7 HABITS - THIRUKKURAL WITH SHORT MENING PLA2022
திருவள்ளுவர் காட்டும் நற்பண்புகள் - 7. பிறநாட்டு மக்கள் இன்று தங்களின் மாணாக்கர்களுக்குக் கற்றுத்தர விரும்பும் சிறந்த அறங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் திருவள்ளுவர் பாடியுள்ளார். தமிழர்கள் வாழ்வியல் நூலாக மட்டுமின்றி உலகப்பொதுமறையாகவும் திகழ்கிறது திருக்குறள். த மிழ் இலக்கியங்களில் சான்றோர்களால் சொல்லப்படாத அறங்களே இல்லை என்று கூறுகின்ற அளவிற்கு எண்ணற்ற அறம்பாடும் நூல்கள் உள்ளன. அதில் , தனிமனித ஒழுக்கம் , இல்லற ஒழுக்கம் , கூடிவாழும் சமுதாய ஒழுக்கம் பற்றியும் திருக்குறள் மிகவிரிவாகப் பேசுகிறது. நமது மாணாக்கர் தற்போது கற்றுவரும் தலைசிறந்த பண்புநெறிகள் அனைத்தும் திருக்குறளில் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை இங்கு கண்டு மகிழ்வோம் . 7 HABITS. 1. BE PROACTIVE - YOU ARE INCHARGE. முறைசெய்து காக்கும் மன்னவன் மக்கட்கு இறையென்று ...