பால்பிருந்தவன் ஆண்டுமலர் 2023

 


திருவள்ளுவர்  மற்றும் ஒளவையார்  காட்டும் நற்பண்புகள் - 7.


                                       பிறநாட்டு  மக்கள் இன்று தங்களின் மாணாக்கர்களுக்குக்  கற்றுத்தர விரும்பும் சிறந்த அறங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  திருக்குறளில் திருவள்ளுவர் பாடியுள்ளார். தமிழர்கள் வாழ்வியல் நூலாக மட்டுமின்றி உலகப்பொதுமறையாகவும் திகழ்கிறது திருக்குறள்.

        தமிழ் இலக்கியங்களில் சான்றோர்களால் சொல்லப்படாத  அறங்களே   இல்லை என்று கூறுகின்ற அளவிற்கு எண்ணற்ற  அறம்பாடிய   நூல்கள்  உள்ளன. அதில் , தனிமனித ஒழுக்கம் , இல்லற ஒழுக்கம் , கூடிவாழும் சமுதாய ஒழுக்கம் பற்றியும் திருக்குறள்  மிகவிரிவாகப் பேசுகிறது.  

                நமது மாணாக்கர் தற்போது கற்றுவரும் தலைசிறந்த பண்புநெறிகள்  அனைத்தும் திருக்குறளில் எவ்வாறு அமைந்துள்ளன    என்பதை இங்கு கண்டு மகிழ்வோம் . அதே போன்று சங்ககாலப்  பெண்பாற் புலவர்களில் ஒருவரான ஒளவையார்  கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமானின் சிறந்த நண்பராக விளங்கினார். அவர்  இயற்றிய  சிறந்த நூல்களில்  ஒன்றான ஆத்திசூடியிலும் நற்பண்புகள்  பற்றிக் கூறியுள்ளார். ஆத்திசூடி  பாடல்கள் ஒவ்வொன்றும் இரண்டு   சீர்களால் பாடப்பட்டுள்ளன.  அதில் காட்டப்பட்டுள்ள மாணவர்கள் கற்றுப்  பின்பற்ற  வேண்டிய  நற்பண்புகளையும்  ஆத்திசூடி வழிநின்று     காண்போம் .

நற்பண்புகள் - 7. திருக்குறளிலும் , ஆத்திசூடியிலும்  எவ்வெவ்வாறு அமைந்துள்ளன  என்பதனைச்  சுருக்கமான விளக்கத்துடன் தந்துள்ளோம். மாணவ மணிகள்  நற்பண்புகள் ஏழினையும் பிற அறவிலக்கியங்களோடும்  ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதன் மூலமாக தமிழன் பெருமையையும் , தனித்த அறவிலக்கியங்களின் சிறப்பையும் அறியலாம். 

 7 HABITS.


1. BE PROACTIVE -    YOU ARE INCHARGE.

    முறைசெய்து    காக்கும்    மன்னவன்    மக்கட்கு 

    இறையென்று    வைக்கப்    படும்.             ( குறள் - 39. அதி . 39 )


  பொறுப்புடன் ஆளும் மன்னனே மக்களுக்கு இறைவன்.

   

2.   BEGIN WITH END IN MIND  -    HAVE A PLAN. 

     ஞாலம் கருதினும் கைகூடும்  காலம் 

     கருதி இடத்தார் செயின்.                               ( குறள் - 484 அதி. 50 )


   இடம் காலம் அறிந்து செய்யப்பட்டால் உலகையும் வெல்லலாம் .


3.  PUT FIRST THINGS  FIRST -    WORK FIRST THEN PLAY.

 தெய்வத்தான் ஆகா  தெனினும்  முயற்சிதன் 

மெய்வருத்தக் கூலி  தரும்.                           ( குறள் - 430. அதி . 43 )

தெய்வம் தராததையும்  கடின முயற்சி பெற்றுத்தரும்.


4.  THINK WIN WIN -  EVERY ONE CAN WIN.

    அறிவு    அற்றங்காக்கும்    கருவி     செறுவார்க்கும் 

    உள்ளழிக்க லாக அரண்                             ( குறள் - 39. அதி . 39 )

   பகையழியவும் வெற்றபெறவும்   துணை நிற்பது கல்வி.


5.   SEEK FIRST TO UNDERSTAND THEN TO BE UNDERSTOOD

        - LISTEN BEFORE YOU TALK.

நுணங்கிய    கேள்வி    யரல்லார்    வணங்கிய  

வாயின    ராதல்    அரிது .                             ( குறள் - 419. அதி . 42 )

கேள்வி அறிவு உடையவன், எதனையும் விளங்கிக்கொள்வான்.


6.    SYNERGISE -    TOGETHER IS BETTER.

பல்லார் பகைகொளலின்  பத்தடுத்த தீமைத்தே 

 நல்லார் தொடர்கை  விடல்.                   ( குறள் - 450. அதி . 45 )

நல்லார் நட்பு நன்மை  தரும்.


7.    SHARPEN THE SAW -    BALANCE FEELS BEST.

இன்னா செய்தற்கும்  இனியவே செய்யாக்கால் 

என்ன பயத்ததோ  சால்பு .( குறள் - 987. அதி . 99 )

மன  அடக்கமே பண்பின் சிறந்த அடையாளமாகும்.


                                                    ஒளவையார் ஆத்திசூடி

7 HABITS.

1. BE PROACTIVE -    YOU ARE IN-CHARGE.

       தக்கோன் எனத்திரி.                                                       (  ஆத்திசூடி - 55 )

     சான்றோர் போற்றும்படி உத்தமனாகச்  செயல்பாடு.


2.   BEGIN WITH END IN MIND  -    HAVE A PLAN. 

       தூக்கி வினை செய்                                                           (  ஆத்திசூடி - 60 )

     எக்காரியத்தையும் ஆராய்ந்து  செய்க.


3.  PUT FIRST THINGS  FIRST -    WORK FIRST THEN PLAY.

     பீடுபெற நில்                                                                            (  ஆத்திசூடி - 80 )

    பெருமை உண்டாக்குமாறு நன்னெறிக்கண் நிற்க.


4.  THINK WIN WIN -  EVERY ONE CAN WIN.

       எண்  எழுத்து இகழேல்                                                     (  ஆத்திசூடி - 7 )

   வெற்றிபெற  எண்ணறிவு எழுத்தறிவு வேண்டும்.


5.   SEEK FIRST TO UNDERSTAND THEN TO BE UNDERSTOOD

        - LISTEN BEFORE YOU TALK.

    கேள்வி முயல்                                                                          (  ஆத்திசூடி - 39 )

 கேட்டு அறிவதற்கு முற்படு.

 

6.    SYNERGISE -    TOGETHER IS BETTER.

     ஊருடன் கூடி  வாழ்.                                                        (  ஆத்திசூடி - 104 )

 ஊராருடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்க .


7.    SHARPEN THE SAW -    BALANCE FEELS BEST.

    நேர்பட ஒழுகு                                                                           (  ஆத்திசூடி - 73 )

 எப்பொழுதும் நேர்மையுடன்  நடப்பாயாக.


தொகுப்பும் ஆக்கமும் 

பழ. அன்புச்செல்வன் 

கோலப்பெருமாள்  செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி.

அரும்பாக்கம் - சென்னை - 106.

தமிழாசிரியர் - துறைத்தலைவர் .


 வாழ்க   வளமுடன் ..!                                                                      வாழ்க  வையகம் ..!


                                                                                        ponanbu2023


Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023