பத்தாம் வகுப்பு - இயல் ஆறு
பத்தாம் வகுப்பு - இயல் ஆறு
அ. நிகழ்கலை.
சிற்றூர் மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடையன நிகழ்கலைகள் .மனமகிழ்ச் தருவதோடு சமுதாயத்தின் ஆவணங்களாகவும், ஊடகமாகவும் , பழமை, எச்சங்களாகவும் நிகழ்கலைகள் திகழ்கின்றன .
வகைகள் .
கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் , ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து, தோற்பாவைக்கூத்து , எனப் பலவகைப்படுகின்றன.
1. காவடியாட்டம்.
கா - என்பதற்குப் பாரம் தாங்கும் கோல் என்று பொருள். இருமுனைகளிலும் சமமான எடையுடைய பொருள்களைக்கட்டி , அத்தண்டினைத் தோளில் சுமந்து ஆடும் ஆட்டமே காவடியாட்டம் ஆகும். அரைவட்டமாக அமையும் காவடியின் குறுக்காக அமையும் தண்டின் இருமுனைகளிலும் சிற்ப வேலைப்பாடு அமைந்த பலகைகளைப் பொருத்துவர். காவடியில் அமைப்பிற்கு ஏற்ப , மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி எனப்பல பெயர்களில் வழங்கப்படுகிறது. காவடியாட்டம் என்பது முருகன் வழிபாட்டோடு நெருங்கிய தொடர்புடையது. இலங்கை , மலேசியா போன்ற நாடுகளிலும் , தமிழர்கள் அதிகமாக வாழும் எல்லா நாடுகளிலும் ஆவடியாட்டம் நிகழ்த்தப்படுகிறது.
2. ஒயிலாட்டம்.
ஒரே நிறமுடைய துணியை முண்டாசுபோலக் கட்டிகொண்டும் , காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம் எனப்படும். ஆண்கள் எதிர் எதிர் வரிசையில் நின்று இசைக்கேற்ப ஆடுகின்றனர். இளைஞர்களும் , முதியவர்களும் இணைந்தும் ஒயிலாட்டத்தை ஆடுவது உண்டு.
3. தப்பாட்டம்.
தப்பு என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற கலையே தப்பாட்டம் ஆகும். ஆண்கள் நிகழ்த்திய இக்கலையில் பெண்களும் பங்கேற்கின்றனர் . தப்பு என்பது வட்டமாக அமைதி தோற்கருவியாகும். பொதுவாக எல்லா விழாக்களிலும் நிகழ்த்தப்படுகின்றது. பழைய இலக்கியங்களிலும் தப்பு ( பறை ) பற்றிய செய்திகள்.
4. தெருக்கூத்து.
கிராமப்புற மக்களுக்காக நிகழ்த்தப்படுவது தெருக்கூத்து ஆகும். கூத்து என்பது இசை மற்றும் உடலசைவுகளோடு தொடர்புடையது. ஒப்பனைகளுடன் திறந்த வெளியில் நிகழ்த்தப்படும் கலையாகும். விவசாய மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தெருக்கூத்தே ஆகும். கூத்தானது ஒரு கதையினை மையமாக வைத்து நிகழ்த்தப்படுவதாகும். இன்றும் நாட்டுப்புறங்களில் வள்ளி திருமணம் , பொன்னர் சங்கர் , பவளக்கொடி, அர்ச்சுனன் தபசு , போன்ற நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தெருக் கூத்துக்கலையே பின்னாளில் நாடகமாக வளர்ச்சி பெற்றது என்பர். இதனை, கேரளமாநிலத்தின் 'கதகளி ' போன்று செவ்வியல் கலையாக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
5. தோற்பாவைக்கூத்து
தோலில் செய்த வெட்டி ஒட்டிய படங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி கதைக்கேற்ப மேலும் , கீழும் பக்க வாட்டிலும்அசைத்துக்காட்டி , உரையாடுதல் , பாடுதல், இசைத்தல், இவற்றோடு இணைத்து நிகழ்த்துவதே தோற்பாவைக்கூத்து எனப்படும். ஓவியம் ,நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல், ஆகியவைகளை இணைத்து பாவைக்கூத்து நிகழ்த்தப்படும். இதில் பாவையின் அசைவும் , ஒளியும் முதன்மை பெறுகின்றன. சங்க இலக்கியங்கள் ,திருக்குறள், திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள் முதலியவற்றில் பாவைக்கூத்து குறித்த செய்திகளைக் காண முடிகிறது.
பாட நூலில் உரைநடைப் பகுதியைப் படித்து பிறகலைகள் பற்றியும் தெளிவாக அறிதல் வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆ .பூத்தொடுத்தல்
1. கவிஞர் உமாமகேஸ்வரியின் கவிதைகள் மற்றும் படைப்புகள் பற்றி எழுது ?
கவிஞர் உமாமகேஸ்வரி அவர்கள் மதுரை மாவட்டத்தில் பிறந்து , தேனீ மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர். கவிதை, கதை, புதினம் , என்று பல தளங்களில் படைப்புகளைத் தந்துள்ளார்.
கலைகள் மனிதவாழ்விற்கு அழகூட்டுபவை . கலைகள் அழகியலை மட்டுமின்றி வாழ்க்கையின் நுட்பங்களையும் அழகாக உணர்த்துவிதை கவிஞர் உமாமகேஸ்வரி அவர்களின் கவிதை மூலமாகக் காண முடிகிறது.
2. பூத்தொடுத்தல் பற்றிக்கவிஞர் உமாமகேஸ்வரி உணர்த்தும் கருத்துக்களை எழுது ..?
