மரங்கள்
மரங்கள் நமது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அரணாக உள்ளன. மரங்கள்தான் மண் வளத்தைப் பேணிப்பாதுகாக்கின்றன. மரங்கள் பகற்பொழுதில் உயிர்க்காற்றை நமக்குத் தருகின்றன. புவியின் வெப்பத்தைத் தணிக்க உதவுகின்றன. ஆனால், மனிதர் சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அதிலிருந்து காகிதம், இரப்பர் , கோந்து, மேஜை நாற்காலி போன்றவற்றைச் செய்து விற்கின்றனர். மரங்கள் அழிவதால் மனிதகுளம் பெரும்சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்தியாவில் 60% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால், அது நாளும் குறைந்து வருக்கின்றது. அசோகா சக்கரவர்த்தி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மரங்களின் பெருமையை உணர்ந்து, சாலையின் இரு மருங்கிலும் எண்ணற்ற மரங்களை நட்டார். எனவே, மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அரணாக உள்ளது. மரங்கள் மருத்துவக்குணம் வாய்ந்தவை.
Comments
Post a Comment