அலகுத்தேர்வு - 1.வினா விடை 29ஜூன்2022
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , சென்னை - 600106.
வகுப்பு : பத்து மதிப்பெண் : 20.
29ஜூன்--2022.
அ. நிரப்புக 2*1 =2.
1.செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக
அளபெடுத்துவது, இன்னிசையளபெடை ஆகும்.
2. தொழிற்பெயர் காலம் காட்டாது.
ஆ. சான்றுதருக: 2*1=2.
1. ஒற்றளபெடை : எங்ங்கிறைவன் , எஃஃகிலங்கிய
2. எதிர்மறைத் தொழிற்பெயர்: கொல்லாமை ,நடவாமை .
இ . நகவளைவில் குறித்தவாறு செய்க. 2*1=2.
1. முயன்றவன் வென்றான். ( பெயர்வகையை எழுதுக )
வினையாலணையும் பெயர்
2. அந்த மான் ( தனிமொழி ஆக்குக )
அந்தமான்
ஈ. செய்யுள் பாடல் : - 4 * 1 =4.
உந்தி உணர்வெழுப்ப உள்ளக்கனல் மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே ..!
1. பாடலின் ஆசிரியர் யார் ? -
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
2. பாடல் ஏதன் சிறப்பினைக் கூறுகிறது ? -
தமிழின் சிறப்பினைக்கூறுகிறது.
3. பொருள் தருக. கனல் = ? -
நெருப்பு
4. பாடல் இடம்பெற்ற நூல் எது ? -
கனிச்சாறு ( தொகுதி -1 )
உ . செய்யுள் வினா விடை 2 * 2 = 4.
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பெருஞ்சித்திரனார்
கூறுவன யாவை ?
விடை:
1. பழமையான நறுங்கனியாக உள்ளது.
2. குமரிக் கண்டத்தின் பேரரசாக விளங்கியது .
3. பாண்டியரின் மகளாக வளர்ந்த சிறப்புடையது.
4. திருக்குறளைப் பெற்ற பெருமைக்கு உரியது.
5. பத்துப்பாட்டாகவும் , எட்டுத்தொகையாகவும் வளர்ந்த சிறப்புடையது.
6. சிலப்பதிகாரமாகவும், மணிமேகலையாகவும் செழித்து நிற்பது.
மேற்காணும் காரணங்களால் தமிழை வாழ்த்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்.
2. தமிழும் , கடலும் ஒன்றாகும் சிறப்பினைத் தமிழழகனாரின் பாடலின் மூலமாக விளக்குக.
தமிழ் கடல்
* இயல் , இசை, நாடகம் என முத்தினையும், அமிழ்தினையும்
முத்தமிழாய் வளர்ந்து சிறந்தது. தருகின்ற சிறப்புடையது.
* முதல், இடை, கடைச் சங்கங்களால் வெண்சங்கு, சலஞ்சலம்
பேணி வளர்க்கப்பட்டது . பஞ்சஜன்யம் ஆகிய மூவகைச்
சங்குகளைத் தருகின்ற சிறப்புடையது.
* தமிழன்னை , ஐம்பெருங்காப்பியங்களை கடலானது , மிகுதியான வணிகக் கப்பல்கள்
அணிகலனாப் பெற்றுள்ளாள். செல்லும் அழகுடையதாக உள்ளது.
* சங்கப்பலகையில் இருந்த சங்குக்கூட்டங்கள் கரையைக் கடந்து விடாதவாறு அலைக்கரங்களால்
புலவர்களால் காக்கப்பட்டது . காக்கப்படும் சிறப்புடையது.
ஊ. உரைநடை வினா விடை: 2 * 3 = 6.
1. தாவரத்தின் அடியைக் குறிக்கும் சொற்களையும், இலைகளைக் குறிக்கும் சொற்களையும் பட்டியலிடுக.
1.தாவரத்தின் அடியைக் குறிக்கும் சொற்கள் :
1.தண்டு-------கீரை , வாழை
2. கோல் ------- நெட்டி, மிளகாய்ச்செடி
3. தூறு ---------- புதர் , குத்துச்செடி
4. தாது/ தட்டை -- கம்பு / சோளம்
5. கழி -----------கரும்பு
6. கழை -------மூங்கில்
7. அடி --------- புளி , வேம்பு
8. தாள் --------- நெல், கேழ்வரகு
2. இலைகளைக் குறிக்கும் சொற்கள் :
1. இலை - புளி , வேம்பு
2. தாள் - நெல், புல்
3. தோகை - சோளம் / கரும்பு
4. ஓலை - தென்னை / பனை
5. சண்டு - காய்ந்த தாள் / தோகை
6. சருகு - காய்ந்த இலை
2. குலைவகைகள் மற்றும் தானியவகைகளின் பெயர்களை வரிசைப்படுத்தி
1. குலைவகைகள்:
1. கொத்து = அவரை , துவரை முதலியவற்றின் குலை
2. குலை = கோடி முந்திரி முதலியவற்றின் குலை
3. தாறு = வாழைக்குலை.
4. கதிர் = கேழ்வரகு , சோளம் முதலியவற்றின் கதிர்
5. அலகு அல்லது குரல் = நெல் ,தினை முதலியவற்றின் கதிர்
2. தானியவகைகள்:
1. கூலம் = நெல், புல்
2. பயறு = அவரை உளுந்து
3. கடலை = வேர்க்கடலை , கொண்டைக்கடலை\
4. விதை = கத்திரி , மிளகாய்
5. முத்து = வேம்பு, ஆமணக்கு.
6.கோட்டை = மா, பனை .
7. முதிரை = அவரை, துவரை முதலிய பயறுகள்.
பழ. அன்புச்செல்வன்
தமிழாசிரியன்
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu2022.
Comments
Post a Comment