'பூத்தொடுத்தல் ' எனும் கவிதை மூலமாகப் பிரபஞ்சத்தையே அழகான பூவாகக் காட்டுகிறார் கவிஞர் உமாமகேஸ்வரி. இறுக்கி முடிந்தால் காம்புகளின் கழுத்து அறுந்துவிடும். இறுக்கம் இன்றி அமைத்தால் பூக்கள் உதிர்ந்துவிடும். வாழ்க்கையை மிகவும் மென்மையாகக் கையாள வேண்டும் என்பதை அழகாக விளக்கியுள்ளார். வாசலில் மரணம் நிற்பதை அறிந்தும் , புன்னகை பூத்த முகத்தோடு மணத்தைப்பரப்பியபடி உள்ளன. பூக்கள். வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்றாலும் வாழும் நொடிகளில் வசந்தங்களை வாரி வழங்குகின்றன பூக்கள். அது போல வாழ்வை அழகாக்கும் முயற்சியில் மனமானது நூலக மாற வேண்டும் என்கிறார் கவிஞர். இல்லையெனில் வாழ்வின் அழகியலை அறிதல் அரிதாகும். உதிரிப்பூக்களைத் தொடுத்து அழகாக்குவதுபோல் , வாழ்வியலை அழகாகத் தொடுத்துப் பழகுங்கள் என்கின்றார் கவிஞர் உமாமகேஸ்வரி.
--------------------------------------------------------------------------------------------------------------------------
3. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
ஆசிரியர் குறிப்பு
முத்துக்குமாரசாமி புள்ளைத்தமிழ் நூல் குமரகுருபரர் இயற்றிய நூலாகும்.இவர் தமிழ் , வடமொழி , இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கந்தர் கலிவெண்பா , மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம் , சகலகலா வள்ளிமலை, நீதிநெறி விளக்கம் , திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூல்களை எழுதியுள்ளார்.
நூற்குறிப்பு
பிள்ளைத்தமிழ் இலக்கியம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். இறைவன் , மன்னன், தலைவர்கள் ஆகியோரைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவதாகும். அவர்களைக் குழந்தையாகப் பாவித்து பத்துப்பருவங்களாகப் பகுத்து நூறு பாடல்களைப்பாடுவர். இது ஆண்பாற்பிள்ளைத்தமிழ் , பெண்பாற்பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.
ஆண்பாற்பிள்ளைத்தமிழ் :
காப்பு, செங்கீரை , தால் , சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை,சிறுதேர் - என்பன ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்குரிய பருவங்களாகும்.
பெண்பாற்பிள்ளைத்தமிழ் :
காப்பு, செங்கீரை , தால் , சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை , ஊசல் - என்பன பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குரிய பருவங்களாகும்.
முதல் ஏழு பருவங்களும் இருபால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்களாகும் .
செங்கீரைப்பருவம்.
செழுமையான செங்கீரையானது காற்றில் அசைந்து ஆடுவதுபோல் குழந்தையின் தலையானது 5 அல்லது 6 மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தில் குழந்தை , தன்னிரு கைகளையும் தரையில் ஊன்றி ,ஒருகாலை மடக்கி, ஒருகாலை நீட்டி தலையினை நிமிர்த்தி , முகத்தினை மெதுவாக அசைத்து ஆடும். இப்பருவமே செங்கீரைப்பருவம் எனப்படுகிறது.
4.கம்பராமாயணம்
1. கம்பர் அல்லது கம்பராமாயணம் பற்றிக் குறிப்பு எழுதுக .
கம்பர் வடமொழிக்கதையான இராமாவதாரத்தை தமிழில் படைத்தார். ஆறு காண்டங்களையும் , 11 ஆயிரம் ஆசிரிய விருத்தப்பாக்களையும் கொண்ட படைப்பாகும். " கம்பன் வீட்டுக்கட்டுத் தறியும் கவி பாடும் " என்பது கம்பரின் புலமையை உணர்த்தும் சொலவடை ஆகும். சோழ நாட்டின் தேரெழுந்தூரைச் சேர்ந்தவர். சடையப்ப வள்ளலின் ஆதரவோடு கம்பராமாயணத்தை படைத்து அளித்தார்.
" விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர்கம்பன் " என்ற புகழினைப்பெற்றவர். ஏரெழுபது , சிலையெழுபது, சடகோபர் அந்தாதி , திருக்கை வழக்கம் போன்ற நூல்களையும் இயற்றிய சிறப்பிற்கு உரியவர் .
2. பலகாண்டம் காட்டும் சரயு நதியின் அழகு யாது..?
3. பலகாண்டம் - நாட்டுப் படலம் உணர்த்தும் மருதநிலத்தின் அழகு பற்றி எழுதுக?
4. பலகாண்டம் - நாட்டுப் படலம் விளக்கும் நாட்டின் பெருமைகள் யாவை..?
5. அயோத்யா காண்டம் - கங்கைப்படலாம் விவரிக்கும் இராமனின் மாநிற மேனியின் அழகினை எழுதுக.?
6. அயோத்யா காண்டம் - கங்கைப்படலாம் காட்டும் வேடன் குகனின் உணர்ச்சிப்பெருக்கை எழுதுக..?
7. யுத்தகாண்டத்தில் கும்பகர்ணனை உலக்கையால் இடித்து எழுப்பும் கட்சி பற்றி எழுதுக.
5.பாய்ச்சல்
6.அகப்பொருள் இலக்கணம்
பழ. அன்புச்செல்வன் நட்புறவு அலுவலர் ( அ .த . மன்றம் )
தமிழாசிரியன்
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu2022.
Comments
Post a Comment