அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023
அலுவலகக்கடிதம் - செப்டெம்பர் 2023
காணாமல்போன உனது மிதிவண்டியைக் கண்டுபிடித்துத் தரவேண்டி உங்கள் பகுத்தியின்
காவல்நிலைய ஆய்வாளருக்குக் கடிதம் எழுதுக.
மிதிவண்டியைக் கண்டுபிடித்துத் தரவேண்டிக் கடிதம்
அனுப்புநர் :
உங்கள் பெயர்,
கதவு எண்,
தெரு / நகர்,
பகுதி / இடம் .
பெறுநர் :
திரு: காவல் ஆய்வாளர் அவர்கள்
கே -8 அரும்பாக்கம் காவல் நிலையம் ,
அரும்பாக்கம்,
சென்னை - 600 106.
மதிப்பிற்குரிய ஐயா ,
பொருள் : மிதிவண்டியைக் கண்டுபிடித்தர வேண்டிக் கடிதம்..,
ஐயா, நான் மேல் கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நேற்றைய தினம் அருகில் உள்ள ஆனந்த் பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருந்தேன் .எனது மிதிவண்டியை கடையின் வாசலில் நிறுத்திவிட்டு பொருள்கள் வாங்கச்சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது எனது மதிவண்டியைக் காணவில்லை. என்பால் அன்பு கூர்ந்து மிதிவண்டியைக் கண்டுபிடித்துத் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வண்டியின் அடையாளங்கள்:
1. வண்ணம் : சிவப்பு
2. நிறுவனம் : ஹெர்குலஸ்
3.வண்டி எண் : 24/ HL8723.
இடம் ; அரும்பாக்கம் தங்களின் உண்மையுள்ள ,
நாள் : 10..09.2022
உறைமேல் முகவரி
திரு: காவல் ஆய்வாளர் அவர்கள்
கே -8 அரும்பாக்கம் காவல் நிலையம் ,
அரும்பாக்கம்,
சென்னை - 600 106.
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
APL2023.
Comments
Post a Comment