திருப்புதல் தேர்வு - பிப்ரவரி 2022

 கோலப்பெருமாள்   செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

 எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , 

 அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

காலம் : 2 மணி                                                                                          மதிப்பெண் :40.      

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 திருப்புதல் தேர்வு - வினாத்தாள் பிப்ரவரி 2022 -   வகுப்பு : பத்து 

1.    பின்வரும் இலக்கண வினாக்களில்  எவையேனும் நான்கனுக்குக்  குறுகிய விடை எழுதுக .  4 *2 = 8.

1. இட வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக .

விடை :

இடமானது தன்மை, முன்னிலை , படர்க்கை என மூவகைப்படும் .

தான் இருக்கும் இடத்தினை உணர்த்துவது இடம் எனப்படும். 

இந்த அன்பன் என்றும் அழகுடைவனே !  - இதில் அன்பன், "  நான் அழகுடையவன் " என்று கூறாமல் தன்மையில் கூறவேண்டியதை , முன்னிலையில் கூறுகிறான். இது பிழை எனினும் இட வழுவமைதியாக ஏற்கப்படுகிறது. 



2. திணை  என்றால் என்ன ? வகைகளை   விளக்குக?


விடை :

திணை  என்பதற்கு   ஒழுக்கம் என்பது பொருளாகும்.

திணை  இரண்டு  வகைப்படும். 

1. உயர்ந்த ஒழுக்கம் உடையோர்  உயர்திணை  எனப்படுவர். மக்கள், தெய்வம் 

2, உயர்ந்த ஒழுக்கமற்ற  உயிருள்ள உயிரற்ற  அனைத்தும் அஃறிணை  எனப்படும்.

மரம், வீடு, விலங்கு. 

3.  வினா எதிர் வினாதல் விடையை எடுத்துக்காட்டுத் 

  தந்து விளக்குக? 

விடை :

போட்டியில் கலந்து கொண்டாயா ? எனும் வினாவிற்கு , விடையாக 

கலந்து கொள்ளாமல் இருப்பேனா ?  எனும் வினாவினைத் தொடுத்தல் ,  வினா எதிர் வினாதல்  விடை எனப்படும்.

4. வெளிப்படை  விடைகள் , குறிப்பு விடைகள் பற்றி எழுதுக .

விடை :

விடைகள்  இரண்டு  வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

1. வெளிப்படை விடைகள் : 

சுட்டு விடை , மறைவிடை,  நேர்விடை.

2. குறிப்பு விடைகள்

ஏவல் விடை , வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல்விடை , இனமொழி விடை .

5. ஆற்றுநீர்ப்பொருள்கோளை  எடுத்துக்காட்டுத் தந்து  விளக்குக.

விடை :

பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை , ஆற்று நீரின் போக்கைப்போலவே நேராகவே பொருள்கொள்ளுமாறு  செய்யுள் அமைதல் ஆற்றுநீர்ப்பொருகோள் ஆகும்.

எடுத்துக்காட்டு.

" சொல்லரும் சூழப்பசும் பாம்பின்  தோற்றம்போல் 

மெல்லவே  கருவிருந்து ...........!  "

6. முதற்பொருள் , கருப்பொருள்  எவை எனக்கூறி  விளக்குக . 

விடை :

முதற்பொருள்: 

நிலமும்  ( 5 ), பொழுதும் ( 2 ) முதற்பொருள் எனப்படும்.

 கருப்பொருள்:

நிலத்தில் வாழும்  தெய்வம் முதலாக, தொழில்  வரை உள்ள 13ம் கருப்பொருள் எனப்படும்.

7. சிறு பொழுதுகள் ஆறினையும் விளக்குக. 

விடை :

1. குறிஞ்சி ------யாமம்

2. முல்லை------ -மாலை 

3. மருதம் -------வைகறை

4. நெய்தல் ------ஏற்பாடு 

5. நண்பகல் -----பாலை   6. காலை எல்லா நிலங்களுக்கும் பொதுவாய் அமையும் பொழுது.


2.    பின்வரும் செய்யுள்  வினாக்களில் எவையேனும் மூன்றனுக்குச்  சுருக்கமான விடை எழுதுக. 3*3 = 9.

8. பிள்ளைத்தமிழ்  - நூல் குறிப்புத் கருக?

9. இறைவன் தமிழ்ப்  புலவர்கள்மீது அளவற்ற அன்புடையவன் என்பதை திருவிளையாடல் புராணம் மூலமாக விளக்குக?

10. பூத்தொடுத்தல் --    கவிதை   உணர்த்தும்  கருத்துக்களை எழுது ..?

11. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் காட்டும் முருகனின் அழகு  பற்றி எழுது?

12. கம்பராமாயணத்தில்  கம்பர்  காட்டும் மருதநிலக்  காட்சி பற்றி  எழுதுக?

3.   பின்வரும் உரைநடை   வினாக்களில் எவையேனும் இரண்டனுக்குச்  குறுகிய  விடை எழுதுக.2 * 2=4.

13. மெய்நிகர் உதவியாளரின் பணிகள்  குறித்து  எழுதுக ?

