இரண்டாம் பருவம். இயல் 4. வினா - விடைகள்

இரண்டாம் பருவம்

கல்வியாண்டு 2023--2024

இயல்: 4            விடைகள்         பத்தாம் வகுப்பு

கவிதைப்பேழை       பெருமாள் திருமொழி.

குலசேகர ஆழ்வார்          பாசுர எண்: 691.

 

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டம்மா நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே..!

  

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் 1694 பாசுரம் இது.பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திரு மொழியாக அமைந்துள்ளது.பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன.அறிவியலும் ஆன்மீகமும் இணைந்ததே தமிழர் வாழ்வுசங்க இலக்கியங்களில் காணப்படும் அறிவியல் செய்திகளைப்  போலவே பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் செய்திகளைக் காண முடிகிறதுஅதற்கு இப்பாடல் நல்ல சான்றாக அமைந்துள்ளதுஇந்நூல் எட்டாம் நூற்றாண்டில் குலசேகர ஆழ்வாரால் பாடப்பட்டது.

 பாடல் தரும் பொருள்:

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்த நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டடில் எழுந்தருளியிருக்கும் அன்னையே அது போன்று நீ உனது விளையாட்டால் மயங்காத துன்பத்தை எனக்கு தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன் என்று பாடுகிறார் குலசேகர ஆழ்வார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------


செய்யுள் -  பரிபாடல் 

பரிபாடல்  எட்டுத்தொகை நூல்களில் ஓன்று.

பாடலின் ஆசிரியர் கீரந்தையார்  ஆவார்.

இந்நூல் ஓங்கு பரிபாடல் எனும் சிறப்பைப் பெற்றதாகும்.

இது 70 பாடல் களைக்கொண்ட நூலாகும்.

எனினும் நமக்கு 24 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  தமிழ் மக்களின் 

பண்பு, அறிவு, வாழ்வியல் பற்றி விளக்குவதாக  இந்நூல் அமைந்துள்ளது.


எதுவுமே இல்லாத பெருவெளியில் அந்தத் தோற்றத்திற்குக்  காரணமான கருவானது பேரொலியுடன்  தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்ந்த முதல் நிலையது. 

அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து  எழுந்து  பல பருப்பொருள்கள் சிதறும்படியாக பல் ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. பிறகு  நெருப்புப்பந்து போல உருவாகி விளங்கியது அடுத்த ஊழிக்காலம்.

பூமி குளிரும்படியாகத்  தொடர்ந்து  மழைபொழிந்த  ஊழிக்காலமும் கடந்தது. அவ்வாறு பெய்த மழையால் பூமி மழை வெள்ளத்தில்  மிதந்தது மீண்டும் மீண்டும் இவ்வாறு நிகழ்ந்தது. அதன்பின் இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி  நிலைபெறும்படியான ஊழிக்காலம்  உருவானது.

அண்டவெளியில் நாம் காணும் பால்வீதிபோல எண்ணற்ற பால்வீதிகள் துகள்களாகத் தெரியும்  என்கிறார் அமெரிக்க வல்லுநர் எட்வின் ஹப்பிள்.இதனையே 1300 ஆண்டுகளுக்கு முன்பு திருவாசகத்தில், இதே அறிவியல் செய்தியை ,

 " அண்டப் பகுதியின்   உண்டைப்பிறக்கம் 

சிறிய ஆகப்பெரியோன்  தெரியின் .......!   எனும் அடிகள் அண்டவெளியானது தூசுகள் போல நுண்மையாக உள்ளது என்பதை இப்பாடல் அடிகள்  மூலமாக அறிய முடிகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

  உரைநடை               

                    இயல் : 4                           

செயற்கை நுண்ணறிவு.


முன்னுரை - நுண்ணறிவு - மின்னணுப்புரட்சி - செயற்கை நுண்ணறிவின்  தன்மை - தொழில் நுட்ப வரையறை - மெய்நிகர் உதவியாளர் -  முடிவுரை.

                முன்னுரை ;

  •                        உயிரினங்களில் மனிதரை  வேறுபடுத்திக்  காட்டுவது  அறிவாற்றலே  ஆகும்.  அந்தச்  சிந்தனையோடு   இயந்திரத் தொழில்நுட்பமும்  சேர்வதால்  எல்லா வேலைகளும் எளிதாகின்றன.  அத்தகு  சிறப்புமிகு செயற்கை நுண்ணறிவு பற்றி விரிவாகக் காண்போம்.

