இடைப்பருவத்தேர்வு - ஆகஸ்டு - 2022. வினாத்தாள் ( confidential up august 2022 )
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
----------------------------------------------------------------------------------------------------------------
இடைப்பருவத்தேர்வு - ஆகஸ்டு - 2022. வினாத்தாள் அமைப்பு
வகுப்பு : பத்து தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40.
நாள் ; 27 ஆகஸ்டு 2022 கால அளவு ; 90 நிமிடம்.
அ. பத்தி வினா விடை 5* 1 = 5.
அறிவினைத்துலங்க வைக்கும் பல கருவிகளுள் நூல் நிலையமும்ஒன்றாகும். கணக்கற்ற அறிஞர்கள் தங்கள் எண்ணங்களை,
கண்டுபிடுப்புகளை , நூல்களாக எழுதி உள்ளனர். அந்த
நூல்களை எல்லாம் முறையாகவும் , வரிசையாகவும்,
அழகாகவும் அடுக்கி வைத்துப்பயன்படுத்தும் ஓர் இடமே
நூலகமாகும். நூல் நிலையத்தில் பலவகையான நூல்கள் இருக்கும்.
நூல்களை வாங்கிப் படிக்க முடியாதவர்கள், நூல் நிலையத்தில்
வந்து படித்துப் பயன் பெறலாம். நூல்நிலையத்தில் பள்ளி நூலகம்,
கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், குழந்தைகள் நூலகம்,
அரசுப் பொதுநூலகம், நடமாடும் நூலாகும், நூல்களை வாடகைக்கு
விடும் நூலகம் எனப்பல வகைகள் உள்ளன. நூல் நிலையங்கள்
மாணவர்களின் அறிவை வளர்த்துக்கொள்ளப் பெரிதும்
பயன்படுகின்றன.மாணவர்கள் நூல்கள் படிக்கும் பழக்கத்தை
வளர்த்துக்கொள்ள வேண்டும். கண்டது கற்றால் பண்டிதன்
ஆகலாம் என்பதை உணர்ந்து நூலகம் சென்று பயனடைவோம் .
வினாக்கள்:
1. அறிவினைத் துலங்கச்செய்யும் கருவி எது?
2. நூல்கள் அழகாகவும், வரிசையாகவும் வைக்கப்பட்டிருக்கும் இடம் எது?
3. நூல்கள் எவற்றை வளர்க்க உதவும் ?
4. கண்டத்தைக் கற்றவன் ----------- ஆவான்.
5. மாணவர்களுக்கான சிறந்த பழக்கம் எது..?
ஆ . நிரப்புக 4* 1 = 4.
1. அளபெடை _________ , _________ இரு வகைப்படும்.
2. ஐந்துதொகைகளுக்கும் புறத்தே பிறக்கும் தொகை ______ எனப்படும்.
3. தொகைநிலைத்தொடர் _______ வகைப்படும்.
4.விளியுடன் வினைத்தொடர் ______ ஆகும்.
இ . சான்று தருக 4* 1 = 4.
1. உயிரளபெடை .....................................: ________
2. வினைத்தொகை .................................: ________
3. விழித்தொகாநிலைத் தொடர்.....: ________
4. அடுக்குத்தொடர்................................. : ________
ஈ. கூறியவாறு செய்க. 3* 1 = 3.
1. சாலச் சிறந்தது ( உரிச்சொல்லைப் பிரித்து எழுது )
2. கண்ணகி ( வினைமுற்றுத் தொடரராக்குக )
3. வட்டமான தொட்டி ( பண்புத்தொகையாக்குக )
உ . பாடல் வினா விடை. 4 * 1 = 4.
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத்தவர் காக்கா ஆழிக்கு
இணைக்கிடந்த தேதமிழ் ஈண்டு .
1. பாடல் இடம் பெற்ற நூல் எது?
2. பாடல் ஆசிரியரின் இயற்பெயர் என்ன?
3.வணிகலமும் - இச்சொல் உணர்த்தும் இருபொருளை எழுது?
4. முச்சங்கம் - பிரித்து எழுது ?
உ . செய்யுள் வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் ) 2 * 3 = 6.
1. செழுமை மிக்க தமிழின் பெருமைகளை எழுது ?
2. பாரதியின் வேண்டுகோள்கள் என்னென்ன என்பதை வரிசைப்படுத்துக ?
3. முல்லை நிலத்தின் மாலை நேரக்காட்சிகளை அழகுற எழுது ?
ஊ . உரைநடை வினாக்கள் ( எவையேனும் இரண்டு மட்டும் ) 2 * 4 = 8.
1. பிஞ்சுவகைகளின் பெயர்களையும் , மணிவகைகளின் சொற்களையும்
வரிசைப்படுத்துக ?
2. திசைகளில் இருந்து வீசும் காற்றிற்கு வழங்கும் பெயர்கள் மற்றும்
அவற்றின் பண்புகளை எழுக?
3. காற்றினால் கிடைக்கும் ஆற்றல்கள் பற்றி விவரி ?
எ . கடிதம் வரைக. 6*1=6.
தொட்டியை முறையாகப் பராமரிக்க வேண்டி , உங்கள் பகுதியின்
மாநகர மண்டல அலுவலருக்குக் கடிதம் வரைக.
( உன் முகவரி: செந்தில் வேலன் / செல்வி, எண்; 117, பாரதி தெரு,
நாச்சியார் நகர், திருவரங்கம், திருச்சி...24. எனக்கொள்க.)
-----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu2022.
Comments
Post a Comment