வாழ்க என் இனிய பாரதம்...!
வாழ்க என் இனிய பாரதம்...!
மஹாகவி சி. சுப்ரமண்யபாரதியார்
139 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
வளமான பாரதம் காணத் துடித்தேன் - இன்று
வலிமைமிகு பாரதம் கண்டு மகிழ்கிறேன்..
எத்தனை எத்தனை மாற்றங்கள் என்தேசத்தில்
அத்தனையும் எழில்மிகு ஏற்றங்களே ....வாழ்க பாரதம் .
பட்டிதொட்டி எங்கும் பாட்டுக்கோர் புலவனாய்
பாட்டினில் சொன்னது மக்கள் நெஞ்சில் இன்றும்
பட்டொளிவீசி தாயின்மணிக்கொடி வானில் பறக்கிறது
கெட்ட பறங்கியர் பறந்தனர் நாடுவிட்டே ....வாழ்க பாரதம் .
நெற்றியில் திலகமிட்டு நீண்டதொரு மீசைவைத்து
சுற்றினேன் சூரியனாய் சுழலும் பம்பரமாய்
பற்றெனில் அமுதத் தமிழ் மீதே என்பேன்
கற்றேன் சாதி சதியென்று புகன்றேன் ...வாழ்க பாரதம்.
உள்ளத்து உணர்வுகளை ஒளிக்காது அளித்தேன்
உயர்வு பல கண்டுள்ளீர் உள்ளம் மகிழ்க்கிறது
ஊக்கம் கொண்டே ஆக்கம் காண்கின்றீர் நாளும்
பாவினைப் படிக்கின்றீர் பக்தியுடன் ...வாழ்க பாரதம் .
பன்மொழி அறிந்தே பாட்டிசைத்தேன் இசை கூட்டுவித்தேன்
அன்னை மொழியின் அழகுணர்த்தேன்
சொன்னது போலவே பன்மொழிப்புலமை ஓங்கிடுதே
நன்மைகள் நாளும் வளர்கிறதே...வாழ்க பாரதம் .
சிற்சில தீமைகள் மறைந்து விட்டால்
பற்பல நன்மைகள் பெருகிவிடும்
நாட்டம் உள்ளவர் கூடிவிட்டால்
ஓட்டம் எடுப்பர் கயவரெல்லாம் ...வாழ்க பாரதம் .
என்வண்ணக்கனவும் என்கவியும் எப்போதும் இருக்கும் உம்மிடமே
ஏந்தி நடப்பீர் இலக்குடனே.. இருள் விலகும் நேரம் தூரமில்லை...
வாழ்க என் இனிய பாரதம்.!
வளர்க என் இனிய பாரததேசம்.....! என்றென்றுமே ..!
பழ. அன்புச்செல்வன்
தமிழாசிரியன்
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu2021.
Comments
Post a Comment