ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு - 2022 - 23.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 60010
இடைப்பருவத்தேர்வு - பருவத்தேர்வு - 2022 - 23.
வகுப்பு :ஒன்பதாம் மதிப்பெண் :40.
தேர்வு நாள் : 07 : 02 : 2023 காலம் : 90 நிமிடம்.
1. இலக்கணம்
அ . இலக்கணக் குறிப்பு 3 * 1 = 3.
- இயல்புப் புணர்ச்சி . ( அ . வாழைமரம் ஆ . வாழைப்பழம் இ . வாழையிலை ஈ . வாழைக்கன்று )
- மெய்ம்முன் உயிர்ப்புணர்ச்சி . ( அ . மண் + வெட்டி ஆ . மாறன் + கை இ . அரசு+அவை ஈ . ஆல் + இலை )
- ' தான் ' எனும் இடைச்சொல் ------------ பொருளில் யாரும்.( அ . சுட்டுப் ஆ . வினாப் இ . உறுதிப் ஈ . குறிப்புப் )
ஆ. சான்று தருக 3 * 1 = 3.
- .பன்மை விகுதிகள் ( அ) கள் , மார். ஆ )அன்ன , மற்று. இ ) ஆர் , கள். ஈ ) பார் , மார். )
- .உயிரீறு , மெய்யீற்றுச் சொற்களை எழுதுக ( அ) மரம், அலை. ஆ ) கைகள் , கடல். இ) வாழ் , மலை. ஈ ) நடை , நகர் )
- .மென்தொடர்க் குற்றியலுகரம். ( அ . காசு ஆ . குரங்கு இ . ஆலிலை ஈ . மார்பு )
இ . நிரப்புக 3 * 1 = 3.
- வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர , ழ , முன்னர் ----------- மிகும். ( அ . வல்லினம் ஆ . மெல்லினம் இ . இடையினம் ஈ . மெய்ம்மயக்கம். )
- இயலப்புப்புணர்ச்சி எழுத்து வகையால் ------------ வகைப்படும். ( அ . 8 ஆ . 6 இ . 9 ஈ . 4. )
- ' ஏ ' எனும் இடைச்சொல் ------------ பொருளில் யாரும்.( அ . சுட்டுப் ஆ . வினாப் இ . உரிப் ஈ . குறிப்புப் )
ஈ. நகவளைவில் குறித்தவாறு செய்க. 3 * 1 = 3.
- பத்து ரூபாய் தாருங்கள். ( வாக்கியத்தில் இடைச்சொல்லைச் சேர்த்து எழுதுக.) ( அ . ஏன் ஆ . கிறு இ . பூண் ஈ .ஆவது )
- மயிலன்ன நடை ( இடைச்சொல்லை எடுத்து எழுது ) ( அ )மயில் ஆ)குயில் இ)நடை ஈ) அன்ன )
- அது, எகு ( ஆய்தத்தொடர்க் குற்றியலுகரகமாக்குக) ( அ ) அதது ,எக்கு ஆ) அத்து , எககு . இ) து , கு ஈ) அஃது , எஃகு . )
2. பாடல் வினா விடை: 5*1 = 5.
கடிக்கமழ் மராமலர்க் கண்ணி அம்சிறார்
படிக்குற எருத்துக்கோடு அன்ன பாலைக்காய்
வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால்
அடிக்கும் ஓசையின்பருந்து அஞ்சி ஓடும் .
வினாக்கள்:
- பாலைக்காய் எதனைப் போன்று இருந்தது.? ( அ) எருதின் கொம்புகள் ஆ) பருந்தின் அலகு இ) கோல்கள் ஈ ) குச்சிகள் )
- பயந்து ஓடியவை எவை .? ( அ) கழுகுகள் ஆ) ஆந்தைகள் இ) பருந்துகள் ஈ) காக்கைகள் )
- பொருள் தருக : கடிக்கமல் = --------- ? ( அ) மலர் ஆ) மணமற்ற மலர் இ) தாமரை மலர் ஈ) மணமிக்க மலர் )
- இப்பாடல் இடம்பெற்ற நூல் எது.? ( அ) நாச்சியார் திருமொழி ஆ) அழகின் சிரிப்பு இ) இராவண காவியம் ஈ) சிலப்பதிகாரம் )
- இயற்றிய ஆசிரியர் யார் ? ( அ) புலவர் குழந்தை ஆ) இளங்கோவடிகள் இ) பாரதிதாசன் ஈ)ஆண்டாள் )
3. திருக்குறள் செய்யுள் : -------------- ----------------------------- -------------- 4*1= 4.
1. அன்புநாண் ஒப்புரவு ------------------- வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய --------------------.
( அ) கண்ணோட்டம் , தான். ஆ) தூண் , கண் இ. கண்ணோட்டம் , தூண் ஈ. ) ஓட்டம் , கண் )
2. சுழன்றும்ஏர்ப் பின்னது -------------- அதனால்
-------------- உழவே தலை.
( அ)உலகம் , உழவே ஆ) வாழ்க்கை , மழை இ)உழவே , உழந்தும் . ஈ) நகரம், தோட்டம் )
4. செய்யுள் வினாக்கள் 3 * 3 = 9.
- பெண்கள் ஒளிர என்ன செய்ய வேண்டும் என்று பாரதிதாசன் கூறுகிறார்?
- ஆண்டாள் நாச்சியாரின் கனவு பற்றி எழுதுக ?
- சான்றாண்மை குறித்து வள்ளுவர் கூறுவன யாவை?
5. உரைநடை வினாக்கள் 4 * 2= 8.
- பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டோரின் பணிகள் பற்றி எழுதுக...?
- சோழர்காலம் மற்றும் நாயக்கர்காலச் சிற்பங்கள் பற்றி விளக்குக ?
6. கடிதம் : 6 * 1 = 6.
உங்கள் குடும்ப அட்டையில் , தம்பியின் பெயரை இணைக்க வேண்டி , உங்கள் பகுதியின் உணவு பாதுகாப்புத்துறை மண்டல அலுவலருக்கு விண்ணப்பக்கடிதம் கடிதம் வரைக.
( உனது முகவரி : சங்கரன்/ சங்கரி , கதவு எண் : 12/ 3, எழில் அடுக்ககம் , கீரப்பாக்கம் , சென்னை - 600 127 )
( அல்லது )
7. கட்டுரை : 6*1 = 6.
அறிவியல் வளர்ச்சி - மனித ஆற்றல் - கண்டுபிடிப்புகள் - போக்குவரத்து - கல்வி - மருத்துவம் - தகவல் தொடர்ப்பு - மகிழ்வான வாழ்வு .
வாழ்க வளமுடன்..! வாழ்க வையகம்....!!
Comments
Post a Comment