ஒன்பதாம் வகுப்பு - இயல் -1.



 ஒன்பதாம் வகுப்பு  - இயல் -1.

 

 இலக்கணம்: நிரப்புக.

 

 

1.சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லையே 

எழுவாய்  என்கிறோம்.

 

2. ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப்  பயனிலை என்கிறோம்.

 

3. ஒரு வாக்கியத்தில்  பயனிலை மட்டும் நின்று  ( எழுவாய் வெளிப்படையாக அமையாமல் ) பொருளை உணர்த்தும் எனில், தோன்றா எழுவாய் எனப்படும்.

 

3. தொடரில் வினைமுற்று பயனிலையாக  வந்தால் , அது வினைப்பயனிலை எனப்படும். 

 

4. சொற்றொடரில் பெயர்ச்சொல்லானது பயனிலையாக அமையும் எனில் , அது  பெயர்ப்பயனிலை எனப்படும்.

 

5. சொற்றொடரில் எழுவாய்  , பயனிலை , செயப்படுபொருள் , எனும் வரிசையில் அமைய வேண்டும் என்பது இலக்கணம். எனினும் அவை முன்பின்னாக அமைந்தாலும் பொருள்குறித்தல்  போதும். இது தமிழின் சொற்றொடர் அமைப்பிற்கான தனிச்சிறப்பாகும்.

 

6. எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு  அடைமொழி வந்தால் அது , பெயரடை எனப்படும்.

 

7. பயனிலையாக வரும் வினைச்சொல்லுக்கு  அடைமொழி வந்தால் அது , வினையடை எனப்படும்.

 

8.  எழுவாயானது ஒரு வினையைத் தானே செய்தால், அது தன்வினை எனப்படும்.

 

9.எழுவாயானது ஒரு வினையைப் பிறரைக்கொண்டு  செய்ய  வைத்தால் , அது பிறவினை  எனப்படும்.

 

10. ஒரு செயலைச் செய்பவரை  முதன்மைப்படுத்தும் வினை செய்வினை எனப்படும்.

 

11.  செயப்படுபொருளை   முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டுவினை எனப்படும்.

 

12. ' படு'  எனும் துணைவினைச்சொல்  செயப்பாட்டுவினை செயப்பாட்டு வினைத்தொடரில்  சேர்ந்து விடுகிறது.

  

 சான்று தருக:

1. எழுவாய் ( பெயர்ச்சொல் )

கந்தன் வந்தான் .

2. பயனிலை  ( வினைமுற்று )

பாரதியார் எழுதினார்.

3.தோன்றா எழுவாய் ( முன்னிலைப்பெயர்) 

( நீ  )நன்றாகப்படி 

( நீ  ) படித்தாய் 

 ( நீங்கள் ) வந்தீர்கள் 

4. வினைப்பயனிலை

திருவள்ளுவர் எழுதினார் .

5. நல்ல பையன்  பேசினான் . ( பெயரடை ) 

6. வண்டி விரைந்து வந்தது .  ( வினையடை )

7.  உணவு  உண்டான்.  ( தன்வினை )

8. உணவு உண்பித்தான். ( பிறவினை )

9. அம்மா தோசை சுட்டாள் .  ( செய்வினை )

10. தோசை அம்மாவாள்  சூட்டப்பட்டது . ( செயப்பாட்டுவினை ) 


 

வாழ்க   வளமுடன் ..!                                               வாழ்க  வையகம் ..!


ponanbu - JUNE2023.


Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )