செய்தியறிக்கை: தேதி : 18.08. 2022 - ஜென்மாஷ்டமி விழா.
பள்ளியின் பொன்விழா ஆண்டு மற்றும் ஜென்மாஷ்டமி விழா
செய்தியறிக்கை:
தேதி : 18.08. 2022
நாள் : வியாழக்கிழமை
நிகழ்ச்சி :
பொன்விழா ஆண்டு மற்றும் ஜென்மாஷ்டமி விழா.
இடம் :
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி வளாகம்.
சென்னை - அரும்பாக்கம்.
இந்தியப் பண்பாட்டையும் , கலை மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் மனங்களில் பதியச் செய்வதையே நோக்கமாகக்கொண்டு விழாக்கள் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண் வளம் காப்போம் என்பதையே மையப்பொருளாகக்கொண்டு பள்ளியின் ஆண்டுவிழா மற்றும் ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்த்துறையின் சார்பில் " ஜென்மாஷ்டமி - கோகுலாஷ்டமி ' எனும் கண்ணன் பிறந்தநாள் விழா மூன்று நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . விழாவிற்குச் சிறப்புச் செய்யும் விதமாகத் திருக்குடந்தை திருமிகு. மருத்துவர். உ.வே . வெங்கடேஷ் அவர்கள் ஆகஸ்ட்டு 16 , 17 - ஆகிய இருதினங்கள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை " கிருஷ்ணனின் திருவிளையாடல்கள் " எனும் தலைப்பினில் சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்தினா ர்கள். மகா விஷ்ணுவின் திருவதாரமான கண்ணனின் விளையாட்டுகள் நமக்கு உணர்த்தும் உயர்ந்த பொருளை அனைவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் விதமாக மிகச்சிறப்பாகச் சொற்பொழிவாற்றினார்.
மூன்றாம் நாள் நிகழ்வு மாலை 5 மணி அளவில் தொடங்கியது. விழாவிற்குத் தலைமையேற்றுச் சிறப்பித்தார், பள்ளியின் சீர்மிகு நிர்வாகி திருமிகு. கோபால் ஜி அகர்வால் அவர்கள். விழாவிற்கு முன்னிலை வகித்தார், நம் பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் திருமிகு . ஹித்தேஷ் கன்னோடியா அவர்கள். மூன்றாம் நாள் நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக , சொற்பொழிவாளர் திருக்குடந்தை திருமிகு. மருத்துவர். உ.வே . வெங்கடேஷ் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். மேலும் விழாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக, மேனாள் அமைச்சர் ( பத்திரப் பதிவுத்துறை ) திருமதி. கோகிலா இந்திரா அவர்கள் சிறப்புரை ஆற்றி விழாவிற்குப் பெருமை சேர்த்தார்கள். நமது பள்ளியின் முன்னாள் மாணவரும் , சிறந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரும், மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜுனா விருது பெற்றவருமான திருமிகு . சத்யன் அவர்கள் விழாவிற்கு வறுமை தந்து சிறப்பித்தார். ஆங்கிலத்துறையின் சார்பில் மண் வளம் காப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நாடகத்தையும் , நடனத்தையும் சிறப்பாக வழங்கினர். எதிர்காலத்தில் மண்ணையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையினைத் தடுப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதையும் , மண் வளம் காப்பதன் அவசியத்தையும் மிக அழகாக உணர்த்தினார்கள்.
தமிழ்த்துறையின் சார்பில் " குவலயம் காத்த கூர்மம் " எனும் கண்ணனின் திரு அவதாரமான கூர்ம அவதாரத்தினை நாடகமாக வழங்கினர். உண்மையான பக்தியினால் இறைவனின் அன்பைப் பெறலாம் என்பதனையும், உயர்ந்த பக்தியே என்றென்றும் மக்களையும் , மாநிலத்தையும் காக்கும் என்பதையும் மாணவமணிகள் மிகவும் அழகாக நடித்துக்காட்டினர் . சிறப்பாக நடித்த எட்டு மாணவமணிகளுக்குப் பாராட்டும் பரிசும் வழங்கிச் சிறப்பித்தனர் . மேலும் , கடந்த கல்வி ஆண்டில் சிறப்பாகப் பயின்ற மாணவர்களுக்கும் , சிறந்த நன்னடத்தை உடைய மாணவர்ளுக்கும் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர் ..
விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் , தலைசிறந்த பள்ளியின் நிர்வாகிகளையும் அவர்களது கல்விப் பணியையும் , கலை, கலாச்சாரம் , பண்பாடு வளர்க்கும் பள்ளியின் செயல்பாடுகளையும் பாராட்டிப் பேசினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளைச் செய்து நிகழ்ச்சிகளைச் சிறப்பித்த , முதல்வவர் திரு. இ ராமசுப்ர மணியம் அவர்களையும் , ஒருங்கிணைப்பாளர் திருமதி . சசிகலா அவர்களையும் மனமகிழ்ந்து வாழ்த்தினர் . மாணவ மணிகளையும் அவர்களது அறிவுமேம்பாட்டின் அவசியத்தையும், கலைகள் பற்றிய அறிவின் தேவையினையும விளக்கியதோடு மாணவர்களையும் பாராட்டினர் . ஜென்மாஷ்டமி மூன்றாம் நாள் விழா மங்கலத்துடன் இனிதே நிறைவடைந்தது.
முதல்வர் . திருமிகு. இராமசுப்ரமணியம் அவர்கள் .
" குவலயம் காத்த கூர்மம் "
நாடகம்.
சுபம் .
ponanbu
Comments
Post a Comment