) தமிழரா   

4. கேட்காதன  கேட்பது போலவும் , பேசாதன பேசுவது போலவும் படைப்பது  எவ்வகை அணி இலக்கணம் ?

     ஈ)  இலக்கணை  

         5. புலம்பெயர்ந்த தமிழர்களின்  முதல் புதினம்   ?

           இ) புயலிலே ஒரு தோணி    

             APL2023

Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023