              நுண்ணறிவு ;  

               நுட்பமான  அறிவாற்றலோடு , தொழில்நுட்பத்தின் துணையோடு  எளிதாகப்  பணிகளைச் செய்யும்படியான நுட்பங்களை  உருவாக்குவதே நுண்ணறிவு ஆகும். 

            மின்னணுப்புரட்சி ;
    •                    1980-களில்  ஏற்பட்ட தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும், இணையப்பயன்பாடும் இன்றைய மின்னணுப்  புரட்சிக்கு   வித்தாகியுள்ளன. ( DIGITAL REVOLUTION ) . இன்றைய உலகை ஆளும் உயர்தொழில்  நுட்பமாக  செயற்கை நுண்ணறிவு வளர்ந்துள்ளது. 

    •         ஒரு அறையில் நுழையும் ஒருவரைத்  தானாகவே  கண்போலச்   சுழன்று  கண்காணிப்பது , போக்குவரத்து நெரிசலில்   சிக்காமல் செல்ல  வழிகாட்டுவது , திறன் பேசியோ , கணினியோ  நம்  தேவைக்கு ஏற்ப  அகண்ட தரவுகளில் உள்ள  கோடிக்கணக்கான  சொற்களுடன் ஒப்பிட்டுச் சரியான பதிலை (1/4) கால்  நொடிக்கும் குறைவான நேரத்தில்  பணிகளைச் செயற்கை நுண்ணறிவு மிக எளிதாகச்  செய்து முடித்து விடுகிறது.     
  • மனிதர்களுடன்  சதுரங்கம் விளையாடுவது, மருத்துவம், சமையல், படம் வரைதல், இதழியல்  போன்ற துறைகளில் குறிப்பிட்டத்தக்க  மாற்றங்களைச்  செய்து  வருகிறது.

  • 2016-ல்  ஐபிம்  நிறுவனத்தின் செயற்கை  நுண்ணறிவுக்  கணினியானது  சில   நிமிடங்களில்  இரண்டு  கோடிக்கும்  அதிகமான   தரவுகளை அலசி  , நோயாளி  ஒருவரின் புற்றுநோயைக்  கண்டுபிடிக்கும்  பணியைச் செய்து முடித்துவிடுகிறது.    
  • சீனாவில் 50-க்கும்  மேற்பட்ட  மருத்துவமனைகள்  இயந்திர  மனிதர்களை  உருவாக்கி , மருத்துவ மனைகளில்   பணியமர்த்தி  உள்ளது. 
  •  தற்போது நம்மை ஆள்வது மென்பொருள் ( SOFTWEAR ),     அடுத்து  நம்மையாளப்போவது செயற்கை நுண்ணறிவு மட்டுமே ஆகும். (  ARTFICIAL INDELLIGENCE ).                              

  • செயற்கை நுண்ணறிவின்  தன்மை;
  • சமூக  ஊடகங்கள் வழியாகவும் , மின்னணுச் சந்தை மூலமாகவும் , செயற்கை நுண்ணறிவானது  நம்மை வந்து சேரத்துவங்கியுள்ளது.  இணைய  வலைத்தளங்களில்  நீங்கள்  தேடும்பொருளை  வரையறை செய்து , வகைப்படுத்தி  வழங்கி  வருவதும் செயற்கை நுண்ணறிவே ஆகும்.  

தொழில் நுட்ப வரையறை;

               செயற்கை நுண்ணறிவு  என்பது கணினிச்  செயல்திட்ட  வரைவே  ( project ) எனலாம். மனிதரைப் போலவே  சூழலுக்கேற்ப   தானாகவே  முடிவெடுத்துச் செயல்படும்  தன்மைகொண்ட  நுண்பொருளை  
ஆராய்ச்சியாளர் வடிவமைக்கிறார் . அவ்வாறு, கற்றுணர்திறன் 
கொண்ட இயந்திரமானது ,  சூழலுக்கு ஏற்பச்  செயல்படும்  உணர்திறன் கொண்டதாக  விளங்கும். இதுபோன்ற  இயந்திரங்களுக்கு  ஓய்வு  என்பது தேவையில்லை.

