பாரதிக்குப் பாவணக்கம்

 

பாரதிக்குப்  பா வணக்கம் 




1882ல்  டிசம்பர்  11ல்  உதயமான ஆதவன்; 

அகில உலகையும் கவியால் ஆட்டிப்படைத்தவன்; 

எட்டையபுரத்து  எரிமலைபோல்    ஏறாய்த்  தோன்றியவன்; 

கோட்டை ஆண்ட பறங்கியர்   கொட்டம்  அடக்கியவன்;

 பாட்டாலே புத்திசொன்ன பாசமிகு பாரதக்கவிஞன்;

எத்தர்களின் கைகளைப்  பாட்டினால் பூட்டிய  பாவலன் ;

ஆழிதரு மாமழைபோல் கவிதைத்தேன் பொழிந்தவன் ;

 கண்ணன் மனதில் கனிந்த கற்கண்டாய்  நின்றவன் ;

கயவர்கூட்டைத்தைக் கூட்டோடு கருவறுக்கத் துணிந்தவன்;

வறுமையில் வாடினாலும் வளமான கருத்தில் நெருப்பானவன் ;

தன்னை வருத்தித் தடைதாண்டி தாயகம் காக்கத்துணிந்தவன்;

கள்ளருக்கு கருமருந்து ; கற்போருக்கு கனிவிருந்து  ;

மனங்களில் வாழும் மகாகவிஞன்   மாசற்ற கவிஞன் ;

மண்ணின் மைந்தனனுக்கு  மாங்கனிந்த நன்றிகள்;

எங்கள் எண்ணத்தில் வாழ்பவனுக்கு  வணக்கங்கள் ;

பாமாலை தந்தவனுக்கு நெஞ்சமினிக்கப்   பூமாலைகள் ;


பாரதியே நீ அருள்க பாரதம் மென்மேலும் செழித்தோங்க 

உன்னெண்ணம்  கேட்க நாங்கள் .. ஆவலுடன் 

உள்ளம் திறந்து  நீ உணர்ந்ததை  சொல்லுக  மகாகவியே ..!



பழ. அன்புச்செல்வன் 

தமிழாசிரியன் 

தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 


வாழ்க   வளமுடன் ..!  வாழ்க  வையகம் ..!!


ponanbu2021.






 



 




Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )