மாதிரி வினாத்தாள் பிப்ரவரி2022 - பத்தாம் வகுப்பு.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
காலம் : 2 மணி மதிப்பெண் :40.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
திருப்புதல் தேர்வு -1 --வினாத்தாள் பிப்ரவரி 2022 - வகுப்பு : பத்து
1. பின்வரும் இலக்கண வினாக்களில் எவையேனும் நான்கனுக்குக் குறுகிய விடை எழுதுக . 4 *2 = 8.
1.மரபு வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக .
2. பால் என்றால் என்ன ? ஐம்பால்களை விளக்குக?
3. ஐய வினாவை உதாரணம் தந்து விளக்குக?
4. வெளிப்படை, குறிப்பு விடைகள் பற்றி எழுதுக .
5. கொண்டு கூட்டுப்பொருள்கோளை எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.
6. ஐவகை நிலங்கள் எவை எனக்கூறி விளக்குக .
7. பெரும்பொழுதுகள் ஆறினையும் விளக்குக.
8. பரிபாடல் - நூல் குறிப்புத் கருக?
9. இறைவன் திருக்கோவிலைவிட்டு நீங்குதல் , அதனை அறிந்த மன்னன் இறைவனிடம் காரணம் வினவியவிதம் பற்றி எழுதுக?
10. பூத்தொடுத்தல் -- கவிதையில் உமாமகேஸ்வரி உணர்த்தும் கருத்துக்களை எழுது ..?
11. செங்கீரைப்பருவம் மற்றும் குழந்தைக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள் பற்றி எழுது?
12. கம்பராமாயணத்தின் பாலா கண்டம் காட்டும் கோசல நாட்டின் வறுமையற்ற நிலைபற்றி எழுதுக?
3. பின்வரும் உரைநடை வினாக்களில் எவையேனும் இரண்டனுக்குச் குறுகிய விடை எழுதுக.2 * 2=4.
13. செயற்கை நுண்ணறிவின் எதிர் காலம் குறித்து எழுதுக ?
14. காவடியாட்டம் என்றால் என்ன ?
15. மொழிபெயர்ப்புக்கல்வியின் நன்மைகள் பற்றி எழுதுக.
16. நிகழ்கலை என்றால் என்ன?
4. பின்வரும் உரைநடை வினாக்களில் ஏதேனும் ஒன்றனுக்கு விரிவான விடை எழுதுக. 1 * 5 = 5
17. மொழிபெயர்ப்பின் வளர்ச்சி மற்றும் அதன் நன்மைகள்பற்றி எழுதுக.
18. தப்பாட்டம் , தோற்பாவைக்கூத்து , ஒயிலாட்டம் பற்றி எழுதுக?
5. பின்வரும் துணைப்பாடப் பொருண்மைகளுள் ஓன்று குறித்து விரிவாக விடை எழுதுக. 1*5 = 5.
1. அறிவியல்தொழில் நுட்பத்தின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?
2. புதிய நம்பிக்கை - மேரியின் எண்ணத்தினால் விளைந்த நன்மை யாது ?
3. பாய்ச்சல் - அழகுவின் கலை ஆர்வம் குறித்து எழுதுக.
6. பின்வரும் உரைநடைப் பகுதியை மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி வரைக. ( 4 )
கதைத்தல் என்பதற்குப் பேசுதல் என்பது பொருளாகும். காது பெற்றதன் பயன் கேட்டு மகிழ்வதிலேயே உள்ளது. திருவள்ளுவரும் கேட்டல் இன்பம் காணாத மக்களை மாக்கள் ( விலங்கு ) என்று சாடுகிறார். சிந்தனை ஊற்றெடுக்கச் செய்வது கதைகள்தான். அரசன் முதல் ஆண்டிவரை உள்ளோரை அறிவாளியாக்குவதும் சீர்மிகு கதைகள் தான். மனிதர்களின் மனதை ஒருமுகப்படுத்தி சிந்திக்க வைப்பன கதைகள் மட்டுமே. கதை கேட்டல் என்பதும் ஒரு யோகப்பயிற்சியே ஆகும்.
கண்டவற்றோடு நமது கற்பனையும் சேரந்து பிறப்பதே கதையாகும். கதை சொல்லிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் பாட்டி கதைகளே தனிச்சிறப்புப் பெற்றவையாகும். அவர்கள் அன்போடு ஊட்டும் அறிவு அமுதமே கதைகள். அவை , ஒருவனை வீரனாகவும், ஞானியாகவும் மாற்றும் ஆற்றல் கொண்டவையாகும். காலம் காலமாக வாய்வழியாக ஊட்டப்படும் அறிவுப்பழச்சாறே கதைகள். நமது நாகரீகமும் , பண்பாடுகளும் கட்டிக்காக்கப்படுவதும் கதைகளால் தான். நிறையக்கதை கேட்கும் பழக்கமுள்ள குழந்தைகள் வாழ்வில் எத்தகைய சூழலையும் மிகச் சிறப்பாக சமாளித்து விடுவார்கள். பன்மொழிப்புலமையும் எளிதில் அமையும். சொல்வளமும், பொருள்நலமும் , பேச்சினில் தெளிவும் உடையவர்களாக இருக்கமுடியும் .
7. பின்வரும் பொருள்களில் ஒன்று பற்றிக் கடிதம் எழுதுக 1 * 5 = 5.
1. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் நீ பரிசு பெற்று மகிழ்ந்தது குறித்துத் தோழன் / தோழிக்குக் கடிதம் எழுதுக.
( அல்லது )
2. உங்களது பகுதியில் கோடைக்காலத்தில் ஏற்படும் வறட்சியைப்போக்க குளங்கள் அமைத்துத்தர வேண்டிப் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்குக் கடிதம் வரைக.
( இரு கடிதங்களுக்கும் உன்முகவரி : மித்ரன் / மித்ரா , எண் .132, பாண்டியன் நகர், பாரதிபுரம் , கோயம்பத்தூர் - 4. எனக் கொள்க . )
வாழ்க வளமுடன் ...! வாழ்க வையகம்...!
பழ. அன்புச்செல்வன் நட்புறவு அலுவலர் ( அறிவியல் தமிழ் மன்றம் )
தமிழாசிரியன்
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu2022.
Comments
Post a Comment