செயற்கை நுண்ணறிவுடைய இயந்திரங்களால் பார்க்கவும், கேட்கவும், புரிந்து கொள்ளவும் முடியும். மனிதர்களால் செய்ய இயலாத / செய்ய இயலும் அனைத்தையும் செய்யக்கூடியதாக செயற்கை நுண்ணறிவு   அமைந்திருக்கும்.


மெய்நிகர் உதவியாளர்;
                                
                                    திறன்பேசிகளில் இயங்கும்  மென்பொருள்போன்றதே இது. மனித உதவியாளர் போலவே ,   எல்லாவிதமான உதவிகளையும் செய்யும் வகையில் இவை உருவாக்கப்படுகின்றன. ஏவும் வேலைகளைச் செய்வது, உறவினர்களை அறிந்து வைத்துக்கொள்ளுதல் ,நோயாளிகளின் தேவையறிந்து  உதவுதல்  போன்ற பல வேலைகளைச்  செய்யும் வகையிலும்   வடிவமைக்கலாம். 

                                                 திறன்பேசிகளை  முகத்தின் அடையாளத்தை  வைத்துத் திறப்பது , புகைப்படங்களை மெருகூட்டுவது ,  காணொளிகளைத் தொகுத்து வழங்குதல்  ( VEDIO EDITING ) , போன்ற பணிகளைச் செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவு  பயன்படுகிறது. 


              பாரத் ஸ்டேட் வாங்கி  ஒரு வினாடிக்கு 10,000 வாடிக்கையாளர்களுடன்  உரையாடும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்கிப் பயன்படுத்தி  வருகிறது. பிற இந்திய வங்கிகளும்  இவ்வகைத் தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்தத்  தயாராகி வருகின்றன.


முடிவுரை 

       எதிர்வரும் காலங்களில்  வீடு, விடுதி ,  வங்கி , கல்வி, மருத்துவம் , என எல்லாத்  துறைகளிலும்  செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு என்பது தவிர்க்க இயலாததாக  மாறிவிடும். செயற்கை நுண்ணறிவை அளவோடு பயன்படுத்தி , வளமோடு வாழ்வோமாக. 
                                                                         இயல் 4.   வினாக்கள் 

1. இருதிணையை விளக்குக.

திணை  என்பதற்கு  ஒழுக்கம் என்பது பொருளாகும் . திணைகள் உயர்திணை,  அஃறிணை  என இரண்டு வகைப்படும். 

உயர்ந்த  ஒழுக்கமுடைய  ஆறறிவுடையோரை   உயர்திணை என்றனர்.  

ஆண் , பெண், மக்கள் , தேவர் , தெய்வம் .

உயர்ந்த  ஒழுக்கம்  இல்லாத  அதாவது ,  ஓரறிவு முதல் ஐந்தறிவு  வரையுள்ள  அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற   அனைத்தையும்   அஃறிணை என்றனர். 

பறவை, விலங்கு , புத்தகம் , எழுதுகோல் .


2. பால் என்றால் என்ன.? வகைகளை விளக்குக.

பால் என்பதற்கு பகுப்பு அல்லது பிரிவு என்பது பொருளாகும். 

பால் ஐந்து வகைப்படும்.

உயர்திணைப்  பால்கள் .3

1.ஆண்பால் -------- கந்தன், இராமன். 

2.பெண்பால்------ வள்ளி  , சீதை. 

3.பலர்பால்........அடியார்கள் , மக்கள், தேவர்கள்.

அஃறிணைப்பால்கள் --2

1.ஒன்றன்பால்..... பசு, புத்தகம்.  

2.பலவின்பால்... பசுக்கள் , புத்தகங்கள். 


3.மூவிடங்களை  உதாணரத்துடன்  விளக்குக.

ஒருவரது  நிலையை  ( இருப்பிடத்தை  ) விளக்குவது இடம் எனப்படும்.

1.தன்மை 

தன்மை    ---   நான்  வந்தேன்.  நாங்கள் வந்தோம். 

தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும்  குறிப்பது தன்மை எனப்படும்.

அது , ஒருமை ,  பன்மை  மற்றும் தன்மை வினை சார்ந்தும் அமையும்.

 2.முன்னிலை. 

முன்னிலை ---- நீ வந்தாய்.     நீங்கள் வந்தீர்கள்.

தனக்கு முன்னால் இருப்பவரைச் சுட்டுவது முன்னிலை எனப்படும்.

இது , ஒருமை ,  பன்மை  மற்றும் முன்னிலை வினை சார்ந்தும் அமையும்.