14. தேவராட்டம்  என்றால் என்ன ?

15.  தற்கால மொழிபெயர்ப்புக்கல்வியின்  நிலை  பற்றி  எழுதுக.

16. செயற்கை நுண்ணறிவு  என்றால் என்ன?

4.    பின்வரும் உரைநடை   வினாக்களில் ஏதேனும் ஒன்றனுக்கு விரிவான  

 விடை எழுதுக. 1 * 5 = 5

17.  சிறந்த மொழிபெயர்ப்பின் தேவை மற்றும்  தன்மைகள்பற்றி  எழுதுக.

18. உங்களுக்குத் பிடித்த மூன்று நிகழ்கலைகள்  பற்றி  எழுதுக? 

5.    பின்வரும் துணைப்பாடப்  பொருண்மைகளுள் ஓன்று குறித்து விரிவாக விடை எழுதுக. 1*5 = 5.

1. கருந்துளைக் கோட்பாடு  குறித்து எழுதுக.

2. புதிய நம்பிக்கை தரும் செய்தி யாது ?

3. அழகுவின் கலையார்வம் குறித்து எழுதுக.

6.   பின்வரும்  உரைநடைப் பகுதியை மூன்றில் ஒரு பங்காகச்  சுருக்கி வரைக.       ( 4 )

கடையெழு வள்ளல்களில் பாரியே  உயர்ந்து நிற்கிறான் .மலைவளம்  காணவந்த பாரி , முல்லைக்கொடியொன்று  கொழுகொம்பின்றி தரையினில் படர்ந்திருப்பதைப்பார்த்தான் . தாயுள்ளம் கொண்ட பாரி தான் ஏறி வந்த தேரினையே முல்லைக்கொடிக்குக்  கொடையாக வழங்கினான். நடந்தே தனது  அரண்மனையை அடைந்தான். ஓரறிவு உயிராகிய முல்லைக்கொடிக்கும் உதவும் பாரியின் உள்ளங்கண்டு புலவர்கள் வியந்தனர். கலைஞர்களுக்கும் , புலவர்களுக்கும், தன்னை நாடி வரும் அனைவருக்கும் இல்லை என்று  சொல்லாது  வாரி வழங்கும் தாயுள்ளம் கொண்டவனாகத்  திகழ்ந்தான்  பறம்பின் மன்னனாம்  பாரி . குறுநில மன்னனே ஆனாலும்  மூவேந்தர்களுக்கு  இணையான பெரும்புகழுடன் விளங்கினான். அதுவே அவனது முடிவிற்கும்  காரணமாக அமைந்துவிட்டது. தனது அன்பு மகள்களான  அங்கவை , சங்கவையை   மூவேந்தரும் பெண்கேட்டு நின்றனர் . பாரி பெண்தர  மறுத்தான். அதனால் போர் மூண்டது. மூவேந்தராலும் பாரியை வெல்ல இயலவில்லை. கடுஞ்சினம் கொண்ட  வேந்தர்கள்  மூவரும் பாணர்கள் ,   கூத்தர்கள் போல வேடமணிந்து சென்று , பாரியை  வஞ்சகமாகக் கொன்றனர் .வருந்திய கபிலர்  பாரியின் மக்களை , ஒளவையாரிடம்  ஒப்படைத்தார்.ஒளவையாரும் அம்மக்களைக்  மணம்  முடித்துக்கொடுத்தார்.300 ஊர்களை ஆண்ட பெருமைக்குரியவன் வள்ளல்  பாரி . நிலவளம் , நீர்வளம் மழை வளம்  என எல்லா வளங்களும் சிறந்திருந்தது  பாரியின்  நாடு . கொடுங்குன்றம் , பறம்பு நாடு , பறம்பு மலை , முதுபெருங்குன்றம்   எனப்பல பெயர்களால்  அழைக்கப்பட்டுள்ளது.

7.    பின்வரும் பொருள்களில் ஒன்று  பற்றிக்  கடிதம் எழுதுக 1 * 5 = 5.

1. பத்தாம்  வகுப்புத் தேர்வினில் அதிக மதிப்பெண்கள் பெற்று  வெற்றிபெற வாழ்த்துக்கூறி , குறித்துத்  தோழன் / தோழிக்குக்  கடிதம் எழுதுக.

( அல்லது ) 

2. உங்களது பகுதியில் இயற்கைவளம் காப்பதற்குப்  பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்துதர வேண்டி  மாவட்ட ஆட்சியருக்குக்    கடிதம் வரைக.

( இரு கடிதங்களுக்கும்  உன்முகவரி :  சந்திரன்  / சந்திரா  , கதவு எண் .102, மருது பாண்டியர்  நகர், கோவை சாலை, ,  திருச்சி  - 2. எனக் கொள்க . ) 


பழ. அன்புச்செல்வன்   

தமிழாசிரியன் 

தமிழன் என்று சொல்லடா....!!                                  தலை நிமிர்ந்து நில்லடா..!! 


வாழ்க   வளமுடன் ..!                                   வாழ்க  வையகம் ..!!


ponanbu2022.


Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023