3.படர்க்கை.

படர்க்கை -- அவன் வந்தான். அவர்கள் வந்தார்கள். 

தன்மையும் இல்லாமல், முன்னிலையும் இல்லாமல்  சேய்மையில்  அதாவது தொலைவில் இருப்போரைச் சுட்டுவது படர்க்கை எனப்படும். 

இது , ஒருமை ,  பன்மை  மற்றும் படர்க்கை  வினை சார்ந்தும் அமையும்.


4.வழு என்றால் என்ன ?

இலக்கண மரபுப்படி  குற்றமுடையவை  வழு எனப்படும்.


வள்ளி  வந்தான் .

வளவன் வந்தாள்.


5.வழாநிலை என்றால்  என்ன .?

இலக்கண  மரபுப்படி பிழையின்றி அமைவன, வாழா நிலை எனப்படும்.

வள்ளி  வந்தாள்.

வளவன் வந்தான் .

6.வழுவமைதி என்றால் என்ன.?

இலக்கண மரபுப்படி பிழை எனினும் ,  பொருள்தரு நிலையால்  ஏற்றுக்கொள்ளப்படுவது  வழுவமைதி  எனப்படும்.

திணை  வழுவமைதி 

1. பசுவினை , "  என் அம்மை வந்தாள் " எனக்கூறல் .

காலவழுவமைதி  

2. "  கந்தா வா.. ! " என்று அழைக்கும்போது ,  " இதோ வந்துவிட்டேன்" என்று பதில்  கூறல். 


7. வழுவமைதியாக ஏற்க இயலாதன எவை ..?

வினா ,  விடை என்பனவற்றை  வழுவமைதியாக ஏற்க இயலாதனவாகும்.


மாணவர்களுக்குப்  பாடப்புத்தகம் முழுமையான தகவல்களைத் தருவதாக அமையும்.

உதாரணங்களையும்  அதன் விளக்கங்களையும் நன்றாகக் கற்று உணரவும் . 


1. தன்மைப்பெயர்:------------------------------

2.தன்மைவினை :-------------------------------

3.முன்னிலைப்பெயர்: ----------------------

4.முன்னிலைவினை: -----------------------

5. படர்க்கைப்பெயர்: ------------------------

6.படர்க்கைவினை :-----------------------------

7. திணை வழுவமைதி :------------------

8. பால் வழுவமைதி :----------------------

9. இட  வழுவமைதி :--------------------

10.கால வழுவமைதி :-------------------

11. மரபு வழுவமைதி: ----------------

12.உயர்திணை : -----------------

13. அஃறிணை : ---------------------------

14. உயர்திணைப்பால்கள் :----------------------

15.அஃறிணைப்பால்கள் :------------------------


நிரப்புக 

1, ஆறறிவு உடைய மக்களை ------------------- என்று வழங்குவர் .

2. ஆறறிவு அற்ற எல்லா உயிர்களையும் --------------- என வழங்குவர் .

3. திணை  என்பதற்கு ----------- என்பது பொருளாகும்.

4. பால் என்பதற்கு --------- அல்லது ------- என்பது பொருளாகும்.

5. பால் ---------------- வகைப்படும்.

6. திணை  --------- வகைப்படும்.

7. இடம் --------- வகைப்படும். 

8. உயர்திணைப் பால்கள் ------------,------------,------------ என மூவகைப்படும்.

9.அஃறிணைப்பால்கள் -----------, -------- என இரு வகைப்படும்.

10. இடமானது  --------,------------,--------- என மூவகைப்படும்.

11.இலக்கணப்பிழையுடன் அமையும் தொடர்கள் ------------ எனப்படும்.

12.இலக்கணப்பிழையில்லாதன ---------------- எனப்படும். 

13. இலக்கண முறைப்படி பிழையே எனினும் இலக்கண ஆசிரியர்களால்  ஏதேனும் ஒரு  காரணம்  கருதி , பிழையன்று என்று ஏற்றுக்கொள்ளப்படுவது ------------  எனப்படும்.

14. வழுவமைதி ----- வகைப்படும்.

           


பழ. அன்புச்செல்வன்    (  நட்புறவு  அலுவலர் / அறிவியல் தமிழ்  மன்றம் ) 

தமிழாசிரியன் 

தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 


வாழ்க   வளமுடன் ..!                                   வாழ்க  வையகம் ..!!


APL2023.



                    


Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023